திருப்பரங்குன்றம் மலையை 'சிக்கந்தர் மலை' என்பதா? மார்க்சிஸ்ட் சண்முகத்திற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம்
திருப்பரங்குன்றம் மலையை 'சிக்கந்தர் மலை' என்பதா? மார்க்சிஸ்ட் சண்முகத்திற்கு ஹிந்து அமைப்புகள் கண்டனம்
ADDED : டிச 26, 2025 02:14 AM

திருப்பரங்குன்றம்: மதுரை திருப்பரங் குன்றம் மலையை 'சிக்கந்தர் மலை' என்ற மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்திற்கு ஹிந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
கம்யூனிஸ்ட் கட்சியின் விஷம பிரசாரம்
ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன் கூறியதாவது: உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நான் தொடுத்த வழக்கில் திருப்பரங் குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட தடை விதித்தும், திருப்பரங் குன்றம் மலையை 'சிக்கந்தர் மலை' என்று யாரும் அழைக்க கூடாதென்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
நேற்று முன்தினம் மதுரை ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், ''திருப்பரங்குன்றத்தில் இந்த இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு கூட்டம், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. பா.ஜ., கும்பல் தலைகீழாக நின்று அங்கு சென்றாலும் 'சிக்கந்தர் மலையை' தகர்க்க முடியாது,'' என பேசியது கண்டிக்கத்தக்கது.
தீபத்துாணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சையான கருத்துகளை கூறியும், முருகப்பக்தர் பூர்ணசந்திரனின் உயிர் போனதற்கும் காரணமாக இருந்தது மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்க டேசன்தான். எங்கள் பாரம்பரிய உரிமைக்காக தீபத்துாணில் தீபம் ஏற்ற ஜனநாயக, சட்ட ரீதியாக அமைதியாக போராட்டம் நடத்துகிறோமே தவிர, தர்ஹாவை தகர்க்க வேண்டும் என்றோ, கலவரத்தை உண்டாக்க வேண்டுமென்றோ, வேறு சிந்தனையோ ஹிந்து களுக்கு துளியும் கிடையாது.
ஆனால் தர்ஹாவை தகர்க்கவும், கலவரத்தை உண்டாக்கவும் ஹிந்து அமைப்புகள் திட்ட மிட்டுள்ளார்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து விஷம பிர சாரம் செய்கின்றனர். ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கவும், மத கலவரத்தை துாண்டவும் கம்யூனிஸ்ட் கட்சி யினர் தலைகீழாக நின் றாலும் ஒருபோதும் நடக்காது.
ஸ்ரீகந்தனுக்கு சொந்தமான மலையை திருப்பரங்குன்றம் மலை என்று தான் அழைக்க வேண்டுமென உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளார்கள். அதை அவமதிக்கும் நோக்கில் மத மோதலையும், மலை பிரச்னையையும் உண்டாக்கும் வகையில் சிக்கந்தர் மலை என பேசிய சண்முகம் மீது அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றார்.
ஹிந்துக்கள் ஒற்றுமை பலப்படும்
பாரத ஹிந்து எழுச்சி முன்னணி தலைவர் பாண்டியன் கூறுகையில், ''பிரிந்து கிடந்த ஹிந்துக்களை திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஒன்று சேர்த்து வருகிறது. தேர் தலில் ஹிந்துக்கள் தங்கள் ஒற்றுமையை நிரூபிப் பார்கள்,'' என்றார்.
கலவரத்தை துாண்டும் எம்.பி.,
அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம் கூறுகையில், ''கார்த்திகை தீபமா, கலவர தீபமா என கேட்டு தீப பிரச்னைக்கு வித் திட்டவரே எம்.பி., வெங்கடேசன் தான். அவர்தான் முழுகாரணம். தீபத் துாணில் தீபம் ஏற்ற மட்டுமே கோரிக்கை வைத்து வருகிறோம். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற கூறித்தான் குரல் கொடுக்கிறோம். இப்பிரச்னையில் கல வரத்தை துாண்டும் போக்கில் செயல்படுவது கம்யூனிஸ்ட் தான்,'' என்றார்.
வாய் திறக்காத சண்முகம்
தமிழக ஹிந்து துறவிகள் மாநில அமைப்பாளர், ஆலய பாதுகாப்பு இயக்க மாநில அமைப்பாளர் சுடலை ஆனந்தா சுவாமி கூறுகையில், ''ஆட்டை மலை மேல் கொண்டு செல்வதை கண்டிக்காதவர்கள், நவாஸ் கனி எம்.பி., யுடன் வந்தவர்கள் புனிதமான திருப்பரங்குன்றம் மலை படிக்கட்டுகளில் பிரியாணி சாப்பிட்டதை கண்டிக்க வாய் திறக்காத சண்முகம், சிக்கந்தர் மலை என பேசுவது மோசமான போக்கு. குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அவரது பேச்சு உள்ளது,'' என்றார்.

