தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ மன அழுத்தத்தில் சிக்கும் போலீசார்; கைவிடப்பட்டதா மகிழ்ச்சி திட்டம் 

 மன அழுத்தத்தில் சிக்கும் போலீசார்; கைவிடப்பட்டதா மகிழ்ச்சி திட்டம் 

 மன அழுத்தத்தில் சிக்கும் போலீசார்; கைவிடப்பட்டதா மகிழ்ச்சி திட்டம் 

7


ADDED : ஆக 22, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 05:33 AM

7


7
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் சிக்கித்தவிக்கும் போலீசாருக்காகவும், அவரது குடும்பங்களுக்காகவும் துவங்கப்பட்ட, 'மகிழ்ச்சி' திட்டம் நிதி ஒதுக்கீடு இன்றி முடக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2021ம் ஆண்டு நவ., மாதம், தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் சார்பில், போலீசாருக்கான மகிழ்ச்சி திட்டம் சென்னையில் முதலில் துவக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக பிற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

கோவை , சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 2025-26 ம் பட்ஜெட் கூட்டத்தொடரில் விரிவுபடுத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேற்கு மண்டலத்திற்காக 30.75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அரசாணை வெளியானது. ஆனால், அந்த நிதி முழுமையாக இதுவரை விடுவிக்கப்படவில்லை. மேலும், 2026-27-ம் ஆண்டுக்கான புதிய அரசாணையும் இதுவரை வெளியிடப்படாததால், இத்திட்டம் செயல்படாமல் முடங்கியுள்ளது.

போலீசார் அன்றாடம் அதிக அழுத்தமான சூழலில் பணிபுரிய வேண்டியிருப்பதால், பலர் மது, ஆன்லைன் சூதாட்டம் போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி, பொருளாதார நெருக்கடி, குடும்ப சிக்கல் என பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக ஆண்டுதோறும், 40 போலீசார் தற்கொலை செய்துகொள்வதாக காவல்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பாண்டில் இதுவரை, 18 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதுபோன்றவர்களை மீட்கவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மேலும், தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் ஆராய்ச்சிகளின் படி, கோவை உள்ளிட்ட மேற்கு மண்டல மாவட்டங்களில் மட்டும், 2,816 போலீசாருக்கு மனநல ஆலோசனை தேவைப்படுவதாக முன்பே அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ' மகிழ்ச்சி திட்டத்தின் கீழ், 4000 போலீசார் இதுவரை பயன்பெற்றுள்ளனர். தற்போது நிதி பற்றாக்குறையால் அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை. இதுகுறித்து மேலிடத்திற்கு தெரிவித்தும் தற்போது வரை நடவடிக்கை இல்லை. மீண்டும் செயல்படுத்தினால், மனஅழுத்தத்தில் உள்ள பல போலீசார் பயன்பெறுவார்கள் , ' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us