sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

கேரள அரசு, தேவசம் போர்டு படுதோல்வி: சபரிமலையில் பக்தர்கள் மீண்டும் கண்ணீர்

/

கேரள அரசு, தேவசம் போர்டு படுதோல்வி: சபரிமலையில் பக்தர்கள் மீண்டும் கண்ணீர்

கேரள அரசு, தேவசம் போர்டு படுதோல்வி: சபரிமலையில் பக்தர்கள் மீண்டும் கண்ணீர்

கேரள அரசு, தேவசம் போர்டு படுதோல்வி: சபரிமலையில் பக்தர்கள் மீண்டும் கண்ணீர்

28


ADDED : ஜன 06, 2024 05:39 AM

Google News

ADDED : ஜன 06, 2024 05:39 AM

28


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை : கேரள மாநிலம், சபரிமலையில் திருப்பதி மாடல் என்ற திட்டத்தை அரசு அறிவித்து, 'ஆன்லைன்' முன்பதிவு வாயிலாக பக்தர்கள் அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், அதற்கான எந்த ஏற்பாடுகளும் இங்கு செய்யப்படவில்லை. மண்டல காலத்தில் பக்தர்கள் வேதனையுடனும், கண்ணீருடனும் 18 மணி நேரம் காத்திருந்தும் அய்யப்பனை பார்க்க முடியாமல் திரும்பி சென்ற சம்பவங்கள் ஏராளமாக நடந்தன.

இந்நிலையில், மகர விளக்கு சீசன் டிச., 30-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மண்டல காலம் போலவே, இப்போதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஒரு நாளில் எத்தனை பக்தர்களை அனுமதிக்க முடியும் என்ற கணக்கில்லாத தேவசம்போர்டு, தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனம் என, சொல்லிக் கொண்டிருக்கிறது.

ஆனால், பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு பக்தர்கள் 14 - 16 மணி நேரம் நிற்கின்றனர். அளவுக்கு அதிகமான கூட்டம் வந்ததால், பம்பையில் பக்தர்கள் தடுக்கப்பட்டனர்.

வாகனங்கள் பழைய படி, மீண்டும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகின்றன. முன்னர் எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு மட்டும் இப்பிரச்னை உள்ளதற்கு கேரளா அரசோ, தேவசம்போர்டோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

காணிக்கை வருமானத்திலும் குறைவு, பக்தர்கள் எண்ணிக்கையிலும் குறைவு. ஆனால், இந்த நீண்ட காத்திருப்பு எதற்காக என்ற கேள்விக்கு யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை. மாறாக பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறும் சம்பவங்கள் நடக்கின்றன.

நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர், 18 படி ஏறி தரிசனத்திற்கு சென்ற தஞ்சாவூர் பக்தர் தயானந்த், 24, என்பவரை போலீசார் தாக்கிய சம்பவம் விவாதத்தை கிளப்பிஉள்ளது.

இவர் சன்னிதானம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட காத்திருப்பு, துாக்கமின்மை காரணமாக தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக பம்பை திரும்புவதற்கு பதில் சன்னிதானத்திலேயே ஆங்காங்கே துாங்குவதால் நெரிசல் காணப்படுகிறது.

நேற்று முன்தினம் காலை, நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட 15 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் நேற்று மதியம் வரையிலும் சன்னிதானம் அருகே செல்ல முடியாததால், இந்த குழுவை சேர்ந்த ஆனந்த் உட்பட சில பக்தர்கள் தரிசனம் செய்யாமல் திரும்பினர்.

சிலர் தங்கள் இரு முடியை பிற பக்தர்களிடம் கெஞ்சி கூத்தாடி அபிஷேகம் செய்யும்படி கூறி விட்டு திரும்புகின்றனர்.

பக்தர்களின் கண்ணீருக்கு விடை கிடைக்காமல் மண்டல, மகர விளக்கு கால சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவு பெற உள்ளது.

மிகப்பெரிய புண்ணிய ஸ்தலத்தில் ஒரு சீசனை நடத்துவதில் தேவசம் போர்டும், அரசும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ரூ.376 கோடியில் புதிய பணிகள்

பக்தர்கள், வசதிக்காக சபரிமலை, பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில், 376 கோடி ரூபாய் செலவில், ஆறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதன் கீழ் பல்வேறு பணிகள் மகர விளக்கு சீசன் முடிந்தவுடன் தொடங்க உள்ளன.பம்பை ஹில்டாப்பில் இருந்து கணபதி கோவிலுக்கு, 32.9 கோடி ரூபாய் செலவில், 12 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்படுகிறது.
சன்னிதானத்தில் மேல் சாந்தி மற்றும் தந்திரி அறைகள் தற்போதுள்ள இடத்திலிருந்து மாற்றப்பட உள்ளன. அதே போல, 18 படி ஏறியதும் பக்தர்கள் தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் மேல் பாலம் அகற்றப்படும்.இது கோவில் மூலஸ்தானத்தை விட உயரமாக இருப்பதால் அகற்ற வேண்டும் என, ஏற்கனவே தேவப்பிரசன்னத்தில்கூறப்பட்டிருந்தது. இதற்கு, 90 கோடி ரூபாயில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
சன்னிதானத்தில் சன்னிதி பின்புறம் ராணுவம் அமைத்த பெய்லி பாலத்திற்கு பதிலாக, 70 கோடி ரூபாயில் புதிய பாலம் அமைக்கப்படும்.இவை உட்பட பல்வேறு பணிகள், சபரிமலை மாஸ்டர் பிளான் கமிட்டி மேற்பார்வையில் நடைபெற உள்ளன. ஏப்ரலில் துவங்க உள்ள இந்த பணி, அரசு மானியம் மற்றும் நன்கொடையாளர்கள் வாயிலாக செய்து முடிக்கப்படும்.








      Dinamalar
      Follow us