sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

2026ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்; குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும்: வேலுார் இப்ராஹிம் பேட்டி

/

2026ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்; குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும்: வேலுார் இப்ராஹிம் பேட்டி

2026ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்; குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும்: வேலுார் இப்ராஹிம் பேட்டி

2026ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும்; குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும்: வேலுார் இப்ராஹிம் பேட்டி

6


ADDED : டிச 25, 2025 07:08 AM

Google News

6

ADDED : டிச 25, 2025 07:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: 2026ல் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும். கார்த்திகை மாதம் திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும் என பா.ஜ., சிறுபான்மை யினர் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.

திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது: தொழுகைக்காக திருப்பரங்குன்றம் மலை தர்காவிற்கு நான் சென்றால் தடுக்கின்றனர். ஆனால் தி.மு.க., இஸ்லாமியர்களை மலைக்குச் செல்ல அனுமதிக்கின்றனர். திருப்பரங்குன்றம் தர்காவை அயோத்தி மாதிரி மாற்றப் பார்க் கிறார்கள் என ஸ்டாலின், உதயநிதி, அவர்களுடைய எடுபிடிகள் பா.ஜ., வை காரணம் காட்டி இஸ்லா மியர்களை மிரட்டி கொண்டிருக்கின்றனர். இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

இதை புரிந்து கொண்டு இஸ்லாமிய மக்கள் ஓட்டளித்தால் 2026ல் தி.மு.க.,விற்கு டெபாசிட் போய்விடும் என்பதால் என் மீது வன்மம் வைத்து தடுக்கிறார்கள். இன்று வேண்டாம் நாளை வருகிறேன். எத்தனை மணிக்கு அனு மதிப்பீர்கள் என கேட்டால், பள்ளிவாசல் நிர் வாகத்தை கேட்டு அனு மதிப்பதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகிறார். மலைமீது ஹிந்துக்கள்தான் இந்த இடத்தை இஸ்லா மியருக்கு கொடுத்தனர்.

இன்று ஹிந்துக்களுக்கு அது பிரச்னையாக வந்து உள்ளது. மாலை 5:00 மணிக்கு பிறகு விடமாட்டோம் என்று உதவி கமிஷனர் கூறுகிறார். தி.மு.க.,வை ஆதரிக்கும் 25 இஸ்லாமியரை கொடியுடன் இரவு 8:00 மணிக்குமேல் மலை மேல் செல்ல எப்படி அனு மதித்தார். நாங்கள் 3 பேர் சென்று வழிபடுகிறோம் என்று கேட்டதற்கு விடமாட்டோம் என்று சொல்கிறார்.

நாளை எத்தனை மணிக்கு அனுமதிப்பீர்கள் என்று கேட்டால் கால சூழ்நிலையை பொறுத்து தான் முடிவு செய்யப்படும் என உதவி கமிஷனர் கூறுகிறார். நாளை காலைக்குள் பயங்கர வாதிகள் தாக்குதல் நடக்குமா. காவல்துறையினர் சட்டத்தின் அடிப்படையில் பேசவில்லை. 2026ல் தி.மு.க., ஆட்சி துடைத்தெறியப்படும். தே.ஜ., கூட்டணி ஆட்சி அமையும். 2026 கார்த்திகை மாதம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படும். மலை மீது சென்று தொழுவதற்கு அனுமதி கொடுக்காத தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பாசிச அரசியல் செய்கிறார்.

நாங்கள் விடிய விடிய இங்கு உட்கார்ந்து இருப்போம். காவல்துறையினர் அனுமதி கொடுத்தபின்பு நாளை மலைக்கு செல்வோம். இந்த புனித தலத்தில் மாட்டுக்கறி பிரியாணியை சாப்பிட எம்.பி., நவாஸ் கனியுடன் வந்தவர்களை போலீசார் கைது செய்யவில்லை. சிக்கந்தர் மலை என்று கூறிய அப்துல் சமதை கைது செய்யவில்லை. என்னை கைது செய் கிறேன் என்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது என்றார்.

போலீசாருடன் வாக்குவாதம்

வேலுார் இப்ராஹிம் மாலை 6:15 மணிக்கு தர்காவிற்கு செல்ல வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். மாலை 5:00 மணிக்கு மேல் யாருக்கும் அனுமதி இல்லை எனக் கூறினர். அதற்கு இப்ராஹிம் காவல்துறையை மதிக்காமல் இரவு 8:00 மணிக்கு மேல் கொடி ஏற்ற சென்றுள்ளனர் அவர்களை அனுமதிக்கிறீர்கள். ஆனால் 3 பேர் செல்வதற்கு அனுமதிக்க மறுக்கிறீர்கள். நாங்கள் தொழுகைக்கு தான் செல்கிறோம். மாட்டுக்கறி சாப்பிட்டவர்களை எப்படி அனுமதித்தீர்கள்.

தி.மு.க., முஸ்லிம் என்றால் அனுமதிப்பீர்கள். பா.ஜ., முஸ்லிம் என்றால் தடுப்பீர்களா. இரவு 8:00 மணிக்கு மேல் கொடி ஏற்ற சென்ற 10 பேரை கைது செய்தீர்களா. நான் சட்டத்தை மதிக்கிறேன். போலீசாருக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறேன் என்றார்.

