மதுரை 'டங்ஸ்டன்' சுரங்க பணியால் சுற்றுச்சூழல் பாதிக்காது: நிபந்தனை பின்பற்றப்படும் என மத்திய அரசு விளக்கம்
மதுரை 'டங்ஸ்டன்' சுரங்க பணியால் சுற்றுச்சூழல் பாதிக்காது: நிபந்தனை பின்பற்றப்படும் என மத்திய அரசு விளக்கம்
ADDED : டிச 02, 2024 12:51 AM

புதுடில்லி: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி, 'டங்ஸ்டன்' சுரங்க ஒப்பந்தப் பணியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்பட அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும் என, மத்திய சுரங்க அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி பகுதியில், டங்ஸ்டன் சுரங்க பணி மேற்கொள்வதற்கான குத்தகை, மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான, 'ஹிந்துஸ்தான் ஜிங்க்' நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பணியால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், சுரங்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு கூறியுள்ளது.
இதற்கு பதிலளித்து மத்திய அரசின் சுரங்க அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி விபரம்:
'சுரங்கம் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் - 1957' திருத்தப்பட்டு, புதிய திருத்தச் சட்டம், 2023ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, முக்கியமான மற்றும் ராணுவத்துக்கு தேவைப்படும் கனிமங்கள் வகைப்படுத்தப்பட்டு, அதன் சுரங்கங்கள் குத்தகை மற்றும் வெட்டி எடுப்பதற்கான முழு அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 24 சுரங்க தொகுதிகள், நான்கு கட்டங்களாக இதுவரை வெற்றிகரமாக குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் ஒன்று தான், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம். இது, 20.16 சதுர கி.மீ., பரப்புளவு உள்ளது. இதை ஏலத்தில் விடுவதற்கான அறிவிப்பு, இந்தாண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசின் கருத்துக்களும் கோரப்பட்டன.
மேலுார் மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில், 47.37 ஹெக்டேர் நிலமானது, தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாமின் நிறுவனத்துக்கு, கிரானைட் சுரங்க ஒப்பந்தத்திற்காக வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2008ல், 30 ஆண்டுக்கு இது வழங்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த குத்தகையை ஒப்படைப்பதாக டாமின் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதவிர, ஆரிப்பட்டி மற்றும் மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமங்களில், சில குறிப்பிட்ட பகுதிகள், பல்லுயிர் பாரம்பரிய பகுதிகளாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த, 1.93 சதுர கி.மீ., பகுதிகள், டங்ஸ்டன் சுரங்க குத்தகையில் சேர்க்கப்படவில்லை.
இந்தாண்டு பிப்ரவரியில் துவங்கி நவம்பர் 7ம் தேதி சுரங்க குத்தகை
தொடர்ச்சி 5ம் பக்கம்