மிஸ்டர் மூளைக்காரன் ஜீவா சொல்லும் 'சர்க்காரியா' சம்பவம்
மிஸ்டர் மூளைக்காரன் ஜீவா சொல்லும் 'சர்க்காரியா' சம்பவம்
ADDED : செப் 13, 2026 04:29 AM

ஜீவா... 'கார்கில் போர்ல வீரமரணம் அடைஞ்ச நம்ம வீரர்கள் குடும்பத்துக்காக, மும்பை கொலாபா கடற்கரையில வீடு கட்டின திட்டத்துல முறைகேடு நடந்தப்போ, மஹாராஷ்டிராவுலேயும், மத்தியிலேயும் ஆட்சியில இருந்த கட்சி எது; அந்த ஊழல் பேரு என்ன'ன்னு இந்த அன்பு பய சைக்கிள் ஸ்டாண்டுல வைச்சு என்னை கேட்டுட்டான்டா...
அய்யய்யோ... நீ என்னடா சொன்னே?
எனக்கெப்படி அது தெரியும் ஜீவா; அதான், 'பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை'ன்னு நம்ம முதல்வர் தி.மு.க.,வைப் பத்தி, சொன்னதை சொல்லிட்டு ஓடியாந்துட்டேன்; நான் ஓடி வர்றப்போ, 'டேய் பக்கடா... அப்போ மத்தியிலேயும், மாநிலத்துலேயும் ஆட்சியில இருந்தது காங்கிரஸ்டா; அந்த ஊழல் பேரு... 'ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டு ஊழல்டா'னு தொண்டை கிழிய அன்பு கத்துனான்!
விடுடா... விடுடா... 'ஊழலைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது; ஊழல் வழக்குகள் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிக்கப்பட வேண்டும்'னு 2011 கட்சி மாநாட்டுல சொன்னது யாருன்னு எனக்கு கூடத்தான் தெரியும்!
யாரு ஜீவா அது?
அது, காங்கிரஸ் கட்சியோட முன்னாள் தலைவர் சோனியா காந்திடா!
டேய்ய்ய்ய் ஜீவா... உனக்கு எப்படிடா இதெல்லாம்...
ச்சீ... ச்சீ... இதையும் அந்த அன்பு பயதான்டா சொன்னான்; துாய்மையான காங்கிரஸ் கட்சியை தன் கூட்டணியில நம்ம முதல்வர் சேர்த்திருக்கிறதைப் பத்தி என் அத்தை மக மனோன்மணிகிட்டே நான் பெருமையா பேசிட்டு இருந்தப்போ, அதை கலைச்சு விடுறதுக்காக நடுவுல பூந்து இதை சொன்னான்டா!
டேய்... டேய்... ஜீவா... வாத்தியார் நம்மளை பார்க்குறாருடா... பேசாதீங்கடா...
அந்த கடைசி பெஞ்சுல பேசிட்டு இருக்குற மூணு கூமுட்டைகளும் எழுந்திருங்கடா... ('ப்ளாஷ்பேக்' நிறைந்தது)
சார்ர்ர்... 'சர்க்காரியா கமிஷன் அறிக்கை' என்ன சொல்லுதுன்னு ஜீவா சொல்லிட்டு இருந்தான் சார்ர்ர்...
யாரு... மூணு பாடத்துல பெயிலான என் மகனா; ஆக... வாத்தி மகன் மக்கு; நாத்துல கோளாறா... இல்ல, நட்ட சேத்துல கோளாறா?
தமிழக சட்டசபை சம்பவங்களால நொந்து போய், ஓட்டு போடச் சொன்னவங்களை ஓரக்கண்ணால பார்க்குறவங்க மாதிரி, குட்டிமணிக்கு பக்கத்துல நிற்குற ஜீவாவை பக்கடா ஏன் இப்படி வெறிக்கிறான்?
ஒரு ப்ளாஷ்பேக்; இரண்டு நிமிடங்களுக்கு முன்...
