தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/தந்தைக்கு அவமானம்; கொந்தளித்த சகோதரிகள்

தந்தைக்கு அவமானம்; கொந்தளித்த சகோதரிகள்

தந்தைக்கு அவமானம்; கொந்தளித்த சகோதரிகள்


ADDED : நவ 18, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரும்பி வந்தது குப்பை; துாய்மையை வென்றது உரிமை


ராஜஸ்தானின் பில்வாரா ரயில் நிலையத்தில், இரு சிறுவர்கள் காலியான, 'கோக் டின்'னை பிளாட்பார கடை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டனர். வெளியே வந்த கடைக்காரர், 'என் கடையில் எதுவும் வாங்காதபோது, என் தொட்டியில் நீங்கள் குப்பை போடக்கூடாது' என்று உத்தரவு போட்டார். 'இது, பொது குப்பைத்தொட்டி அல்ல, என் சொந்த குப்பைத்தொட்டி' என்றும் உரிமை கொண்டாடினார்.

தொட்டிக்குள் கைவிட்டு கோக் டின்னை எடுத்துச் சிறுவர்களிடமே திருப்பிக் கொடுத்தார். சிறுவர்கள் வருத்தத்துடன் டின்னுடன் சென்றனர். வைரலான வீடியோவை கண்ட வலைதளவாசிகள், அந்த கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 'ரயில்சேவா' இந்தப் பதிவுக்குப் பதிலளித்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியுள்ளது.

Image 1646844


கைகுலுக்கிய இளவரசிக்கு கையெழுத்து போட பயம்


வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், இளவரசர் வில்லியமுடன் இந்தியா வந்துள்ளார். மும்பையில் சச்சின் டெண்டுல்கர், இளம் கிரிக்கெட் வீரர்களுடன் இருவரும் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தனர். ரசிகர்களுக்கு சச்சின் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். அவரிடம் கையெழுத்து வாங்கிய சிலர், இளவரசியிடமும் ஆட்டோகிராப் கேட்டனர். அவர் சிரித்துக்கொண்டே மன்னிப்பு கேட்டதுடன், 'என்னால் கையெழுத்திட முடியாது' என்று கூறியபடி, எல்லோருடனும் கைகுலுக்கி உரையாடினார்.

'கையெழுத்துகள் போலியாகவோ, தவறாகவோ பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தால் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் யாரும் எங்கும் கையெழுத்திடுவதில்லை' என்கின்றனர், விவரம் அறிந்தவர்கள்.

Image 1646845


'வீடியோ கேம்' விளையாட விடுமுறை தந்தது நிறுவனம்


நவ.,19ல், 'ஜிடிஏ 6' வீடியோ கேம் வெளியாவதை முன்னிட்டு, இந்திய உள்ளலங்கார நிறுவனமான, 'இண்டே பை சேர்ஸ்கார்ட்' தனது ஊழியர்கள், பயிற்சியாளர்கள், ப்ரீலான்சர்கள் அனைவருக்கும் அன்றைய தினம் விடுமுறை அறிவித்துள்ளது. நிறுவனரே இன்ஸ்டாகிராமில் இதை தெரிவித்துள்ளார். '13 ஆண்டுகள் காத்திருந்த விளையாட்டுக்காக ஒரு நாள் விடுமுறை; நள்ளிரவில் வெளியாகும் விளையாட்டை ஊழியர்கள் கவலையின்றி விளையாடலாம்' என்றார், அவர்.

வீடியோ கேம் ரிலீஸ் முன்னிட்டு ஏற்கனவே, 'லாஜிடெக்' நிறுவனம் தனது 7,000 ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கியுள்ளது. பதிவு வைரலானதும் பலர் நிறுவனத்தைப் பாராட்டினர்; சிலர், 'வேலைவாய்ப்பு உள்ளதா' என்றும் நகைச்சுவையாகக் கேட்டனர்.

Image 1646846


மாணவிக்கு மரியாதை; முதல்வரின் வைரல் சல்யூட்


எர்ணாகுளத்தில் நடந்த அரசு விழா அது. கேரள முதல்வர் சதீசன் மேடையில் இருக்கிறார். மாணவர் காவல் படையை சேர்ந்த மாணவி ஒருவர், மேடைக்கு வந்து முதல்வருக்கு சல்யூட் அடிக்கிறார். சில வினாடிகள், மாணவி சல்யூட் அடிப்பதை முதல்வர் கவனிக்கவில்லை.

அவர் தன் இருக்கையில் அமரப்போகும் வினாடியில் அதை கவனித்துவிட்டார். உடனே, தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றவர், சிரித்துக் கொண்டே மாணவிக்கு சல்யூட் அடித்தார். வீடியோவை பார்த்தவர்கள், மாணவிக்கு மரியாதை அளித்த முதல்வரை பாராட்டுகின்றனர்.

Image 1646847


தந்தைக்கு அவமானம்; கொந்தளித்த சகோதரிகள்


உ.பி., வாரணாசியில் சாலையோர தோசைக் கடையை சகோதரிகள் இருவர் சேதப்படுத்தும் வீடியோ வலைதளங்களில் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சில நாட்களுக்கு முன் அவர்களது தந்தையை தோசைக்கடை ஊழியர்கள் தாக்கிவிட்டனர்.

போலீசில் புகார் அளித்தும் இரண்டு வாரங்களாக நடவடிக்கை இல்லை; பொறுமை இழந்த சகோதரிகள், அந்த கடைக்கே நேரடியாக சென்று விட்டனர். கடையில் இருந்த பொருட்களை துாக்கி வீசி சூறையாடினர்.

'சிசிடிவி' காட்சியில், சகோதரிகளில் ஒருவர் தோசை மாவு பாத்திரத்தைக் கவிழ்த்து, ஊழியர் மீது தண்ணீர் வீசி ஊற்றியதும், அருகிலிருந்தோர் தடுப்பதும் பதிவாகியுள்ளது. வீடியோவை பார்த்த வலைதளவாசிகளில் ஒரு தரப்பினர் சகோதரிகளை ஆதரித்தும், ஒரு தரப்பினர் எதிர்த்தும் பதிவிட்டு வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us