sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'சாலைகளை அகலப்படுத்த 2,200 கோடி ரூபாய்'

/

'சாலைகளை அகலப்படுத்த 2,200 கோடி ரூபாய்'

'சாலைகளை அகலப்படுத்த 2,200 கோடி ரூபாய்'

'சாலைகளை அகலப்படுத்த 2,200 கோடி ரூபாய்'

8


ADDED : ஏப் 02, 2025 04:36 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 04:36 AM

8


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''மாநில நெடுஞ்சாலைகளை நான்கு மற்றும் இருவழிச் சாலைகளாக மாற்ற, 2,200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்,'' என, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் அமைச்சர் வேலு தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று பொதுப்பணி, நெடுஞ்சாலை துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து, அமைச்சர் வேலு வெளியிட்ட அறிவிப்புகள்:


* 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ், புறவழிச்சாலைகள் அமைத்தல், சாலைகளை அகலப்படுத்தி மேம்படுத்துதல், ஆற்றுப்பாலங்கள், மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற பணிகள், 250 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்

உயர்மட்ட பாலங்கள்


* முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், விருத்தாச்சலம் -- தொழுதுார் சாலை, கொடைரோடு -- வத்தலகுண்டு சாலை, சிவகாசி -- விருதுநகர் சாலை உள்ளிட்ட 220 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள் நான்குவழிச் சாலைகளாகவும், 550 கி.மீ., சாலைகள் இருவழிச் சாலைகளாகவும், 2,200 கோடி ரூபாயில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்

* அனைத்து காலநிலைகளிலும், தங்கு தடையற்ற போக்குவரத்து திட்டத்தின் கீழ், 84 தரைப்பாலங்கள், 466 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்

* சேலம் மாவட்டம் ஆத்துாரில், 180 கோடி ரூபாயிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 370 கோடி ரூபாயிலும், புறவழிச்சாலை அமைக்கப்படும்

* துாத்துக்குடி -- வாஞ்சி மணியாச்சி ரயில்வே சந்திப்பை இணைக்க, 200 கோடி ரூபாயில் புதிய இணைப்புச் சாலை அமைக்கப்படும்

* நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பஸ் நிலையத்திற்கு, 15 கோடி ரூபாயிலும், கடலுார் மாவட்டம் முட்டம் பாலத்திற்கு, 15 கோடி ரூபாயிலும் இணைப்புச் சாலை அமைக்கப்படும்

* ராணிப்பேட்டை விருத்தகசீரக ஆறு, தஞ்சை வெண்ணாறு, திருச்சி கோரையாறு, ஆத்துப் பொள்ளாச்சி ஆழியாறு, காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை செவிலிமேட்டில் பாலாறு, திருக்கோவிலுார், அரகண்டநல்லுார் தென்பெண்ணையாறு ஆகிய, ஆறு ஆறுகளின் குறுக்கே, 295 கோடி ரூபாயில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்

* மதுரை பழங்காநத்தம், நாகர்கோவில் காவல்கிணறு, விருதுநகர் திருத்தங்கல், திண்டுக்கல் மாவட்டம் பழனி, திருவண்ணாமலை, திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர், சென்னை அம்பத்துார், மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில், மேம்மருவத்துார் ஆகிய இடங்களில், 787 கோடி ரூபாயில், 10 ரயில்வே மேம்பாலங்களும், சேலம் -- கொச்சி சாலையில் மரப்பாலத்தில் கீழ்பாலமும் அமைக்கப்படும்

கஸ்டம்ஸ் சாலை


* கடலுார் புறநகர் பகுதி கிராமங்களை, கடலுார், புதுச்சேரி, பண்ருட்டி போன்ற நகரப் பகுதிகளுடன் இணைக்க, கடலுார் கலெக்டர் அலுவலகம் வழியாக கஸ்டம்ஸ் சாலை, 50 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்

* திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை அருகே 18 கோடி ரூபாயில், நகரும் படிக்கட்டுகளுடன் நடை மேம்பாலம் அமைக்கப்படும்

* கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில், 1,000 கி.மீ., நீள ஊராட்சி ஒன்றிய சாலைகள், 1,000 கோடி ரூபாயில், இதர மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்

* கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில், வெள்ளிமலை - சின்ன திருப்பதி வரையுள்ள ஊராட்சி ஒன்றிய சாலைகள், 98.50 கோடி ரூபாயில் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்தப்படும்

* திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரியில், 15 கோடி ரூபாயில் 10 கி.மீ., நீள சுற்றுச்சாலை அமைக்கப்படும்

* ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை, கள்ளக்குறிச்சி, நாகை மாவட்டம், வேளாங்கண்ணி, விழுப்புரம் மாவட்டம் அவலுார்பேட்டை, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுார் ஆகிய ஆறு நகரங்களுக்கு புறவழிச்சாலை அமைக்க நிலம் எடுக்கவும், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, கும்பகோணம், நெல்லை வண்ணாரப்பேட்டை, கரூர் மேலப்பாளையம் ஆகிய நான்கு இணைப்புச் சாலைகளுக்கு நிலம் எடுக்கவும், 285 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

* அரக்கோணம், ஈரோடு மாவட்டம் பாசூர் ஆகிய இரண்டு இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க, 11.85 கோடி ரூபாயில் நிலம் எடுக்கப்படும்

திட்ட அறிக்கை


* விருதுநகர், ராஜபாளையம், கடலுார் புவனகிரி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, நெல்லை களக்காடு, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, தஞ்சை நாச்சியார் கோவில் உள்ளிட்ட 15 புறவழிச்சாலைகள், இணைப்புச் சாலை, மேம்பாலம் அமைக்க 3 கோடி ரூபாயில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

* ஏற்காடு மலை, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் மலைக்கு மாற்றுப் பாதைகள் அமைக்க, 1 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

* திருப்பூர் மாநகருக்கு புறவழிச்சாலை அமைக்கவும், துாத்துக்குடி நகரில் இணைப்புச் சாலை அமைக்கவும், 3 கோடி ரூபாயில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

ராமேஸ்வரம்-தலைமன்னார் பயணியர் கப்பல்


சட்டசபையில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து வேலு நேற்று பேசியதாவது:

தமிழகம் முழுதும் 67,216 கி.மீ., நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதனால் தான்இந்தியாவின் இரண்டாவது பெரும் பொருளாதார மாநிலமாக தமிழகம் முன்னேறியுள்ளது. கருணாநிதி நுாற்றாண்டையொட்டி தமிழகம் முழுதும் நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் 8 லட்சத்து 72,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த நான்காண்டுகளில் முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 6665 கோடி ரூபாயில் 831 கி.மீ., இருவழிச் சாலைகள், நான்குவழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதில் 489 கி.மீ., நீள சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2916 கோடி ரூபாயில் 2038 கி.மீ., இடைவழி சாலைகள் இருவழிச் சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அதில் 1692 கி.மீ., நீள சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கடந்த நான்காண்டுகளில் 1584 உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது 71 ரயில்வே மேம்பால பணிகள் நடந்து கொண்டிருந்தன. சில இடங்களில் நில எடுப்பு பணிகள் முழுமை பெறாமல் இருந்தன.

சிறப்பு நிலம் எடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டன; 36 பணிகள் முடிக்கப்பட்டன. மீதமுள்ள 35 பணிகள் நடந்து வருகின்றன. கடந்தநான்கு ஆண்டுகளில் 858 கோடி ரூபாயில் 25 புதிய ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.

பொது மக்கள் புகார் அளிக்க உருவாக்கப்பட்ட 'நம்ம சாலை' அலைபேசி செயலியில் தெரிவிக்கப்பட்ட 13,300 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை தடுக்க 415 கரும்புள்ளி பகுதிகள் கண்டறியப்பட்டு அதில் 408 மேம்படுத்தப்பட்டு உள்ளன. உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுமத்தின் வழிகாட்டுதலின்படி சாலை பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடலுார், நாகை, ராமேஸ்வரம்,கன்னியாகுமரி துறைமுங்களில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்க 118 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவியுடன் கப்பல் இயக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us