ADDED : ஏப் 29, 2025 03:19 AM

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகிவிட்டது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரே, தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இங்கு உள்நாட்டு அரசியலுக்கு எதிராக போராடும் திருமாவளவன், சீமான், சித்தராமையா, கம்யூ., கட்சிகள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. நாட்டு மக்கள் பாதுகாப்பு மீது இவர்களுக்கு அக்கறை இல்லை.
ஹமாஸ், லஸ்கர் - இ - தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் பலவும், பாக்.,கில் இருந்துதான் செயல்படுகின்றன. அமெரிக்காவில் இருப்பவர்களில் பெரும்பாலானோர், புலம் பெயர்ந்தவர்கள். இருந்தபோதும் அவர்கள் யாரும், அமெரிக்காவை தாக்கிப் பேசுவதில்லை. ஆனால், இந்தியாவில் மட்டும் தான், சொந்த நாட்டுக்காரர்களே, நாட்டை பற்றி அவதூறாக பேசுகின்றனர்.
தி.மு.க.,வில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்திருக்கின்றன. இன்னும் பல தலைகள் உருளும்.
எச். ராஜா, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

