மும்பை மெட்ரோ சூப்பர்.. இந்தியாவிடம் பாடம் படிக்கணும்
மும்பை மெட்ரோ சூப்பர்.. இந்தியாவிடம் பாடம் படிக்கணும்
ADDED : செப் 05, 2026 06:00 AM

அமெரிக்க சோஷியல் மீடியா பிரபலம் லிஸ், மும்பை மெட்ரோவின் சுத்தம் கண்டு பூரித்துப்போய் வெளியிட்ட வீடியோ, இணையத்தில் 65 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்தது. 'டிக்கெட் கட்டணம் வெறும் 20 ரூபாய் தான். ஸ்டேஷன் சுத்தமாக இருந்தது. பயணியரை பாதுகாக்கும் பிளாட்பார்ம் ஸ்கிரீன் கதவுகள் பிரமாதம். நல்ல பாதுகாப்பான பயணம். நியூயார்க் மெட்ரோவை காட்டிலும் மும்பை மெட்ரோ சுத்தமாக இருக்கிறது' என்கிறார், லிஸ்.
'மும்பையில் வெப்பம் அதிகம் இருக்கும் நிலையில், ரயில் பெட்டிக்குள் 'ஏசி' சிறப்பாக இருப்பதாக உணர்ந்தேன். ஒட்டு மொத்தமாக இங்குள்ள மெட்ரோ, 'எக்ஸலன்ட்!' இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்ற அவரது வீடியோவில், நம்ம ஊர் நெட்டிசன்கள் நன்றி சொல்லி, 'கமென்ட்' செய்து வருகின்றனர்.
கண்களை நம்பாதே!
நி கில் கோச்சார் என்ற வாலிபர், டில்லி மெட்ரோ ரயில் ஜன்னலில் போனை ஒட்டி வைத்து எடுத்த வீடியோ, இன்ஸ்டாகிராமில், 13.5 கோடி பார்வையாளர்கள், 46 லட்சம் 'லைக்'குகளை அள்ளியது.
![]() |
'ஆதிரா'வுக்கு பிறந்த நாள்
நா ய்களை குழந்தை போல் வளர்ப்போர் நாட்டில் ஏராளம் உண்டு. புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் வளர்ப்பு ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ஆதிராவுக்கு, முதலாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடிய நிகழ்வு, இன்ஸ்டாகிராமில் 12 லட்சம் பார்வையாளர்களுடன் 'டிரெண்ட்' ஆனது.
![]() |
'உருளை'யால் மாட்டியது ஊபர்
த னியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மையங்களில் மனிதர்கள் வேலை செய்வது அரிதாகி விட்டது. சேவை குறித்த புகார் சொல்பவர்களுக்கு, மென் பொருட்களில் பதிவான சலிப்பூட்டும் பதில்களே கிடைக்கின்றன. இத்தகைய பதில்களால் கடுப்பான ஊபர் டாக்சி சேவையின் வாடிக்கையாளர் ஒருவர், 'நீங்கள் ஒரு மனிதர் தான் எனக்கு பதில் அளிக்கிறீர்கள் என்பதை நிரூபிக்க, 'பொட்டேட்டோ' என்ற வார்த்தையை சொல்லுங்கள்' என்று 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.
![]() |
அதை சொல்ல முடியாத ஊபர் சேவை மையம், சிறந்த தீர்வை வழங்க இயலாததற்கு மன்னிப்பு கோருவதாக, நீண்ட ஒரு பத்தியை பதிலாக அனுப்பியது. இதைக் கண்டதும், உருளைக்கிழங்கால் ஊபர் மாட்டிக் கொண்டதாக, நெட்டிசன்கள் கேலி, கிண்டலான 'கமென்ட்' செய்து வருகின்றனர்.
இது கணபதியின் வலிமை!
பா கிஸ்தானில் இஸ்லாமியர் ஒருவர், விநாயகர் சிலை செய்யும் வீடியோ ஒன்று, இன்ஸ்டாகிராமில் பரவியது. கராச்சியில் வசிக்கும் மராத்தியரான அமர் பர்காஷ் குடும்பத்தினருக்காக, அங்குள்ள விநாயகர் கோவிலில் இந்த சிலையை இஸ்லாமிய சிற்பி செய்கிறார்.
![]() |
அம்மாவுக்கு என்ன வேண்டும்?
'எ ன் 57 வயது தாய், நீச்சல் பழகிக் கொண்டிருக்கிறார்' என்று அவரது மகள் அனு சர்மா வெளியிட்ட வீடியோ, இணையத்தில், 'டிரெண்ட்' ஆனது. 'பெண் குழந்தைகள் கொண்டாடப்படாத குடும்பத்தில் பிறந்தவர், பெண்கள் மதிக்கப்படாத குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவர் என் தாய். இப்போது முதல் முறையாக, தான் விரும்பியதை செய்கிறார்' என்கிறார் அனு.
![]() |
'தங்கள் வாழ்க்கையின் முதல் பகுதியை, நம் வாழ்க்கையை அழகுபடுத்தவே பெற்றோர் செலவிட்டனர். இப்போது அவர்களது வாழ்க்கையை இனிமையானதாக மாற்றுவது, நம்முடைய முறை தானே? உங்கள் அம்மாவிடம் இந்த வீடியோவை அனுப்பி, அம்மா, இப்போது நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று கேளுங்கள்' என்ற அவரது உருக்கமான பதிவு, நெட்டிசன்களால் வெகுவாக பாராட்டப்படுகிறது.