அதற்கு உதவி கமிஷனர் சசி பிரியா, ஆண்டு தோறும் என்ன நடைமுறை நடக்கிறதோ அதைத்தான் இந்த ஆண்டும் செயல் படுத்தி உள்ளோம். புதிதாக எதுவும் செய்யவில்லை என்றார். அதற்கு இப்ராஹிம், புதிதாக மாட்டுக்கறி சாப்பிட்டவர்களை கைது செய்தீர்களா.

சட்டத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். விருப்பத்தின் அடிப் படையில் எதுவும் செய்யக்கூடாது. 2000 ஆண்டுகளாக தீபத்துாணில் தீபம் ஏற்றி வந்துள்ளனர். காலம் காலமாக இருந்ததை நீதிமன்றம் தீர்ப் பளித்தால் அதை போலீசார் ஏற்றுக்கொள்ள மறுக் கிறீர்கள் என்றார். இது சம்பந்தமான மேல்முறையீடு நீதிமன்றத்தில் உள்ளது என திரும்பத் திரும்ப உதவி கமிஷனர் சசி பிரியா தெரிவித்துக் கொண்டே இருந்தார்.

தி.மு.க., ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. சந்தனக்கூடு திருவிழாவில் இஸ்லாமியராகிய நான் தர்காவில் வழிபடுவதை தடை செய்கிறீர்கள். நான் மலை மேல் செல்லகூடாது என்பதற்கு சட்ட விதிகள் அல்லது நீதிமன்ற உத்தரவு எதுவும் உள்ளதா. மாலை 5:00 மணிக்கு மேல் மலைக்கு யாரும் செல்ல அனுமதிக்கப் படுவது இல்லை. ஆனால் திருவிழா காலங்களில் வழக்கம் போல் அனு மதிக்கப்படுவதாக கூறு கிறீர்கள். சிவராத்திரிக்கு ஏன் ஹிந்துக்களை அனுப்ப வில்லை.

மாட்டுக்கறி பிரியாணி சாப்பிடுவதற்கு நீதி மன்றம் உத்தரவு உள்ளதா. நாளை எத்தனை மணிக்கு என்னை மேலே செல்ல அனுமதிப்பீர்கள் என்றார். அதற்கு உதவி கமிஷனர், நேரம் குறிப்பிட்டு கூற இயலாது. நாளை காலை சூழ் நிலையை பொறுத்து தான் முடிவு எடுக்க முடியும் என்றார். 20 நிமிட வாக்கு வாதத்திற்கு பின்பு வேலுார் இப்ராஹிம், பா.ஜ., நிர்வாகிகள் அருகில் உள்ள பழநி ஆண்டவர் கோயில் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

வேலுார் இப்ராஹிம் உட்பட 11 பேர் கைது

இரவு 10:15 மணி வரை தர்ணாவில் ஈடு பட்டுக் கொண்டு இருந்த வேலுார் இப்ராஹிமிடம் நாளை காலை மலை மேல் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர். பின் அவர் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி சிறுவர்களுக்கு ஊட்டி னார். தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து கைதாகி விடுதலையாகிய பெண்களுடன் சேர்ந்து கும்மி பாட்டு பாடி நடனமாடினார். போலீசார் வந்து, அனுமதி இன்றி தர்ணாவில் ஈடுபட்டதாக கூறி வேலூர் இப்ராஹிம் உட்பட 11 பேரை கைது செய்து தனியார் மண்ட பத்தில் தங்க வைத்தனர்.

'சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருக்கு'

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி மதுரை நரிமேட்டை சேர்ந்த பூர்ணசந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்தார். வேலுார் இப்ராஹிம் நேற்று பூர்ணசந்திரன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறியதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முஸ்லிம்கள் நாங்களும் துணை நிற்போம். சமய நல்லிணக்கத்திற்கு கேடாக தி.மு.க., ஆட்சி நடக்கிறது என்று பேசிய பா.ஜ., நிர்வாகியின் வீட்டுக்கு முகமூடி அணிந்து சென்ற சிலர் அவரை மிரட்டுகின்றனர். அந்தளவு சட்டம் ஒழுங்கு சீரழிந்து இருக்கு. தே.ஜ., கூட்டணி வெல்லும் என்ற பயம் தி.மு.க.,வுக்கு வந்துள்ளது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பா.ஜ.,வுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் மீது அடக்குமுறையை துாண்டிவிடுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை. அதற்காக கைது செய்தாலும் மீண்டும் வந்து களத்தில் நிற்போம். எங்களின் பலிதானத்திற்கு பிறகு தான் அங்கு தீபம் ஏற்றப்படும் என்றால் பல்லாயிரம் முஸ்லிம்களும் அதற்கும் தயாராக இருப்போம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 6 மாதத்திற்குள் மக்கள் பயன் பாட்டுக்கு வரப்போகிறது. மெட்ரோ ரயில் தொடர்பாக நீங்கள் கொடுத்த அந்த ஆவணங்கள் முறையானதாக இல்லை. அதுபற்றி மத்திய அரசு கேட்டதற்கு பதில் சொல்ல துப்பில்லை. தமிழக மக்கள் தெளிவானவர்கள். இந்தத் தேர்தலில் உங்களுக்கு பாடம் கற்பிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us