UPDATED : பிப் 06, 2026 02:33 PM
ADDED : பிப் 06, 2026 06:32 AM

நமது நிருபர்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை பிரதமர் மோடி நேற்று தன் பதிலுரையின்போது கடுமையாக விமர்சித்தார். இது குறித்து அவர் பேசியதாவது: பார்லி.,க்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டிருந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பா.ஜ., - எம்.பி., ரவ்நீத் சிங் பிட்டுவை துரோகி என விமர்சித்துள்ளார். இதன் மூலம் அவரது திமிர் பேச்சு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
காங்., கட்சியில் இருந்து இதுவரை நிறைய பேர் வெளியேறி இருக்கின்றனர். சில தலைவர்கள் வேறு சில கட்சிகளுக்கு தாவி இருக்கின்றனர். அவர்களை எல்லாம் ராகுல் துரோகி என அழைக்கவில்லை. ஆனால், பிட்டுவை மட்டும் துரோகி என அழைத்துள்ளார். அதற்கு காரணம் அவர் ஒரு சீக்கியர். தனி மனிதரை மட்டுமல்ல; ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தினரையும் ராகுல் அவமானப்படுத்திவிட்டார்.
சீக்கிய சமூகத்தினர் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார். தேசத்திற்காக பிட்டுவும், அவரது குடும்பத்தினரும் நிறைய தியாகங்கள் செய்து இருக்கின்றனர். பா.ஜ.,வுக்கு மாறியதற்காக தற்போது அவரை துரோகியாக்கிவிட்டனர். ராகுலின் இந்த பேச்சு காரணமாகவே, காங்கிரஸ் அழியப் போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

