ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு: கூட்டணியில் இணைய அச்சாரம்?
ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு: கூட்டணியில் இணைய அச்சாரம்?
ADDED : ஆக 01, 2025 04:42 AM

முதல்வர் ஸ்டாலினை, சென்னையில் அவரது இல்லத்தில், தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா நேற்று திடீரென சந்தித்தார்.
முதல்வர் ஸ்டாலின், கடந்த மாதம் 21-ம் தேதி நடைபயிற்சி சென்றபோது, தலைசுற்றல் ஏற்பட்டது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, 'ஆஞ்சியோ' சிகிச்சை அளிக்கப்பட்டது; பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டது. சிகிச்சைக்கு பின், கடந்த 27ல், அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்துக்கு, தே.மு.தி.க., பொதுச் செயலர் பிரேமலதா சென்றார்.
குணமடைய வாழ்த்து அங்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, முதல்வரின் மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் வேலு உடன் இருந்தனர்.
சந்திப்புக்கு பின், பிரேமலதா கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் விசாரித்தோம். முதல்வர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்; 'நன்றாக இருக்கிறேன்' என்றார். சீக்கிரம் அவர் குணமடைய வாழ்த்து தெரிவித்தோம். என்னுடன் தே.மு.தி.க., நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி வந்தனர்.
இது நட்பு ரீதியிலான, குடும்ப ரீதியிலான சந்திப்பு மட்டும் தான். அவரை சந்தித்ததில், 100 சதவீதம் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை.
யாருடன் கூட்டணி என்பதை தற்போது கூற முடியாது. கூட்டணி பற்றி நேரம் வரும்போது அறிவிப்பேன். வரும் 3ம் தேதி முதல் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செல்கிறோம். கும்மிடிப்பூண்டியில் ஆரம்பித்து, கன்னியாகுமரி வரை முதற்கட்ட பயணம் மேற்கொள்கிறோம். கடலுரில் ஜன., 9ல் தே.மு.தி.க., மாநாடு நடத்துகிறோம்.
'இல்லம் தேடி; உள்ளம் நாடி' என்ற முழக்கத்துடன் நிர்வாகிகள் சந்திப்பு; விஜயகாந்தின் ரத யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரேமலதா சந்திப்பு குறித்து, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், 'நட்புடன் நலம் விசாரித்தமைக்கு நன்றி' என பதிவிட்டுள்ளார்.
இருதரப்பும் நலம் விசாரிப்பு சம்பந்தமாகவே சந்திப்பு நடந்ததாக கூறினாலும், அரசியல் வட்டாரங்களில் வேறு விதமாக கூறுகின்றனர்.
அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., முரண்பட்டு நிற்கிறது. தி.மு.க., தலைமையின் செயல்பாடுகள் ம.தி.மு.க.,வுக்கும், அக்கட்சியின் செயல்பாடுகள் தி.மு.க., தலைமைக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.
இ தனால், கூட்டணியில் இருந்து ம.தி.மு.க.,வை வெளி யேற்ற தி. மு.க., தலைமை முடிவெடுத்து விட்டது.
இதை அறிந்ததும், ம.தி.மு.க.,வும் மாற்று ஏற்பாடுகளில் களம் இறங்கி, பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் இணைய முடிவெடுத்து, அதற்கேற்ப பேச்சுகளை துவங்கி விட்டது.
இந்நிலையில், கூட்டணியி ல் ம.தி.மு.க.,வுக்கு பதிலாக, தே.மு.தி.க.,வை கொண்டு வர, தி.மு.க., தலைமை முடிவெடுத்து, அதற்கான ரகசிய வேலைகளை ஏற்கனவே துவங்கி இருந்தது.
நினைவு மண்டபம் மு தல் கட்டமாக, விஜயகாந்துக்கு சொந்தமான மாமண்டூர் ஆண்டாள் அழகர் கல்லுாரியை, தி.மு.க.,வைச் சேர்ந்தவர் இயக்குநராக இருக்கும் பிரபல கல்வி நிறுவனத்துக்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்ய, தி.மு.க., அமைச்சர் வேலு வாயிலாக காய் நகர்த்தப்பட்டு, அது வெற்றிகரமாக ந டந்து முடிந்தது.
இ தைத் தொடர்ந்தே, பிரேமலதாவும், சுதீஷும் நலம் விசாரிப்பதாகக் கூறி, மு தல்வர் ஸ்டாலினை வீடு தேடிச் சென்று சந்தித்து திரும்பி உள்ளனர்.
இதன் அடுத்த கட் டமாக, தமிழக அரசு சார்பில் விஜயகாந்துக்கு நினைவு மண்டபமும், விஜயகாந்த் நினைவிடம் இருக்கும் கோயம்பேடு சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்டும் அறிவிப்பையும் வெளியிட உள்ளனர். அடுத்தடுத்த கட்டங்களில், தி.மு.க., - தே.மு.தி.க., கூட் டணி உருவாகும்.
இவ்வாறு அவ் வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் - .