வணிக ரீதியான படங்களை ரஜினிகாந்த் விரும்புவதேன்?: அந்துமணி பதில்கள்
வணிக ரீதியான படங்களை ரஜினிகாந்த் விரும்புவதேன்?: அந்துமணி பதில்கள்
ADDED : நவ 06, 2026 06:37 AM

போராட்டக்காரர்களுக்கு காலவரையறை யின்றி, 'டேரா' போட்டு போராடக் கூடாது என உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளதே... வர்த்தகர்களும் இழப்புக் கோரி, கரப்பான் பூச்சிகள் மற்றும் இண்டி கூட்டணி கட்சிகள் மீது வழக்கு பதிய வேண்டும்.

எந்த நாடாக இருந்தாலும், நல்லாட்சி கொடுக்கவில்லை என்றால், மக்களால் புறக்கணிக்கப்படுவர் என்பது நிரூபணமாகி உள்ளது. அவர் கட்சியை சேர்ந்த, ஜேம்ஸ் டலாரிக்கோ என்பவர், டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு இந்திய உணவகத்தில், நம்மூர் அரசியல்வாதி போல் மசால் தோசை தயாரித்து பிரசாரம் செய்து, 'ஸ்டன்ட்'டெல்லாம் அடித்துப் பார்த்தார்... பெரிதாக ஓட்டு தேரவில்லை!
நடிகர் ரஜினிகாந்த் தெளிவானவர்; தன் நடிப்பில் உள்ள நிறை, குறைகளை அறிந்தவர். தன் ஆக் ஷன் மற்றும் ஸ்டைல் தான் தன் பலம் என்று அறிந்து, அதற்கு மேல் பரீட்சார்த்தமான கதாபாத்திரங்களில் நடித்து பெயரை, 'ரிப்பேர்' செய்து கொள்ளாமல், கல்லா கட்டி வருகிறார்; பாராட்டலாம்!
வனத்தில் உள்ள குள்ள நரிகளுக்கு தானே வெண்ணிலா... நகரத்தில் உலா வருபவைக்கு இல்லையே!

சபாஷ்! இப்படி நம் விவசாயம் முன்னேற்றம் அடைந்தால், நம் தேவைகளை நம் மாநிலத்திலேயே பூர்த்தி செய்து கொள்ளலாம்; வர்த்தக ரீதியாக நம் மாநில விவசாயிகளும் முன்னேறுவர்!
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. விலை மலிவாகவும், நல்ல தரத்துடனும் தயாரித்து சந்தைப்படுத்தினால் நாம் ஏன் மற்ற நாட்டு மொபைல் போன்களை வாங்கப் போகிறோம்!
