காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் போட்டி?
காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் போட்டி?
ADDED : மார் 15, 2026 05:03 AM

காட்பாடி: வயது முதிர்வு காரணமாக, அமைச்சர் துரைமுருகனுக்கு 'சீட்' மறுக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், அவர், காட்பாடி தொகுதியில், மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வேலுார் மாவட்டம், காட்பாடியில், 8வது முறையாக துரைமுருகன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். வயது முதிர்வு காரணமாக, அவருக்கு வரும் தேர்தலில், 'சீட்' மறுக்கப்படும் என கூறப்பட்டது.
ஆனால், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட, அவர் திட்டமிட்டுள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.
தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்திய படி, இந்த சட்டசபை தேர்தலில், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளதா க கூறப்படுகிறது. துரைமுருகன், இந்த முறையும் காட்பாடியில் போட்டியிட காய் நகர்த்தி வருகிறார்.
அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி., பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம், 'தன்னையும் காட்பாடியையும் பிரிக்க முடியாது; காட்பாடி இருக்கும் வரை, தொகுதி மக்களோடு மக்களாக இருப்பேன்; மக்களுக்காக பணியாற்றுவேன்' என தனது தந்தை துரைமுருகன் எப்போதும் கூறுவதாக பேசி வருகிறார்.
இதற்கிடையே, துரைமுருகனின் மருமகள், காட்பாடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தானே மீண்டும் போட்டியிட துரைமுருகன் விரும்புகிறார். ஆனால், இறுதி முடிவை, தி.மு.க., தலைமையே எடுக்கும்.
இவ்வாறு கூறினார்.

