தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/மத அடிப்படையில் நடந்த பொறியாளர் மாற்றம்; பொதுப்பணி துறையில் புகைச்சல்

மத அடிப்படையில் நடந்த பொறியாளர் மாற்றம்; பொதுப்பணி துறையில் புகைச்சல்

மத அடிப்படையில் நடந்த பொறியாளர் மாற்றம்; பொதுப்பணி துறையில் புகைச்சல்

12


ADDED : அக் 14, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

12

ADDED : அக் 14, 2026 05:30 AM


12
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: பொதுப்பணி துறை பொறியாளர்கள் மாற்றத்தில், மதம் சார்ந்த தலையீடு இருப்பதாக, புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

தமிழகத்தில், த.வெ.க., கூட்டணி ஆட்சி அமைந்த பின், பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உத்தரவில், கடந்த ஜூலை, 16ம் தேதி பொறியாளர்கள், 23 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அதில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பு பொறியாளராக இருந்த பரிமளா, அறநிலைய துறைக்கு அயல் பணியாக மாற்றப்பட்டார். அதேபோல, பொதுப்பணி துறை பாரம்பரிய கட்டடங்கள் பிரிவின் கண்காணிப்பு பொறியாளர் ஆல்வின் ஞானசேகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு அயல் பணியாக மாற்றப்பட்டார்.

இந்நிலையில், மூன்று மாதங்களில், இந்த இரு கண்காணிப்பு பொறியாளர்களின் பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டு, பொதுப்பணி துறைக்கே வரவழைக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இதுகுறித்து, பொதுப்பணி துறை வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது அயல்பணியில் இருந்து, பொதுப்பணி துறைக்கு மாற்றப்பட்ட இரு கண்காணிப்பு பொறியாளர்களும், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள். ஹிந்து சமய அறநிலைய துறையின் சட்ட விதிகளின்படி, வேறு மதங்களை சேர்ந்தவர்கள் துறைக்குள் வரும் போது, ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

ஆனால், அவ்வாறு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியாது என்று கூறி, பரிமளா மூன்று மாதமாக மறுத்து வந்துள்ளார். இதனால், பிரச்னை எதுவும் வந்து விடக்கூடாது என, அவரை மீண்டும் பொதுப்பணி துறைக்கே மாற்றியுள்ளனர். இவரின் மாற்றத்துக்காக, பாலமுருகன் என்பவர் வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோல, ஆல்வின் ஞானசேகர், தன்னை வேறு இடத்துக்கு மாற்றியதை விரும்பவில்லை. எனவே, கிறிஸ்துவ மத போதகர்கள் மூலமாக பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அழுத்தம் கொடுத்து, மீண்டும் துறைக்கே திரும்பி உள்ளார். குறிப்பிட்ட சில மதத்தை சேர்ந்தவர்களுக்காக, முன்னர் போடப்பட்ட உத்தரவை பொதுப்பணி துறை ரத்து செய்திருப்பது, இதுவே முதல்முறை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு நிர்வாகத்துக்குள் மத ரீதியான பிளவு


இதுகுறித்து, ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் கூறியதாவது: ஹிந்து மதம் சார்ந்த பெயர்களை வைத்துக் கொண்டு, வேறு மத சம்பிரதாயங்களை பின்பற்றும் பல அதிகாரிகள் இருக்கின்றனர். ஹிந்து சமய அறநிலைய துறைக்குள், வேற்று மதத்தை பின்பற்றும் அதிகாரிகள் வரும் போது, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என, நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது.
அப்படி இருக்கும் போது, அரசு விதியை பின்பற்ற மாட்டேன் என, மூன்று மாதமாக பரிமளா பிடிவாதமாக இருந்திருக்கிறார். அரசு விதிகளை விட, மத விதிகள் தான் அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. அவர் எப்படி எல்லாருக்கும் பொதுவாக செயல்படுவார்?
அதேபோல், ஆல்வின் ஞானசேகரும் மத ரீதியான அழுத்தம் கொடுத்து, அரசையே பணிய வைத்திருகிறார். இதுபோன்ற கிறிஸ்துவ மத எண்ணம் கொண்டவர்களால் தான், அதிகாரிகளுக்குள் மத பிளவு ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us