தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தேசியக்கொடிக்கு பிரதமர் மோடி அளித்த மரியாதை..: அந்துமணி பதில்கள்

தேசியக்கொடிக்கு பிரதமர் மோடி அளித்த மரியாதை..: அந்துமணி பதில்கள்

தேசியக்கொடிக்கு பிரதமர் மோடி அளித்த மரியாதை..: அந்துமணி பதில்கள்

3


ADDED : நவ 23, 2026 05:15 AM

Follow on GoogleFavourite on Google

3

ADDED : நவ 23, 2026 05:15 AM


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அ.குணசேகரன், புவனகிரி:

சென்னை கொளத்துாரில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவாரா?



அப்படிப்பட்ட தவறை ஸ்டாலின் ஒருநாளும் செய்யமாட்டார்; அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி அல்லவா!

ர.புஷ்பராஜ், ராஜபாளையம்:

பிலிப்பைன்ஸ் நாட்டின், மணிலாவில் நடைபெற்ற, 'ஆசியான்' மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு, இந்திய பாரம்பரிய கலை பொருட்களை பிரதமர் மோடி பரிசளித்துள்ளாரே?



எல்லா தலைவர்களும் அதை விரும்புவர் அல்லவா! மேலும், குழு புகைப்படம் எடுக்கும்போது, தான் நிற்க வேண்டிய இடத்தை குறிக்க, தரையில் ஒட்டப் பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை எடுத்து, தன் சட்டைப் பையில் மோடி பத்திரப்படுத்தியதை கவனித்தீர்களா?

சி.சசிகலா, விருதுநகர்:

'நாட்டின் சுகாதாரம், மிக மோசமான நிலையில் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பை உண்டாக்கும்' என, உச்ச நீதிமன்றம் வருத்தப்பட்டுள்ளதே?



நாட்டின் சுகாதாரம் என்பது அரசின் கடமை மட்டுமல்ல, அது நம் அனைவரின் தலையாய கடமையும் என, ஒவ்வொரு குடிமகனும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்; அப்போது தான் துாய்மை இந்தியா சாத்தியப்படும்.

அ.ரவீந்திரன், கன்னியாகுமரி:

போதையில் சிக்காமல் இளைஞர்களைக் காக்க, பிரதமர் மோடி என்ன செய்யப் போகிறார்?



அழிக்கவே முடியாத சக்தி என கருதப்பட்ட நக்சல்களை பூண்டோடு அழிக்கவில்லையா? அதேபோல் மக்கள் சக்தியுடன் சேர்ந்து, விரைவில் போதையையும் அழிப்பர் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும்!

காகை ஜெ.ரவிகுமார், காங்கேயம்:

கிரிக்கெட் வீரர் தோனியை, இனி மைதானத்தில் பார்க்க முடியாதா?



Image 1649292

பயிற்சியாளராக பார்க்கலாமே!

எல்.என். சிவகுமார், சென்னை:

'தி.மு.க.,வில் யாருக்கும் பெரிய பணபலம் கிடையாது' என்கிறாரே, தி.மு.க., முன்னாள் அமைச்சர் ரகுபதி?



பண பலம் இல்லையெனில், தேர்தல்களில் போட்டியிட, இவரது தலைவர், 'சீட்'டே கொடுக்க மாட்டாரே... ஒருவேளை, தன்னை சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட வைத்தால், தோற்று விடுவோம் என்ற பயமோ ரகுபதிக்கு?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us