அதிகாரி செய்த தவறுக்கு எனக்கு தண்டனை:பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்
அதிகாரி செய்த தவறுக்கு எனக்கு தண்டனை:பெயர் வெளியிட விரும்பாத வாசகரின் ஆதங்கம்
ADDED : பிப் 16, 2026 03:34 AM

நான் ஓய்வு பெற்றஆசிரியர். என் மகனுக்கு 2020ல் மதுரை ஹவுசிங் போர்டு, தொப்பூர் 3வது பிரிவில் குலுக்கல் முறையில் ஒரு பிளாட் கிடைத்தது. பதிவு செய்ய லஞ்சம் கொடுக்க மறுத்தேன். அப்போதைய ஹவுசிங் போர்டு மேலாளர்( மாக்கெட்டிங் சேவை) எங்கள் பிளாட்டுக்குரிய எண்ணுக்கு பதில் பக்கத்து பிளாட்டுக்குரிய எண்ணை பதிந்து கொடுத்து விட்டார். பட்டா பெயர் மாற்றம் செய்யும் போது தான் இது தெரிய வந்தது
சீர்திருத்த பத்திரம் போட, எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு அலுவலகம, தொப்பூர் அலுவலகம், விஏஓ அலுவலகம, தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் என 3 ஆண்டுகள் மாறி மாறி அலைந்தேன் பயனில்லை
மதுரை நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையத்தை நாடினேன். ஹவுசிங் போர்டு மேலாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். அவர் வரவில்லை. எனவே வக்கீலை தனிப்பட்ட முறையில் அணுகி கேஸ் நடத்த வேண்டிய சூழல் உருவானது. அதற்கு பணம் இல்லாததால் லஞ்சம் கொடுக்கும் நிர்ப்பந்தம் வந்தது. மேலாளருக்கு ரூ 30 ஆயிரம் லஞ்சம் கொடுத்து, ரூ 61 ஆயிரம் கட்டி(வேறுபாட்டுத் தொகை) சீர்திருத்தப் பத்திரம் பதிந்தேன்
முந்தைய அதிகாரி லஞ்சம் கேட்காமல், தன் கடமையை சரியாக செய்திருந்தால், எனக்கு ரூ 91 ஆயிரம் வீணாகியிருக்காது. சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஹவுசிங் போர்டுக்கு கடிதம் எழுதியும் பயனில்லை. இனிமேல் யாரும் இது போல் பாதிக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

