sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மீதமிருக்கும் அடுத்த மூன்றரை ஆண்டுகளும் நானே முதல்வர்! சித்தராமையா அதிரடியால் சிவகுமார் அதிர்ச்சி

/

மீதமிருக்கும் அடுத்த மூன்றரை ஆண்டுகளும் நானே முதல்வர்! சித்தராமையா அதிரடியால் சிவகுமார் அதிர்ச்சி

மீதமிருக்கும் அடுத்த மூன்றரை ஆண்டுகளும் நானே முதல்வர்! சித்தராமையா அதிரடியால் சிவகுமார் அதிர்ச்சி

மீதமிருக்கும் அடுத்த மூன்றரை ஆண்டுகளும் நானே முதல்வர்! சித்தராமையா அதிரடியால் சிவகுமார் அதிர்ச்சி

5


ADDED : நவ 09, 2024 03:33 AM

Google News

ADDED : நவ 09, 2024 03:33 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லாரி: ''மீதம் இருக்கும் அடுத்த மூன்றரை ஆண்டுகளும் நானே முதல்வர்,'' என சித்தராமையா அதிரடியாக அறிவித்துள்ளதால், துணை முதல்வர் சிவகுமார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியை பிடித்ததில் இருந்து துணை முதல்வர் சிவகுமார், முதல்வர் பதவியை பெற காய் நகர்த்தினார். ஆனால், கிடைக்கவில்லை. சித்தராமையா பிடிவாதத்தால் அது முடியவில்லை.

எனவே, 'சித்தராமையா முதல் இரண்டரை ஆண்டுகள் முதல்வராகவும்; அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமார் முதல்வராக இருக்கலாம்' எனவும் டில்லி மேலிடம் சமரசம் செய்து அனுப்பியதாக தகவல்கள் உலா வந்தன.

ஆனால், இதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், 'முடா' முறைகேடு வழக்கில் சித்தராமையா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவர் பதவி விலகுவார், நாம் முதல்வர் ஆகிவிடலாம் என சிவகுமார் கனவு கண்டார். ஆனால், கட்சி மேலிடத்தின் ஆதரவால் சித்தராமையா முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்கிறார்.

பொறுப்பு


இந்நிலையில், இடைத்தேர்தல் நடக்கும் சென்னப்பட்டணா தொகுதியில் காங்கிரசை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, சிவகுமார் தோளில் விழுந்துள்ளது. சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சிவகுமார் மவுசு இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சென்னப்பட்டணாவில் கட்சியை வெற்றி பெற வைத்து விட்டு, மேலிட தலைவர்களிடம் சென்று முதல்வர் பதவியை சிவகுமார் கேட்கலாம் என்றும் பேச்சு அடிபட்டது.

இதனால், சித்தராமையா சுதாரித்து கொண்டுள்ளார். பல்லாரி மாவட்டம், சண்டூர் - தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அன்னபூர்ணாவை ஆதரித்து முதல்வர் சித்தராமையா நேற்று பேசியதாவது:

சண்டூர் தொகுதி வளர்ச்சிக்கு சந்தோஷ் லாட்டும், துக்காராமும் தான் காரணம். பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது, பல்லாரி மாவட்டத்தை சுரண்டியது. ஜனார்த்தன ரெட்டி கனிம சுரங்க முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் அவருக்கு பல்லாரிக்கு வர தடை விதித்திருந்தது. தற்போது தான் தடை நீக்கப்பட்டுள்ளது.

இதனால், சண்டூர் வந்து அரசியல் நாடகம் செய்கிறார். அவர்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். எங்கள் ஆட்சி காலம் முடிய இன்னும் மூன்றரை ஆண்டுகள் உள்ளன. இந்த மூன்றரை ஆண்டுகளும் சித்தராமையாவின் காங்கிரஸ் ஆட்சியாகவே இருக்கும். அன்னபூர்ணாவை வெற்றி பெற செய்து, தொகுதியை மேலும் வளர்ச்சி அடைய செய்யுமாறு சண்டூர் மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வரின் அறிவிப்பால், சிவகுமார் அதிர்ச்சி அடைந்து உள்ளார். சென்னப்பட்டணாவில் நேற்று சிவகுமார் பிரசாரம் செய்த போது, 'அடுத்த முதல்வர் சிவகுமாருக்கு வாழ்த்துகள்' என்று அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இது குறித்து ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் சிவகுமார் நைசாக நழுவி விட்டார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பாலகிருஷ்ணா, சிவலிங்கே கவுடா ஆகியோர், சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று ஏற்கனவே தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

'மூன்றரை ஆண்டுகளும் பதவியில் நீடிப்பேன்' என்று சித்தராமையா தற்போது கூறியுள்ளதால், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது ஆதரவாளர்களை துாண்டிவிட்டு, 'அடுத்த முதல்வர்' என சிவகுமார் கோஷம் எழுப்ப வைத்ததாகவும் பேச்சு அடிபடுகிறது.

மக்களே அகற்றுவர்


முதல்வர் பதவி விவகாரம் குறித்து பா.ஜ., மாநில தலைவர் விஜயேந்திரா கூறுகையில், ''காங்கிரசில் மீண்டும் முதல்வர் பதவிக்கு சண்டை ஆரம்பித்துள்ளது. இடைத்தேர்தல் முடிந்ததும் சித்தராமையா பதவி விலகுவார். அவர் எப்போது பதவி விலகுவார் என்று சிவகுமாருக்கு நன்கு தெரியும்,'' என்றார்.

பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் அஸ்வத் நாராயணா கூறுகையில், ''சித்தராமையாவுக்கு நாம் ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருப்போமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி முதல்வர் பதவியில் நீடிப்பேன் என்று அவர் கூறி வருகிறார்,'' என்றார்.

பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரதாப் சிம்ஹா கூறுகையில், ''சித்தராமையா ஐந்து ஆண்டுகளும் முதல்வர் பதவியில் நீடித்தால், மாநில மக்களுக்கு தான் கஷ்டம். இதனால் அரசை மக்களே அகற்றுவர்,'' என்றார்.

முதல்வர் சித்தராமையாவின் அறிவிப்பு, கர்நாடக காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சண்டூர் தொகுதியில் ஏராளமான குருபர் சமூக ஓட்டுகள் உள்ளன. அந்த ஓட்டுகளை கவரும் வகையில், குருப சமூகத்தின் சித்தராமையா, முதல்வராக தொடர்வேன் என பேசியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு விஜயநகராவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ''ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வர் பதவியில் நீடிப்பேன்,'' என, சித்தராமையா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us