sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு என்னை களம் இறக்கியது பா.ஜ., தான்: சொல்கிறார் செங்கோட்டையன்

/

அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு என்னை களம் இறக்கியது பா.ஜ., தான்: சொல்கிறார் செங்கோட்டையன்

அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு என்னை களம் இறக்கியது பா.ஜ., தான்: சொல்கிறார் செங்கோட்டையன்

அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு என்னை களம் இறக்கியது பா.ஜ., தான்: சொல்கிறார் செங்கோட்டையன்


ADDED : நவ 08, 2025 01:14 AM

Google News

ADDED : நவ 08, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''என்னை டில்லிக்கு அழைத்து, அ.தி.மு.க .,வை ஒருங்கிணைக்க சொன்னது பா.ஜ., தான்,'' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்குமாறு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், 'கெடு' விதித்திருந்தார். மேலும், டில்லி சென்று பா.ஜ., மூத்த தலைவர்களையும் சந்தித்தார்.

பின்னர், சசிகலா, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை சந்தித்ததால், அ.தி.மு.க.,வில் இருந்து அவரை நீக்கி, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டார்.

நம்பிக்கையானவர் இந்நிலையில், கோபிச்செட்டிப்பாளையத்தில், நேற்று செங்கோட்டையன், அளித்த பேட்டி:

ஜெயலலிதா இருந்தபோதும், மறைவுக்குப் பின்பும் மூன்று முறை பன்னீர்செல்வமே முதல்வராக்கப்பட்டார். தகுதி உள்ளவர் என்றால், பழனிசாமி ஏன் முதல்வர் ஆக்கப்படவில்லை? அந்தளவுக்கு நம்பிக்கையானவர் பழனிசாமி.

அ.தி.மு.க., ஒன்றுபட வேண்டும் என குரல் எழுப்பிய என்னை, கட்சியில் இருந்து நீக்கிஉள்ளார் பழனிசாமி.

என்னையெல்லாம் கட்சியில் இருந்து நீக்கும் பழனிசாமியை ஜெயலலிதா நீக்கினார். கடந்த 2012ல் ஜெயலலிதா என்னையும் நீக்கினார்.

அ.தி.மு.க.,வில் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் ஜெயலலிதா. இப்போது அந்த நிலை இல்லை. இது கட்சியை பலவீனப்படுத்தும்.

என்னை டில்லிக்கு அழைத்தது பா.ஜ., தான். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க சொன்னதும், பா.ஜ.,தான். நானும் அதைத்தான் சொன்னேன். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்கவும், ஆட்சியை பிடிக்கவும் உதவ வேண்டும் என, பா.ஜ., தலைமையிடம் வேண்டுகோள் விடுத்தேன்.

தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதி வீட்டு பணியாளரின் பிரச்னைக்காக, தமிழகம் முழுதும் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தி, சி.பி.ஐ., விசாரணை கோரியது.

ஆனால், ஜெயலலிதா வாழ்ந்த, கோடநாடு இல்லத்தில் நடந்த கொலையில், சி.பி.ஐ., விசாரணை கேட்கவில்லை. இதற்கான காரணத்தை, பழனிசாமியிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

கொச்சைப்படுத்தியவர் என்னை அமைச்சராக்கியதாக பழனிசாமி கூறுகிறார். ஆனால், என்னைப் போன்றவர்கள் முன்மொழியவில்லை என்றால், அவர் முதல்வராகி இருக்க முடியாது. கொல்லைப்புறமாக முதல்வர் ஆனவர் பழனிசாமி. தன்னை முதல்வராக்கிய சசிகலாவையே கொச்சைப் படுத்தியவர்.

'கோபி தொகுதியில், 45 ஆண்டுகள் சிற்றரசர் போல வாழ்ந்தார். தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை' என, என் மீது பழனிசாமி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

'ஆனால், 'எடப்பாடியில் இல்லாத அளவுக்கு, கோபியில் சாலைகள் சிறப்பாக அமைத்துள்ளீர்கள்' என, அவரே என்னை பாராட்டியுள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில், கட்சிக்காக உழைத்தவர்களை மறந்து விட்டு, வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள், பணக்காரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தவர் பழனிசாமி.

நாமக்கல் பிரசாரத்தில் பேசிய பழனிசாமி, 'கொடி பறக்குது. பிள்ளையார் சுழி போடப்பட்டு விட்டது' என்றார். ஆனால், த.வெ.க., பொதுக்குழுவில் விஜய் என்ன பேசினார் என்பதை, அனைவரும் அறிவோம்.

ஒற்றுமை உணர்வுடன் வலிமையாக இருந்தால், நம்மை தேடி மற்றவர் வருவர். ஒருவர் முன்னேற வேண்டுமானால், தன் காலில் நடந்து செல்ல வேண்டும். பிறர் முதுகில் ஏறி சவாரி செய்யக் கூடாது. அப்படி செய்தால், இந்த நிலைதான் ஏற்படும்.

பழனிசாமியின் மகன், மருமகன், மைத்துனர் ஆகியோர் தான் கட்சியை நடத்துகின்றனர். அவரது அக்கா மகன் தான் எல்லாம். கட்சிக்காக உழைத்தவர்கள், அவர்களிடம் மண்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முழுநிலவு தேய்ந்து அமாவாசையாகும் என்னை தி.மு.க.,வின், 'பி' டீம் என பழனிசாமி சொல்கிறார். இதை சொல்ல, அவருக்கு தகுதியில்லை. நான் எந்தக் கட்சி மீதும், எந்த நபர் மீதும் கடுமையான விமர்சனத்தை எப்போதும் செய்ததில்லை. சட்டசபையில், பட்ஜெட் கூட்டத் தொடரில், 40 நாட்கள், பழனிசாமிக்கு பின் இருக்கையில்தான் அமர்ந்திருந்தேன். ஒரு நாள் கூட பின்னால் திரும்பி, என்னிடம் பேசவில்லை. கருத்து தெரிவிப்பது ஜனநாயக உரிமை. அ.தி.மு.க., வலிமையாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். இப்போது, 14 பேரை நீக்கியிருக்கிறார். இப்படியே நீக்கிக் கொண்டிருந்தால், முழுநிலவு தேய்ந்து, அமாவாசை ஆகிவிடும். - செங்கோட்டையன் முன்னாள் அமைச்சர்


முன்னாள் எம்.பி., உட்பட 14 பேர் நீக்கம்

கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால், முன்னாள் எம்.பி., சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியம் தம்பி சுப்பிரமணியன், கோபி குறிஞ்சிநாதன், செந்தில் என்கிற கோடீஸ்வரன், அருள் ராமச்சந்திரா, கந்தவேல்முருகன், முத்துசாமி, ரமேஷ், அந்தியூர் மோகன்குமார், ராயணன், கோட்டுபுள்ளாம்பாளையம் மவுதீஸ்வரன், சத்தியமங்கலம் செல்வம், தமிழ்ச்செல்வி, காமேஷ் ஆகியோர், அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர். அ.தி.மு.க.,வினர் யாரும், இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. - பழனிசாமி பொதுச்செயலர், அ.தி.மு.க.,








      Dinamalar
      Follow us