sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

தமிழகத்துக்கு மோடி தந்த திட்டங்கள் ஏராளம் தாராளம்! பட்டியலிடுகிறார் அண்ணாமலை

/

தமிழகத்துக்கு மோடி தந்த திட்டங்கள் ஏராளம் தாராளம்! பட்டியலிடுகிறார் அண்ணாமலை

தமிழகத்துக்கு மோடி தந்த திட்டங்கள் ஏராளம் தாராளம்! பட்டியலிடுகிறார் அண்ணாமலை

தமிழகத்துக்கு மோடி தந்த திட்டங்கள் ஏராளம் தாராளம்! பட்டியலிடுகிறார் அண்ணாமலை

6


ADDED : ஏப் 12, 2024 06:29 AM

Google News

ADDED : ஏப் 12, 2024 06:29 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசத்தின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு, மகத்தானது. அதை உணர்ந்துள்ள மத்திய பா.ஜ., அரசு, கடந்த பத்தாண்டுகளில் ஏராளமான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, நிதியுதவியையும் வழங்கியுள்ளது.

நெடுஞ்சாலைத் திட்டங்கள், அம்ருத், ஸ்மார்ட் சிட்டி, 'ஸ்வச் பாரத்' என, எல்லாத் திட்டங்களும், தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இவையனைத்துக்கும் பெருமளவு நிதியை வழங்கியிருப்பது மத்திய அரசு தான். உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஏராளமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, திறந்தும் வைத்துள்ளார்.

சாமானிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், தொடர்ந்து திட்டங்களை வகுத்து, செயல்படுத்தியும் வருகிறது அவர் தலைமையிலான மத்திய அரசு. கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்துக்குச் செயல்படுத்தியுள்ள திட்டங்களை பட்டியலிட்டுள்ளார், தமிழக பா.ஜ.., தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை.

விவரம் வருமாறு:

* சுகாதாரமான குடிநீரை, வீடுகளுக்கே நேரடியாக வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஒரு கோடியே 2 லட்சம் குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

* அனைத்து மக்களுக்கும் வங்கிக் கணக்கு என்ற இலக்கில் துவக்கப்பட்ட ஜன் தன் யோ திட்டத்தில், தமிழகத்தில், 1.52 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.

* ஏழைகளுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 37,03,987 பயனாளிகள் பலனடைந்துள்ளனர்.

* பிரதமரின் அனைவருக்கும் வீடு (கிராமப்புறம்) திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 5.67 லட்சம் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. அனைவருக்கும் வீடு (நகர்ப்புறம்) திட்டத்தில், 6.81 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

* திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில், தமிழகத்தில் 62 லட்சம் கழிப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

* தமிழகத்தில் மட்டும், 6.12 கோடி பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 5.72 கோடி பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.

* கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏழை எளிய மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவைச் சந்தித்தனர். அவர்களை மீட்டெடுக்கும் விதமாக, கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ், 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலவச அரிசி அல்லது கோதுமை வழங்குகிறது மத்திய அரசு.

தமிழக பெருமைக்கு மகுடம்


தமிழகத்தின் மீதும், தமிழின் மீதும் தனியான அன்பு கொண்டுள்ள பிரதமர் மோடி, தமிழர்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் நாடு முழுக்க கொண்டு சென்றார்.

வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் உலகின் தொன்மையான செவ்வியல் மொழி தமிழ் என்பதை, பறைசாற்றத் தவறியதே இல்லை. எதிர்க்கட்சிகள் வடக்கு தெற்கு பிரிவினையைப் பேசும் நிலையில், வடக்கையும் தெற்கையும் கலாசார ரீதியாக பிணைக்க, காசியில் தமிழ்ச்சங்கம் நிகழ்ச்சியை நடத்தினார் பிரதமர் மோடி. தமிழர் மரபுக்கு தன் மனதில் உயர்ந்த இடத்தை அளித்துள்ள அவர், அதனை வெளிப்படுத்தும் விதமாக புதியபார்லிமென்ட் கட்டட வளாகத்தில், நம் மண்ணின் செங்கோலை நிறுவி, தமிழகத்தின் பெருமைக்கு மகுடம் சூட்டினார்.

