sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வேலை வாய்ப்பும், திறன் வளர்ப்பும் : தொழில் புரிவோர் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்

/

வேலை வாய்ப்பும், திறன் வளர்ப்பும் : தொழில் புரிவோர் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்

வேலை வாய்ப்பும், திறன் வளர்ப்பும் : தொழில் புரிவோர் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்

வேலை வாய்ப்பும், திறன் வளர்ப்பும் : தொழில் புரிவோர் கவனிக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்


ADDED : செப் 20, 2024 06:27 AM

Google News

ADDED : செப் 20, 2024 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு 17 சதவீதமாக இருக்கிறது. இதை, தொடர்ந்து தக்கவைக்க வேண்டும் என்றால், சீர்திருத்த பாதையில் இந்தியா தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

டெமொகிராபிக் டிவிடண்ட்


புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துதல் போன்றவற்றுக்கு, பல முனைகளில் இருந்து சீர்திருத்தங்கள் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது. இப்போதிருந்து 2030க்குள் குறைந்தது 6 கோடி முதல் 14 கோடி புதிய வேலைவாய்ப்புகளைஉருவாக்க வேண்டும்' என்கிறார்கள் நிபுணர்கள்.

காரணம், இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ளது, அதில் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் 25 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களைக்கொண்டு, பல்வேறு துறைகளுக்கு திறமையான, உற்பத்தித்திறன் கொண்ட பணியாளர்களை வழங்க முடியும்.

'விஷன் இந்தியா 2047'


ஒரு புறம் இதுவே மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத சிறப்பாகவும் உள்ளது. இதை டெமொகிராபிக் டிவிடண்ட் என்று சொல்லுவார்கள். இந்த பலத்தை கவனத்தில் வைத்து , 'விஷன் இந்தியா 2047' என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாடு சுதந்திரமடைந்து, 100 ஆண்டுகள் நிறைவடைவதற்குள், அதாவது, அடுத்த 25 ஆண்டுகளுக்குள், 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் கொண்ட வளர்ந்த நாடாக, இந்தியாவை மாற்றுவதே 'விஷன் இந்தியா 2047'ன் இலக்கு.

நிதிஆயோக் அமைப்பின் உயர் அதிகாரிகள் குழுவினர், உலக வங்கியின் தலைவர், ஆப்பிள் நிறுவன தலைவர், பெரும் தொழிலதிபர்கள், பல்துறை நிபுணர்கள் ஆகியோர் கிட்டதட்ட 2 ஆண்டுகளுக்கும்மேல் மேற்கொண்ட ஆலோசனைகள் அடிப்படையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய, 2024- - 25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்காக ஐந்து திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளுடன் கூடிய 2 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி மற்றும் பிற வாய்ப்புகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பட்ஜெட்டில் அதிகம் பேசப்படாத ஆனால் அதிக ஊக்கம் அளிக்கும் மூன்று திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை தொழில் அமைப்புக்கள் குறிப்பாக தமிழ் நாட்டு நிறுவனங்கள் தவறாமல் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

முதலாவது, மத்திய அரசு முதல்முறை தொழிலாளர்களுக்கு, அந்த தொழிலாளரின் ஒரு மாத சம்பளத்தை, அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி விடும். இது மூன்று தவணைகளாக மத்திய அரசால் நேரடியாக கொடுக்கப்படும்.

2.10 கோடி இளைஞர்கள்


இந்த தொகை அதிகபட்சம் 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குள் சம்பளம் வாங்குவோர் இதில் பயனடையலாம். இவர்கள் 'பி.எப்.,' திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் 2.10 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள். இது பணியில் சேரும் இளைஞர்களையும், தொழில்முனைவோரையும் ஊக்குவிக்கும்.

இரண்டாவது, உற்பத்தி துறையில் புதிதாக கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில் முதலீட்டாளர்களுக்கும், முதல்முறை தொழிலாளர்களுக்கும் உதவும் விதமாக, முதல் இரண்டு ஆண்டுகளுக்கான 'இ.பி.எப்.,' சந்தா தொகை, தொழில் நிறுவனம் செலுத்த வேண்டிய சந்தா தொகையில் மாதம் 3000 ரூபாய் வரை மத்திய அரசு செலுத்தும். இந்த திட்டத்தில் 30 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.

மூன்றாவதாக, தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கான நிதி உதவிகள் மற்றும் புது பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்த அரசு நிதிஒதுக்கி உள்ளது.

