sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பழைய வாகனம் ஒப்படைத்தால் புதிய வாகனத்துக்கு வரிச்சலுகை; மஹாராஷ்டிரா பட்ஜெட்டில் அறிவிப்பு

/

பழைய வாகனம் ஒப்படைத்தால் புதிய வாகனத்துக்கு வரிச்சலுகை; மஹாராஷ்டிரா பட்ஜெட்டில் அறிவிப்பு

பழைய வாகனம் ஒப்படைத்தால் புதிய வாகனத்துக்கு வரிச்சலுகை; மஹாராஷ்டிரா பட்ஜெட்டில் அறிவிப்பு

பழைய வாகனம் ஒப்படைத்தால் புதிய வாகனத்துக்கு வரிச்சலுகை; மஹாராஷ்டிரா பட்ஜெட்டில் அறிவிப்பு

2


ADDED : மார் 07, 2026 07:03 AM

Google News

2

ADDED : மார் 07, 2026 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கி புதிய வாகனம் வாங்குவோருக்கு மோட்டார் வாகன வரியில் சலுகை வழங்கும் திட்டம், மஹாராஷ்டிரா பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சட்டசபையில் நேற்று, 2026 - 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதித் துறையையும் கவனிக்கும் முதல்வர் பட்னவிஸ் தாக்கல் செய்தார்.

இதில், 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி, விவசாய மின் இணைப்புக்கான கட்டணம் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும், பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கி புதிய வாகனம் வாங்குவோருக்கு வரி தள்ளுபடி செய்யும் திட்டத்தையும் அறிவித்தார்.

சட்டசபையில் முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: பி.எஸ்., - 3 மற்றும் அதற்கு கீழ் உள்ள உமிழ்வு தரநிலைகளை கொண்ட பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்கி, புதிய வாகனங்களை வாங்குவோருக்கு மோட்டார் வாகன வரியில், 30 சதவீதம் சலுகை வழங்கப்படும்.

பி.எஸ்., 4 மற்றும் அதற்கு மேல் உமிழ்வு தரநிலையில் உள்ள வாகனங்களை நீக்கி, புதிய வாகனம் வாங்கினால் வரியில், 16 சதவீதம் சலுகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us