தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ 'இண்டி இல்லாமல் வேறு கூட்டணி ஏன்?': ராகுல் கோபம்

'இண்டி இல்லாமல் வேறு கூட்டணி ஏன்?': ராகுல் கோபம்

'இண்டி இல்லாமல் வேறு கூட்டணி ஏன்?': ராகுல் கோபம்

14


UPDATED : செப் 13, 2026 03:53 AM

ADDED : செப் 13, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

14

UPDATED : செப் 13, 2026 03:53 AM ADDED : செப் 13, 2026 03:51 AM


14
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சமீபத்தில், முதல்வர் விஜய் தலைமையில், மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி தொடங்கப்பட்டது. இதில், காங்., விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் காங்., இருந்தாலும், ராகுலுக்கு இதில் வருத்தம் என, சொல்லப்படுகிறது. 'இதுவரை ஏன் இண்டி கூட்டணியில் விஜய் சேரவில்லை; தனியாக ஒரு கூட்டணியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன?' என, அவர் கோபப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக, டில்லி காங்., மூத்த தலைவர் ஒருவர் தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூரிடம் பேசி, ராகுல் வருத்தப்படுவதாக சொல்லியுள்ளாராம். 'இது தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான கூட்டணி மட்டுமே; இந்தியாவிற்கானது அல்ல' என, சொல்லியுள்ளார் தாகூர்.

மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வை எதிர்த்து காங்., உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, தேசியவாத காங்., ஆகியவை இணைந்து, 'மகா விகாஸ் அகாடி' என்ற கூட்டணியை உருவாக்கி, சட்டசபை தேர்தலை சந்தித்தன. அதே போல் தான், இந்த தமிழக கூட்டணி என்கிறாராம் தாகூர்.

ஆனால், இந்த பதிலால் ராகுல் சமாதானம் அடையவில்லை. இன்னொரு பக்கம், கூட்டணி தொடர்பாக மாணிக்கம் தாகூர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதால், அவருக்கு முக்கியத்துவம் கிடைத்து விட்டது என்றும், அது, த.வெ.க.,வினருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கூட்டணி துவங்கிய அன்றே பிரச்னைகளும் ஆரம்பித்து விட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us