இது நிறுவனங்களுக்கு திறமையான பணியாளர்களை வழங்கி, பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் வருமானம் அதிகரிக்க உதவும். ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்கள் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள்.

பயிற்சிப் படி


இதற்காக நாடு முழுவதும் ஆயிரம் 'ஐ.ஐ.டி.,'க் கள் மேம்படுத்தப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில் 500 பெரிய நிறுவனங்களில் ஒருகோடி இளைஞர்களுக்கு 12 மாத அனுபவ பயிற்சி வழங்குவதாக இந்த திட்டம் இருக்கும்.

இந்த இளைஞர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.6 ஆயிரம் என்பதுடன் மாதம் தோறும் அனுபவ பயிற்சிப் படியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இந்த நிறுவனங்கள் பயிற்சிக்கான செலவு ஏற்பதுடன் அனுபவ பயிற்சிக்கான செலவில் 10 சதவீதத்தை கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து செலவிடும்.

கடன் வசதிகள்


திறன் கடன்களைப் பொறுத்தவரை, அரசால் ஊக்குவிக்கப்பட்ட நிதியிலிருந்து உத்தரவாதத்துடன் ரூ.7.5 லட்சம் வரை கடன்களை எளிதாக்கும் வகையில் மாதிரி திறன் கடன் திட்டம் திருத்தப்படும். இந்த நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் 25 ஆயிரம் மாணவர்களுக்கு பலன் அளிக்க வாய்ப்புஉள்ளது.

தொழிலாளர் எண்ணிக்கையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க, தொழில் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியுடன் பெண்களுக்கான தங்கும் விடுதிகள், குழந்தைகள் பராமரிப்பு மையங்களுடன் தொடங்கும் திட்டங்களும் உள்ளன.

இவ்வாறு திறன் பயிற்சி, புதிய வேலைவாய்ப்பு உருவாக்குதல், புதுமுக தொழிலாளர்கள், தொழில்முனைவோருக்கு சலுகைகள் அறிவித்தல் போன்றவை மத்திய பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருந்தன.

தொய்வு


அதன் அடிப்படையாக கொண்டு, உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா மாற முடியும். அதற்கு, எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், மருந்துகள், பாதுகாப்பு போன்ற துறைகள் கைகொடுக்கும். நாட்டில் சமீபகாலமாக, ஒரு புறம், வேலையில்லா திண்டாட்டம். இன்னொரு புறம், வேலைக்குத் தகுந்த ஆட்கள் இல்லை என்ற செய்திகள் பரவலாக அறியப்படுகிறது. அப்படியென்றால், நம் நாட்டில், வேலைக்கான ஆட்களை தயார்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

கல்லுாரியில் படித்து முடித்தவர்கள், மறுநாளே வேலையில் சேர முடியாது. கோயமுத்தூர் உட்பட பல்வேறு நகரங்களில் உள்ள சில கல்லூரிகளில் படிப்புடன் தொழிற்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அப்படி படித்தவர்களுக்கு வேண்டுமானால் உடனே வேலை கிடைக்கலாம்.

ஆனால், நாடு முழுக்க, வேலைதேடும் இளைஞர்களுக்கு, தொழிற்சாலைகளிலேயே அனுபவ ரீதியான தொழிற்பயிற்சியை தர வேண்டும். அதற்கான முயற்சியைதான் அரசு தொடங்க இருக்கிறது.

இப்படி தொழிற்பயிற்சி (அப்ரன்டீஸ்) பெறுபவர்களுக்கு, அவர்கள் பணியில் சேரும் காலம் வரை, குறிப்பிட்ட அளவு உதவித்தொகை கொடுக்கலாம்.

அதற்கு 'சி.எஸ்.ஆர்.'நிதியை பயன்படுத்தலாம். அதேபோல, தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் வேலை அளிக்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உதவித்தொகை


உயர்கல்வி படிப்பவர்களுக்கும், படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கும் தொழிற்பயிற்சி திட்டத்தை நாடு முழுவதும் கட்டாயமாக்க வேண்டும்.

ஒருவருக்கு மீன் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும். அதுபோல, தொடர்ந்து உதவித்தொகை வழங்கி வருவதைவிட, வேலைக்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு, வேலைக்கு ஏற்ப தொழிற் பயிற்சியுடன், உதவித்தொகை தருவது பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதுடன், சாமனியனின் பெருமிதத்தையும் நம்பிக்கையையும் அதிகரிக்கும்

ஆடிட்டர், ஜி.கார்த்திகேயன்.






      Dinamalar
      Follow us