தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/2 அடி உயர எருமைக்கு ஒரு கோடி ரூபாயா?

2 அடி உயர எருமைக்கு ஒரு கோடி ரூபாயா?

2 அடி உயர எருமைக்கு ஒரு கோடி ரூபாயா?


ADDED : நவ 26, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 04:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலையில் சிக்கிய மகள்; தாயின் பிடியால் தப்பினார்


மேற்கு வங்கத்தின் திகா கடற்கரைக்கு பொழுதுபோக்கச் சென்றனர், தாயும் மகளும். தொட்டுச்செல்லும் கடல் அலைகளில் கால்கள் நனைந்தபடி அமர்ந்து கொண்டு இருவரும் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வந்த ராட்சத அலை, இருவரையும் கடலுக்குள் இழுத்துச்சென்று வீசியது. தாயும், மகளும் மீண்டு வர முயற்சித்தாலும், அடுத்தடுத்த அலைகளில் சிக்கி மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

Image 1650771

கடைசியில், கடற்கரையில் இருந்த மற்ற அனைவரும் சேர்ந்து இருவரையும் காப்பாற்றினர். அலை இழுத்துச் சென்றது முதல் மீட்கப்பட்டது வரை, தாய், தன் மகளின் கையை இறுகப் பிடித்தபடியே இருந்தார்; இதுவே இருவரும் தப்பியதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

மது பிரியர்களுக்கு 'செக்'; ம.பி.,யில் சூப்பர் திட்டம்


ம.பி., மாநிலத்தில் மது வாங்கச் செல்லும் 'குடி'மகன்கள், மதுக்கடை முன் இருக்கும் டாக்டர்களை சந்தித்த பிறகே மது வாங்க முடியும். சாகர் மாவட்டத்தில் இந்த நடைமுறை அமல் செய்யப்பட்டிருக்கிறது. 'குடி'மகன்களின் உடல் நலம் பற்றி டாக்டர்கள் ஆராய்வர். சுகாதாரக் குழுவினர், உடனுக்குடன் ரத்த மாதிரிகளை பரிசோதிப்பர்.

Image 1650772

குறிப்பாக, கல்லீரல், சிறுநீரக செயல்பாடுகள் ஆராயப்படும். அதிகப்படியாக மது குடித்தால் ஏற்படும் பாதிப்பு பற்றி டாக்டர்கள் அறிவுரை கூறுவர். இதை எல்லாம் கடந்தால்தான், மது வாங்க முடியும். மொடாக்'குடி'யர்கள், கடுமையான உடல் பாதிப்பு இருந்தும் குடிப்பவர்களை தடுக்கும் நோக்கத்தில் கலெக்டரின் அறிவுரைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவில் சிக்கினான் நேர்மையான திருடன்


உ.பி., புலந்த்சாஹர் மாவட்டத்தில் கடை உரிமையாளர், ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறார். அருகே செல்லும் வேலைக்காரர், முதலாளியின் சட்டையை எடுக்கிறார். அதன் பாக்கெட்டில் 500 ரூபாய்களை கொண்ட கட்டு இருக்கிறது. ஒரே ஒரு நோட்டை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை சட்டையில் வைத்து விடுகிறார். மறுநாள் கடையின் 'சிசிடிவி' காட்சிகளை பார்த்த உரிமையாளர், ஒற்றை நோட்டு எடுத்த காட்சியை பார்த்து வேலைக்காரரிடம் கேட்கிறார். உடனடியாக, எடுத்த 500 ரூபாயை திருப்பிக் கொடுத்த வேலைக்காரர், அப்போதே கடையில் இருந்து வெளியே சென்று விட்டார். மீண்டும் வேலைக்கு வரவில்லை.

Image 1650773

வலைதளத்தில் பரவிய இந்த வீடியோவை பார்த்த பலரும், பல்லாயிரம் ரூபாய் கைக்கு எட்டும் நிலையில் இருந்தாலும், வெறும் 500 ரூபாய் மட்டுமே திருடிய அவன் நேர்மையான திருடன் என்று என்று கமென்ட் செய்கின்றனர்.

2 அடி உயர எருமைக்கு ஒரு கோடி ரூபாயா?


உலகின் மிகப்பெரிய கால்நடை சந்தைகளில் ஒன்றான புஷ்கர் மேளா, ராஜஸ்தானில் நடக்கிறது. இதில் கொண்டு வரப்பட்ட 'பிங்கி' என்ற 2 அடி உயரம் மட்டுமே கொண்ட எருமை மாட்டுக்கு, அதன் உரிமையாளர் ஒரு கோடி ரூபாய் விலை சொன்னார். எருமையின் விசித்திரமான தோற்றமும், அதன் விலையும், பலரையும் அருகில் வந்து வேடிக்கை பார்க்க வைத்தன. மலைக்க வைத்த விலையால், யாரும் அந்த எருமையை வாங்க முன்வரவில்லை.

இந்திய சடங்குகளுடன் ஜப்பானியர் திருமணம்


Image 1650774

ஹிரோ சிஹாரா, சிஷூ இருவரும் ஜப்பானிய தம்பதி. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 2022ல் விவாகரத்து செய்தனர். ஓராண்டுக்கு பிறகு சந்தித்த இருவரும், மீண்டும் இணைந்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்தனர். நண்பரின் திருமணத்தில் கலந்து கொள்ள இந்த ஜோடி இந்தியா வந்தனர். லக்னோவில் திருமண சடங்குகளை கண்டதும், தம்பதிக்கு தாங்களும் அதேபோல் திருமணம் செய்ய ஆசை வந்தது. அதன்படி இந்திய பாரம்பரிய சடங்குகளுடன் ஜப்பானிய தம்பதியின் திருமணம், உ.பி., கோமதி நகர் ராதா கிருஷ்ணர் கோவிலில் நடந்தது.

கேலிக்கு ஆளானது மணமக்கள் ஊர்வலம்


Image 1650775

தங்கள் திருமணம் வித்தியாசமாக இருக்க வேண்டும்; ஊரே பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது இப்போது அதிகரித்து விட்டது. அந்த வகையில், மணமக்கள் ஒளிபுகும் பந்து வடிவ பலுானுக்குள் இருந்தபடி நடந்து வரும் வீடியோ, வலைதளங்களில் பரவி வருகிறது. வட மாநிலத்தில் நடந்த இந்த திருமண நிகழ்வை கண்ட வலைதள பிரியர்கள், 'கோவிட் முன்னெச்சரிக்கை திருமணம் போலிருக்கிறது' என்று கிண்டல் செய்கின்றனர். 'இந்த யோசனையை கூறியவர், மணமக்களின் விரோதியாகத்தான் இருப்பார்' என்கிறார், இன்னொருவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us