sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி: அரசு உத்தரவு

/

பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி: அரசு உத்தரவு

பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி: அரசு உத்தரவு

பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி: அரசு உத்தரவு


UPDATED : பிப் 03, 2024 02:37 AM

ADDED : பிப் 03, 2024 01:30 AM

Google News

UPDATED : பிப் 03, 2024 02:37 AM ADDED : பிப் 03, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் போது, கூடுதலாக பெறப்படும் தளபரப்பு குறியீடான பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நகர், ஊரமைப்பு சட்டப்படி, புதிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தும் போது, நிலத்தின் அளவுகள் அடிப்படையில், கட்டட பரப்பளவு வரையறுக்கப்பட்டு உள்ளது.

3.5 மடங்கு அனுமதி


ஒரு நிலத்தின் மொத்த பரப்பளவில், எவ்வளவு பரப்பளவுக்கு கட்டடம் கட்ட வேண்டும் என்பதற்கு, தள பரப்பு குறியீடான எப்.எஸ்.ஐ., வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது நிலத்தின் பரப்பளவில், 2 முதல் 3.5 மடங்கு வரை கட்டட பரப்பளவு அனுமதிக்கப்படுகிறது.

இதற்கு மேல் கூடுதலாக தள பரப்பளவு அனுமதி தேவைப்பட்டால், கட்டணம் செலுத்தி பிரீமியம் எப்.எஸ்.ஐ., பெறலாம்.

இதில், எவ்வளவு சதுர அடி கூடுதலாக கட்டப்படுகிறதோ, அதற்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதிக உயரமில்லாத கட்டடங்களுக்கு நிலத்தின் வழிகாட்டி மதிப்பில், 50 சதவீத தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும்.

சலுகை நீட்டிப்பு


அடுக்குமாடி கட்டடங்கள் என்றால், வழிகாட்டி மதிப்பில், 40 சதவீத தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்நிலையில் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் இருந்து, 1,640 அடி வரையிலான பகுதிகளில் கட்டப்படும் கட்டடங்களுக்கு, பிரீமியம் எப்.எஸ்.ஐ., கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாக, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தது.

தற்போது, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும், ஐந்து வழித்தடங்களுக்கு இச்சலுகை வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, சென்னை கடற்கரை - வேளச்சேரி, வேளச்சேரி - பரங்கிமலை, கடற்கரை - வண்டலுார், கடற்கரை - மீஞ்சூர், சென்ட்ரல் - திருநின்றவூர் வழித்தடங்களில் இச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை மற்றும் அரசிதழ் அறிவிப்பை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் சமயமூர்த்தி பிறப்பித்துள்ளார்.

பயன் என்ன?

உதாரணமாக, இந்த வழித்தடத்தில் 1 சதுர அடி நிலத்துக்கு, 10,000 ரூபாய் வழிகாட்டி மதிப்பாக இருந்தால், இதுவரை பிரீமியம் எப்.எஸ்.ஐ., பெறுவோர், சதுர அடிக்கு, 5,000 ரூபாய் கட்ட வேண்டும். இது தற்போது, 2,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பிரீமியம் எப்.எஸ்.ஐ., பெற ஏற்படும் செலவு குறைவதால், வீடு வாங்குவோரின் சுமை குறையும் என்று கூறப்படுகிறது.








      Dinamalar
      Follow us