UPDATED : மே 19, 2024 03:29 AM
ADDED : மே 19, 2024 12:31 AM

புதுடில்லி: தமிழகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தி.மு.க., - எம்.பி.,க்கள் அதிக அளவில் வெற்றி பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, தி.மு.க.,வின் பார்லிமென்ட் குழு தலைவராக டி.ஆர். பாலு உள்ளார். இந்நிலையில், 'இவர் மீண்டும் பார்லிமென்ட் கட்சித் தலைவராக நியமிக்கப்படுவாரா?' என, கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
'பாலுவிற்கு 82 வயதாகி விட்டது. ஒரு இளைய தலைவர்; நன்றாக பார்லிமென்டில் பேசக் கூடியவர். எதிர்க்கட்சி தலைவர்களுடன் நட்புடன் இருக்கக் கூடியவர் என, பல தகுதிகள் கொண்ட ஒருவர் தலைவராக வருவார்' என, சொல்லப்படுகிறது.
மேலும், 'இப்போதுள்ள உதயநிதியின் ஆதரவு எம்.பி.,க்கள் பாலுவிற்கு எதிராக உள்ளனர். இதனால் ராஜாவிற்கு இந்த பதவி கிடைக்கலாம்' என்கின்றனர். ஆனால் சில தி.மு.க., தலைவர்கள் வேறு விதமாக சொல்கின்றனர். 'மேலே சொன்ன அனைத்து தகுதிகளும் உள்ளவர் கனிமொழி. வடமாநில தலைவர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பவர்; அத்துடன் குடும்ப உறுப்பினர். எனவே, அவர் பார்லிமென்ட் தலைவராக நியமிக்கப்படலாம்' என்கின்றனர்.

