தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ வாழ்விடங்களை பாதுகாத்தால் வரையாடுகளை பாதுகாக்கலாம்

வாழ்விடங்களை பாதுகாத்தால் வரையாடுகளை பாதுகாக்கலாம்

வாழ்விடங்களை பாதுகாத்தால் வரையாடுகளை பாதுகாக்கலாம்


UPDATED : அக் 07, 2024 04:56 AM

ADDED : அக் 07, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2024 04:56 AM ADDED : அக் 07, 2024 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: நீலகிரி மாவட்டம், முதுமலை முக்கூர்த்தி தேசிய பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில், நம் மாநில விலங்கான வரையாடுகள் அதிகளவில் உள்ளன. முக்கூர்த்தியில், 2018ல் நடந்த கணக்கெடுப்பு படி, 568 வரையாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. புல்வெளி பகுதிகளை வாழ்விடமாக கொண்ட இவை, தற்போது அழியும் பட்டியலில் உள்ளன.

புல்வெளிகள் பகுதிகள் ஆக்கிரமிப்பு; வெளிநாட்டு களைச் செடிகள் அதிகரிப்பு; வனத்தீ, போன்ற காரணங்களால் இவற்றின் வாழ்விடம் சுருங்கி விட்டது. அழிவின் விளிம்பில் உள்ள இவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ரூ. 25.14 கோடி


வரையாடுகளை பாதுகாக்க, 2022ல் மாநில அரசு, 25.14 கோடி ரூபாய் ஒதுக்கியது. திட்டத்தின் கீழ், வரையாடுகள் குறித்து ஆய்வு செய்தல், நோய் கண்டறிதல், வரையாடு வாழ்விடமான புல்வெளிகளை மீட்டெடுத்தல், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர்.

Image 1329814


வரையாடுகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அக்., 7ம் தேதி - இன்று, வரையாடு உரையாடல் தினத்தை வனத்துறையினர் கடைப்பிடித்து வருகின்றனர். இந்நாளில், அனைத்து பகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

பிரகர்தி அறக்கட்டளை நிறுவனர் சுகுமாரன் கூறுகையில், ''நீலகிரி வரையாடு பாதுகாப்பு திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தி வருவது வரவேற்ககூடியது. அதே வேளையில் ஆக்கிரமிப்பில் உள்ள இதன் வாழ்விடங்களை மீட்டெடுக்க வேண்டும்.

மக்கள் ஒத்துழைப்புடன் வாழ்விடங்களை பாதுகாப்பதன் மூலம், வரையாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க முடியும்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us