தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி: ரகுராம் ராஜன் - ஸ்ரீதர் வேம்பு காரசாரம்

சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி: ரகுராம் ராஜன் - ஸ்ரீதர் வேம்பு காரசாரம்

சேவைத்துறை சார்ந்த வளர்ச்சி: ரகுராம் ராஜன் - ஸ்ரீதர் வேம்பு காரசாரம்

25


ADDED : செப் 05, 2026 06:35 AM

Follow on GoogleFavourite on Google

25

ADDED : செப் 05, 2026 06:35 AM


25
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் எந்த திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் புதிய விவாதம் எழுந்துள்ளது. ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் 'சேவை துறை சார்ந்த வளர்ச்சி' என்ற நிலைப்பாட்டை, 'ஜோஹோ' நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சித்துள்ளார்.

உற்பத்தி அவசியம்


சேவை துறையை மட்டுமே முழுமையாக நம்பியிருந்தால், இந்தியா மெக்சிகோவை போல மாறிவிடும் ஆபத்து உள்ளது. மெக்சிகோ உலகளாவிய உற்பத்தி மையமாக இருந்தாலும், அதன் முக்கிய தொழில்நுட்பங்கள், வடிவமைப்பு, அதிக லாபம் அனைத்தும் வெளிநாடுகளுக்கே செல்கின்றன.

வெளிநாட்டு பொருட்களின் உதிரிபாகங்களை இங்கு ஒன்றிணைப்பதால் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியமோ, நாட்டுக்கு அதிக லாபமோ கிடைக்காது. அறிவுசார் சொத்துரிமைகளுடன் கூடிய உற்பத்தியை மேற்கொண்டால் மட்டுமே, இந்தியா தென் கொரியாவை போல உலகளாவிய நிறுவனங்களை உருவாக்கி, மிகப்பெரிய வளர்ச்சியை காண முடியும்.

சேவைகள் துறைக்கு முன்னுரிமை


தற்போது உலக அளவில் இயந்திர மயமாக்கல் தொழில்நுட்பங்கள் அதிகரித்துவிட்டன. மேலும், உற்பத்தி துறையில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், முன்பு போல ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி துறையில் நாம் வெற்றி பெறுவது கடினம்.

எனவே, மனித வளம், சேவைத்துறை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட அறிவு சார்ந்த தொழில்களில் இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும். இதுவே எதிர்கால வேலைவாய்ப்புக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us