போக்குவரத்து


விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ரூ.1,260 கோடியில் புதிய முனையம் அமைக்கப்பட்டு, மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளது.

சென்னை, பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., நிறுவனத்துக்கு வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிக்க, 2023--24ம் நிதியாண்டுக்கு 15 ஆயிரத்து 428 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் மின்சாரம்


இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் அமைக்கப்படுகிறது. கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில், முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான, ரூ.400 கோடி மதிப்பிலான ஈனுலையை துவக்கி வைத்தார்.

கல்வி, மருத்துவம்


திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. இவற்றை பிரதமர் மோடி 2022ல் திறந்து வைத்தார். இதனால், தமிழகத்துக்கு கூடுதலாக 1,450 மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான இடங்கள் கிடைத்துள்ளன. சென்னை, பெரும்பாக்கத்தில், மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு ரூ. 24.65 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

முத்ரா கடன்


குறு, சிறு தொழில்முனைவோருக்கு ரூ.10 லட்சம் வரை, பிணையில்லாத கடன்கள் வழங்குவதே முத்ரா திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 4.87 கோடி பயனாளிகளுக்கு சுமார் 2.43 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 2023 அக்., 3ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரே நாளில், பயனாளிகளுக்கு 3,749 கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார். சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டத்தின் கீழ், 4.68 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 606 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

துறைமுக மேம்பாடு


தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில், 7 ஆயிரத்து 55 கோடி மதிப்பில் வெளித்துறைமுகம், ரூ.265 கோடி மதிப்பில் வடக்கு சரக்குத் தளம் 3 இயந்திரமயமாக்கும் திட்டம், 124 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் உட்பட, 17 ஆயிரத்து 300 கோடி மதிப்பிலான திட்டங்கள், பிப். 28, 2024ல் பிரதமர் மோடியால் துவக்கப்பட்டன.

மீனவர் நலன்


சாதாரண மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க ரூ.1 கோடி வரை கடன் வழங்கும் திட்டம், மீன்பிடி தொழிலை மேம்படுத்த மத்ஸ்ய சம்பத யோஜனா திட்டத்தில், தமிழகத்துக்கு ரூ.617 கோடி ஒதுக்கீடு, மீனவர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் வாங்க, ரூ.1,576 கோடி ஒதுக்கீடு, மீன்பிடி துறைமுகம், கட்டுமானம், விரிவாக்கம், இறங்கு தளம் ரூ.600 கோடி ரூபாய் என தமிழக மீனவர் நலனுக்கு மத்திய அரசு செய்த திட்டங்கள் பலப்பல. மேலும், நீலப்புரட்சி திட்டத்தில், மீனவர்களின் பாதுகாப்புக்காக 5,000 படகுகளில் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 900க்கும் அதிகமான படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழர் நலன்


யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக 27,000 வீடுகளை மத்திய அரசு கட்டிக் கொடுத்தது. 2017ல் மீண்டும் 14,000 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி. இதுவரை 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது மத்திய பா.ஜ., அரசு

ஜல்லிக்கட்டு


காங்., அரசு காளையைக் காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால், 2014ல் உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. 2016ல், அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அந்தப் பட்டியலில் இருந்து காளையை விடுவித்து ஆணை பிறப்பித்தார். இதனால், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது.

கோவையின் தேவை... பத்தாண்டுகளில் பா.ஜ., அரசின் சேவை!

கோவைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு செய்தவற்றில் சிலவற்றைப் பட்டியலிடுகிறார், தமிழக பா.ஜ.., தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை:

* 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கோவை தேர்வு செய்யப்பட்டு, 1,455 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

* கோவை- பெங்களூரு நேரடியாக ரயில் சேவையின் தேவையை அறிந்து, முந்தைய அரசுகள் கண்டு கொள்ளாத நிலையில், கடந்த டிச., முதல் கோவை- பெங்களூரு வந்தேபாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது.

* பிரதமரின் கிசான் திட்டத்தில், கோவை மாவட்டத்தில் மட்டும் 62 ஆயிரத்து 893 விவசாயிகள் ஆண்டுக்கு, 6,000 ரூபாய் கவுரவ நிதி பெற்று பயனடைகின்றனர்.

