தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/இடைத்தேர்தலுக்கு தயாராக இருங்கள்: அதிமுக - மா.செ.,க்களுக்கு பழனிசாமி உத்தரவு

இடைத்தேர்தலுக்கு தயாராக இருங்கள்: அதிமுக - மா.செ.,க்களுக்கு பழனிசாமி உத்தரவு

இடைத்தேர்தலுக்கு தயாராக இருங்கள்: அதிமுக - மா.செ.,க்களுக்கு பழனிசாமி உத்தரவு

6


ADDED : நவ 02, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

6

ADDED : நவ 02, 2026 05:22 AM


6
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை - ராயப் பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று அக்கட் சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டம் முடிந்த பின், காலியாக உள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகள் உள்ள மாவட்ட செயலர்களுடன், பழனிசாமி தனியே ஆலோசனை நடத்தினார்.



கூட்டத்தில், பழனிசாமி பேசியது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சி வெற்றி பெற்றுள்ளது; இந்த தேர்தல் நமக்கு பாடமாக அமைந்துள்ளது. அடுத்து வரும் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றியை உறுதி செய்யும் வகையில், தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும்.

மாவட்டச் செயலர்களுக்கு, ஒவ்வொரு தொகுதியிலும், வார்டுகள் பிரித்து தேர்தல் பணி பொறுப்பு ஒப்படைக்கப்படும். தேர்தல் வெற்றிக்கு வேகமாக உழைக்க அனைவரும் தயாராக வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள், தி.மு.க., ஆட்சியில் தான் செயல்படுத்தப்பட்டன. அதை பற்றி நாம் எந்த கருத்தும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இனிமேல் வாக்காளர்கள் பட்டியல் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

உள்ளூர் மக்களின் பிரச்னைகளை மையப்படுத்தி, போராட்டங்களை நடத்த வேண்டும். தலைமையிலிருந்து அறிவிக்கப்பட்ட, கட்சியின் ஆண்டு விழா, பொதுக்கூட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும்.

மழை காரணமாக, சில மாவட்டங்களில், கூட்டம் நடத்தப்படவில்லை. நடக்காத ஊர்களில் கூட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும். புயல், மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, பழனிசாமி தெரிவித்தார். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us