sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பஸ் கட்டணம் எவ்வளவு உயர்த்தலாம்? மக்களிடமே கருத்து கேட்கிறது அரசு

/

பஸ் கட்டணம் எவ்வளவு உயர்த்தலாம்? மக்களிடமே கருத்து கேட்கிறது அரசு

பஸ் கட்டணம் எவ்வளவு உயர்த்தலாம்? மக்களிடமே கருத்து கேட்கிறது அரசு

பஸ் கட்டணம் எவ்வளவு உயர்த்தலாம்? மக்களிடமே கருத்து கேட்கிறது அரசு

30


UPDATED : மே 30, 2025 03:57 AM

ADDED : மே 30, 2025 02:24 AM

Google News

UPDATED : மே 30, 2025 03:57 AM ADDED : மே 30, 2025 02:24 AM

30


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு குறித்து, பொது மக்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளிடம், போக்குவரத்து துறை கருத்து கேட்கிறது.

எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 1.85 கோடி பேர் பயணம் செய்கின்றனர். பஸ்களுக்கு தினமும் 17 லட்சம் லிட்டர் டீசல் போடப்படுகிறது. டீசல் விலை, சுங்க சாவடி கட்டணம் உயர்வால் போக்குவரத்து கழகங்களுக்கு செலவு அதிகரித்துள்ளது.

தினசரி வருவாய் 39 கோடி ரூபாய்; செலவு 58 கோடி ரூபாய்; பற்றாக்குறை 19 கோடி ரூபாயாக உள்ளது. அதாவது, மாதம் 600 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.

அரசு பஸ்களுக்கான அதே கட்டணத்தில் தான், 4,700 தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. 'டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப, பஸ் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து, நான்கு மாதங்களுக்குள் முடிவு எடுத்து அறிவிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.

அதன்படி, பஸ் கட்டண உயர்வு குறித்து அறிக்கை தயாரிக்க, போக்குவரத்து ஆணையர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. டீசல் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப, ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, அக்குழுவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பஸ் கட்டண உயர்வு குறித்து, பொது மக்கள், நுகர்வோர் அமைப்புகளின் கருத்தை அரசு கேட்கிறது. 'போக்குவரத்து ஆணையர், கிண்டி, சென்னை 600 032 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ, tc.tn@nic.in என்ற இ-மெயில் வாயிலாகவோ, மூன்று வாரத்துக்குள் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்' என, அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறியதாவது:

சொந்த வாகனங்கள் அதிகரித்து விட்டன. பஸ்களில் கூட்டம் இல்லை. நாங்கள் 60 சதவீத வழித்தடங்களில் நஷ்டத்தில் தான் பஸ் ஓட்டுகிறோம். கடந்த முறை தமிழக அரசு டிக்கெட் கட்டணத்தை நிர்ணயம் செய்தபோது, டீசல் ஒரு லிட்டர் 63 ரூபாய். தற்போது, 92 ரூபாய்.

கேரளாவில், ஒரு கி.மீ., துாரத்துக்கு 1 ரூபாய் 10 காசு, கர்நாடகாவில் ஒரு ரூபாய், ஆந்திராவில் ஒரு ரூபாய் 8 காசு கட்டணம். இங்கே வெறும் 58 காசு என்றால் எப்படி? இவ்வாறு அவர் கூறினார்.

உயர்த்தாமல் முடியாது


போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: விலைவாசி உயர்ந்து வந்தாலும், எட்டு வருடமாக ஒரே கட்டணம் என்றால் சமாளிப்பது கஷ்டம் தான். சம்பளமும் உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி நஷ்டத்தில் இருந்து மீள வேண்டும் என்றால், கொஞ்சமாவது உயர்த்தாமல் சாத்தியப்படாது. எனினும், அரசு தான் இறுதி முடிவு எடுக்கும்.








      Dinamalar
      Follow us