தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/முழுக்க முழுக்க திட்டமிட்ட ஊழல்: எழுத்தாளர்கள், பதிப்பகத்தார் ஆவேசம்

முழுக்க முழுக்க திட்டமிட்ட ஊழல்: எழுத்தாளர்கள், பதிப்பகத்தார் ஆவேசம்

முழுக்க முழுக்க திட்டமிட்ட ஊழல்: எழுத்தாளர்கள், பதிப்பகத்தார் ஆவேசம்

17


ADDED : நவ 08, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

17

ADDED : நவ 08, 2026 04:08 AM


17
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நுால்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என எழுத்தாளர்கள், பதிப்பகத்தினர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

மரபின் மைந்தன் முத்தையா:


நுால்களின் கொள்முதலில் இன்னும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதையே இந்த முறைகேடு காட்டுகிறது. என் கணிப்பின்படி ஒவ்வொரு பிரதி கேட்டுள்ளனர். இதில், ஒரே நிறுவனத்தின் பெயரில், 1,500 தனித்தனி பிரதிகளாக உருவாக்கியிருக்க வாய்ப்புள்ளது. இது முழுக்க முழுக்க திட்டமிட்ட ஊழல் போல் தெரிகிறது.

எழுத்தாளர் வேணுகோபால்:


இந்த தவறு தி.மு.க., பக்கமா அல்லது த.வெ.க., பக்கமா என்று தெரியவில்லை. ஆனால், அவசர அவசரமாக தவறு செய்துள்ளது மட்டும் தெரிகிறது. பெயரளவுக்கு 'கமிட்டி' அமைத்துவிட்டு அவர்கள் தரும் புத்தகங்களின் பரிந்துரையை பொருட்படுத்தாமல், குழுவில் இடம் பெறுபவர்கள் இஷ்டத்துக்கு புத்தகம் கொள்முதல் செய்துவிடுகின்றனர்.

நல்ல புத்தகங்கள் என்பது மாணவர்கள், ஆய்வு, பண்பாட்டு மானுடவியல் என அறிவுசார்ந்த தேவைகளுக்காக தேர்வு செய்திருக்க வேண்டும். இந்த புத்தகங்களை ஆய்வறிஞர்கள் எழுதியிருக்க வாய்ப்பு குறைவு. பொய்யான பதிப்பகம் பெயரில் அவசரமாக செயற்கை நுண்ணறிவு வாயிலாக, பழைய புத்தகங்களை கொண்டு அச்சடித்து இருக்கலாம்.

தமிழகத்தில் 20, 50 ஆண்டுகள் செயல்படும் நல்ல பதிப்பகங்கள் உள்ளன. அவர்களிடம் புத்தகங்கள் கொள்முதல் செய்வதில்லை. மேலும், வாசகர்கள், எழுத்தாளர்களுக்கு நல்ல புத்தகங்கள் குறித்து தெரியும். ஆனால், அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பணம் பார்க்கும் எண்ணத்துடன் செயல்படும் பதிப்பகங்களால் அபத்தம் தான் ஏற்படும். தற்போது, பரபரப்பாக பேசுவதை பார்க்கும் போது, 80 சதவீதம் திருட்டுத்தனம் புகுந்துள்ளது தெரிகிறது. இதுபோன்ற புத்தகங்களை குழந்தைகள் படிக்கும்போது மோசடியான குழந்தைகள் உருவாகும்.

விஜயா பதிப்பகம் மேலாளர் சிதம்பரம்:


புத்தகங்கள் கொள்முதல் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். வரும் காலங்களில் வாசகர்களின் தேவை அறிந்து புத்தகங்கள் வாங்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளை வைத்து புத்தகம் கொள்முதல் பணிகளை செய்ய வேண்டும். ஏனெனில் இது கல்வி சம்பந்தப்பட்டது. தவறான தகவல்களால் வரலாறு பாதிக்கப்படும். இதை படிக்கும் மாணவர்கள் தவறான வழிநடத்தலுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.

எழுத்தாளர் ராஜேஷ்குமார்:


ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் எதற்காக? என்ன விலையில் பெறப்பட்டது? அதன் தரம் யாரால் எந்த அளவுகோலில் உறுதி செய்யப்பட்டது? தற்போது தேவையானது இந்த மூன்று கேள்விகளுக்கும் ஆவணங்களோடு கூடிய வெளிப்படையான பதில்கள். அவை கிடைத்து விட்டால் அது ஊழலுக்கான முற்றுப்புள்ளி மட்டுமல்ல. வருங்கால பிள்ளைகளுக்கு நாம் கற்றுத்தரும் நேர்மைக்கான பாடமும் ஆகும். அறிவை எப்படி பாதுகாக்கிறோம் என்கிற அறம் சார்ந்த பிரச்னை இது. வரிப்பணத்தில் வாங்கப்படும் அறிவு, கண்ணாடி போல தெளிவாக இருக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us