தமிழக ஊழல் குறித்த அமலாக்கத்துறை அறிக்கை லீக்; அதிகாரிகளுக்கு அமித் ஷா கேள்வி
தமிழக ஊழல் குறித்த அமலாக்கத்துறை அறிக்கை லீக்; அதிகாரிகளுக்கு அமித் ஷா கேள்வி
UPDATED : நவ 02, 2025 07:58 AM
ADDED : நவ 02, 2025 01:50 AM

தி .மு.க.,வுக்கு இப்போது நேரம் சரியில்லை போலிருக்கிறது. ஒரு பக்கம் கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை; இன்னொரு பக்கம், 'தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், பணியிடங்கள் நிரப்பும் விஷயத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளது' என, அமைச்சர் நேருவுக்கு எதிராக அறிக்கை அளித்துள்ளது, அமலாக்கத் துறை.
இந்த விஷயம், முதலில் ஒரு ஆங்கில நாளிதழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 'அமலாக்கத் துறை அறிக்கை எப்படி, 'லீக்' ஆனது?' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளை கேட்டுள்ளார்.
அமலாக்கத் துறையினரோ, 'நாங்கள் வெளியிடவில்லை' என சொல்லியுள்ளனர். 'அமலாக்கத் துறை, தமிழக டி.ஜி.பி.,க்கு அனுப்பிய இந்த ரிப்போர்ட்டை, தமிழக போலீசார் சிலர் லீக் செய்துள்ளனர்' என, அமித் ஷாவிடம் சொல்லப்பட்டதாம்.
'தமிழக போலீசில், சில அதிகாரிகள் தி.மு.க.,விற்கு எதிராக உள்ளனர். தி.மு.க., சொல்லும் வேலைகளை, சட்டத்திற்கு எதிராக இருந்தாலும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், சில சீனியர் அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் தான், நேருவிற்கு எதிரான அமலாக்கத் துறை அறிக்கையை, லீக் செய்துள்ளார்' என்கின்றனர், டில்லி அதிகாரிகள். எது எப்படியோ... தி.மு.க.,விற்கு இனி பிரச்னை தான்!