* ஏழை மக்களுக்கு மருத்துவக்காப்பீடு வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், கோவை மாவட்டத்தில், 156 மருத்துவமனைகள் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டு, 81 ஆயிரம் பயனாளிகளுக்கு காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. 1.20 லட்சம் பயனாளிகள் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.

* வீடுகளுக்கு நேரடி குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்தில், கோவையில் 100 சதவீத சாதனை அளவாக, 3 லட்சத்து 72 ஆயிரத்து 578 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

* ஏழை பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா திட்டத்தில், முதல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த சிலிண்டர்களுக்கும் 300 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் 46 ஆயிரத்து 191 பயனாளிகளுக்கு இத்திட்டத்தில் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

* முத்ரா திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 4 கோடி பயனாளிகளுக்கு, ரூ. 2.4 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதிக கடன் பெற்ற மாவட்டங்களில் ரூ.9,600 கோடி பெற்று, மாநில அளவில் கோவை மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

* சிங்காநல்லுாரில், ரூ.580 கோடி மதிப்பில் இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 2016ல் திறக்கப்பட்டது. 24 மணி நேர சூப்பர் ஸ்பெஷாலிட்டி, புறநோயாளிகள், உள்நோயாளிகள், மருத்துவக் கல்லூரி என, 7 லட்சம் சதுர அடி பரப்பில் நான்கு புதிய கட்டடங்கள் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ளன. 14 சிறப்பு மருத்துவத் துறைகள் உட்பட 31 துறைகள் உள்ளன. இந்த புதிய மருத்துவக் கல்லூரியால் மருத்துவப் படிப்புக்கு 100 சேர்க்கை இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. இந்தியாவில் வேறு எந்த இ.எஸ்.ஐ., மருத்துவமனையிலும் இல்லாத சிறப்பாக, கோவையில்தான் முதல் முறையாக, பிரேத பரிசோதனை வசதி துவக்கப்பட்டது.

* பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 53 ஆயிரத்து 688 பேர் பயனடைந்துள்ளனர்.

இவை தவிர, கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ, 2,000 கோடி நிதி, 'பார்ம் - பைபர் - பேக்டரி - பேஷன் - பாரின்' எனப்படும், பி.எம்., மித்ரா திட்டத்தின் கீழ், ஜவுளி ஏற்றுமதிக்கு உதவி, விஸ்வகர்மா திட்டத்தில் பிணையில்லா கடன் என, பல்வேறு திட்டங்களை, கடந்த 10 ஆண்டுகளில் கோவைக்கு வழங்கி, வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருக்கிறது மத்திய அரசு.

தமிழகத்துக்கு ரூ.2.47 லட்சம் கோடி!

''காங்.,- தி.மு.க., கூட்டணி ஆட்சியின்போது, 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 95 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சிக் காலத்தில், 2.47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்., ஆட்சியில் வழங்கப்பட்ட மானியம் 52 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. பா.ஜ., ஆட்சியில் 2.31 லட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.இரு ஆண்டுகளில், தமிழகத்தில் 2,352 கி.மீ., தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக ரூ.58 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை- பெங்களூரு விரைவு சாலை, 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் காட்பாடி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி ரயில் நிலையங்களில், 3,500 கோடி ரூபாய் மதிப்பில், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.-- அமித்ஷா, உள்துறை அமைச்சர்.(வேலுார், 2023 ஜூன் 11)



திட்டங்களை மறைக்கும் தமிழக அரசு

''தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. திட்டங்கள் குறித்து, ஊடகங்களில் செய்திகள் வெளிவராமல், மாநில அரசு தடுக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும், அந்தத் தடைகளைத் தாண்டி, தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியே தீரும். தமிழகத்தில் 1,300 கி.மீ., ரயில் பாதை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2,000 கி.மீ., ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. 5 வந்தே பாரத் ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படுகின்றன. சாலைக் கட்டமைப்பில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.-பிரதமர் நரேந்திர மோடி,துாத்துக்குடி, பிப். 28, 2024.








      Dinamalar
      Follow us