சுதந்திர தினப் பொன் விழா, பவள விழா ஓட்டம்; 'தினமலர்' வலுவூட்டிய தேசப்பற்று
சுதந்திர தினப் பொன் விழா, பவள விழா ஓட்டம்; 'தினமலர்' வலுவூட்டிய தேசப்பற்று
UPDATED : ஆக 15, 2024 06:08 AM
ADDED : ஆக 14, 2024 11:15 PM

நாட்டின் சுதந்திரத்தை போற்றுவதிலும், நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமக்கும் பல்லாயிரக்கணக்கானோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், அவர்களை ஊக்குவிக்க 'தினமலர்' நாளிதழ் என்றும் தவறுவதில்லை.
திருப்பூரில், கடந்த, 1998ல், சுதந்திர தின பொன் விழா ஓட்டமும்; 75வது சுதந்திர தின பவள விழாவை கொண்டாடும் வகையில், 2022, ஆக., 14ல், சுதந்திர தின பவள விழா மெல்லோட்டமும் 'தினமலர்' நாளிதழ் சார்பில் நடத்தப்பட்டது.ரத்தத்தில் கலந்துள்ள தேசப்பற்றையும், சுதந்திர உணர்வையும் வெளிக்காட்ட, ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பின்னலாடை தொழில் துறையினர், தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சேவை அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள், ஊழியர்கள் என, அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.
'தினமலர்' நாளிதழ் விதைத்த தேசப்பற்று, லட்சக்கணக்கானோரிடம் ஆல் போல் வேரூன்றி, தழைத்து வளர்கிறது.