.அடுத்தடுத்து சிக்கும் பாக்., நபர்கள் பீதியில் பரிதவிக்கும் கர்நாடக மக்கள்
.அடுத்தடுத்து சிக்கும் பாக்., நபர்கள் பீதியில் பரிதவிக்கும் கர்நாடக மக்கள்
ADDED : அக் 14, 2024 05:43 AM

பெங்களூரு:
கர்நாடகாவில் சட்டவிரோதமாக வசித்த, 20க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியரை கைது
செய்துள்ள போலீசார், விசாரணயை தீவிரப்படுத்தி உள்ளனர். இதனால், அவர்கள் வட
மாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அடுத்தடுத்து சிக்கும்
பாகிஸ்தானியர்களால், கர்நாடக மக்கள் கிலி அடைந்துள்ளனர்.
பெங்களூரு
நகரின் பீன்யா, ஜிகனி உட்பட கர்நாடாகாவின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக
வசித்து வந்த 20க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்களை, போலீசார் சமீபத்தில்
கைது செய்தனர். முதலில் ரஷீத் சித்தகி மற்றும் அவரது குடும்பத்தின் மூவர்
கைதாகினர். இவர்கள் கொடுத்த தகவலின்படி, மற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம்
தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இவர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டு,
பெங்களூரில் வசிக்கின்றனர். போலியான ஆதார் கார்டு, பாஸ்போர்ட் உட்பட மற்ற
ஆவணங்களை தயாரித்துள்ளனர்.
இவர்களின் பின்னணியில், பெரிய நெட் ஒர்க்
செயல்படுகிறது. இந்த நெட் ஒர்க்கின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும்
பர்வேஸ் என்பவர், நகர ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இவரிடம்
விசாரித்ததில் மேலும் பல தகவல்கள் தெரியவந்தது. பாகிஸ்தானியர்கள்,
இந்தியாவின் பல்வேறு இடங்களில் வசிப்பதற்கு, தேவையான உதவிகளை அவர் செய்து
கொடுத்துள்ளார்.
இவர் கொடுத்த தகவலின்படி, கர்நாடகா போலீசார்,
டில்லி, தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு சென்று சட்டவிரோதமாக வசித்த
பாகிஸ்தானியர்களை கண்டுபிடித்து, பெங்களூருக்கு அழைத்து வந்துள்ளனர்.
இவர்களை போன்று, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பாகிஸ்தானியர்கள்
சட்டவிரோதமாக வசிப்பதும் தெரிந்தது. இவர்களை கண்டுபிடிக்க, கர்நாடக
போலீசார் இன்றோ அல்லது நாளையோ, வடமாநிலங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
மக்களுடன்
மக்களாக பதுங்கியிருந்த, பாகிஸ்தானியர்கள் கைதாவது, கர்நாடக மக்களை
பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பெங்களூரில் தனியார் மருத்துவமனைகள்,
ஹோட்டல்கள், பள்ளிகள், விமான நிலையம், பிரபலமான பொறியியல் கல்லுாரிக்கு
வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இச்சூழ்நிலையில், பாகிஸ்தானியர்கள்
கண்டுபிடிக்கப்படுவதால், மக்கள் கிலி அடைந்துள்ளனர். போலீசாரும், அறிமுகம்
இல்லாதோருக்கு வீடு வாடகைக்கு கொடுக்கும் முன், எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். அவர்களின் பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும். ஆவணங்களை ஆய்வு
செய்ய வேண்டும். ஒருவேளை சந்தேகத்துக்கு உரிய நபர்களாக இருந்தால்,
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர