sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

'சூசைடு ட்ரோன்' - 500 கி.மீ., துாரம் பறக்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்: வான்வெளி பாதுகாப்பில் புரட்சி செய்யும் இந்திய நிறுவனங்கள்

/

'சூசைடு ட்ரோன்' - 500 கி.மீ., துாரம் பறக்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்: வான்வெளி பாதுகாப்பில் புரட்சி செய்யும் இந்திய நிறுவனங்கள்

'சூசைடு ட்ரோன்' - 500 கி.மீ., துாரம் பறக்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்: வான்வெளி பாதுகாப்பில் புரட்சி செய்யும் இந்திய நிறுவனங்கள்

'சூசைடு ட்ரோன்' - 500 கி.மீ., துாரம் பறக்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்: வான்வெளி பாதுகாப்பில் புரட்சி செய்யும் இந்திய நிறுவனங்கள்


UPDATED : அக் 09, 2025 12:56 AM

ADDED : அக் 09, 2025 12:48 AM

Google News

UPDATED : அக் 09, 2025 12:56 AM ADDED : அக் 09, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஆப்பரேஷன் சிந்துார்' பதிலடி தாக்குதலுக்கு பின், இந்தியாவில் தயாரிக்கப்படும் 'ட்ரோன்'கள் விஸ்வரூப வளர்ச்சியை நோக்கி செல்கின்றன. மற்ற நாடுகள் போட்டி போட்டு வாங்கத் துவங்கி உள்ளன.

பாகிஸ்தான் மீதான போருக்கு பின், உள்நாட்டில், 'ட்ரோன்' மற்றும் ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு நடவடிக்கைகளை, மத்திய அரசு வேகப்படுத்தியது. முன்பு வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்ட தளவாடங்களை, இப்போது நம் நாட்டிலேயே தயாரிக்கும் பணி வேகமெடுத்துள்ளது.

'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களான, 'கருடா ஏரோஸ்பேஸ், ஏஸ்ட்ரியா' போன்ற நிறுவனங்கள் விவசாயம், கண்காணிப்பு, பாதுகாப்பு, சரக்கு போக்குவரத்து போன்றவற்றுக்கான ட்ரோன்களை உருவாக்கின. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம், 'பிரசாந்த்' என்ற இலகு ரக ஹெலிகாப்டர்களை உருவாக்கி, நம் விமானப் படையில் இணைத்துள்ளது.

இதுபோன்ற புதிய உற்பத்திகள், இந்தியாவின் தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்தி வருகின்றன. ட்ரோன்கள் தற்போது இலக்கு கண்டறிதல், கண்காணிப்பு, ராணுவ பயன்பாடு போன்ற துறைகளில் முக்கிய அம்சமாக மாறி உள்ளன. அடுத்து வரும் நாட்களில், இந்தியாவில் தயாராகும் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், தனி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில், எந்த மாற்றமும் இல்லை.

இப்படி தொழில்நுட்பத்தில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்தியாவில், அதன் பொருட்களை காட்சிப்படுத்தும் வாய்ப்புகளும் அதிகளவில் உள்ளன. நேற்று முன்தினம் சென்னை வர்த்தக மையத்தில், 'ஏரோடிப்கான் 25' எனும் வான்வெளி மற்றும் ராணுவ துறைக்கான சர்வதேச மாநாடு நேற்று முன்தினம் துவங்கியது; இன்று முடிகிறது.

Image 1479665

இதில், 50க்கும் மேற்பட்ட அரங்குகள், சிறு மற்றும் பெரிய நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் பயன்படுத்தப்படும் விமானங்களின் வகை, 'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

அதில் தனித்துவமாக இருந்த ஸ்டார்ட்அப் நிறுவன தயாரிப்புகள்:

ஜி.பி.எஸ்., சிக்னல் இல்லாமல்

இனி பறக்க வைக்கலாம்

சென்னை ஐ.ஐ.டி.,யில் இயங்கும், 'டிரோ லேப்' நிறுவனத்தினர் கூறியதாவது:

ட்ரோன்களை மேம்படுத்த தேவைப்படும் மென்பொருள்களை, இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. பொதுவாக ட்ரோன்கள், ஜி.பி.எஸ்., சிக்னல் தொழில்நுட்ப அடிப்படையில் தான் இயங்குகின்றன. அது இல்லாமலும் அதாவது, 'மேப்' அடிப்படையில், எந்த இடம் என கண்டறிந்து, அதற்கேற்ப ட்ரோன் பறக்கும். கிடங்குகள், சுரங்கப்பாதை போன்ற இடங்களில், ஜி.பி.எஸ்., சிக்னல் கிடைக்காது. அதை மாற்றும் வகையில் மென்பொருள் தயாரித்து வருகிறோம்.

'ரேடியோ மேப் எஸ்டிமேஷன்' என்ற தொழில்நுட்பம் வாயிலாக கிடைக்கும், 'வைபை' சிக்னலை வைத்து மதிப்பீடு வரைபடத்தை உருவாக்கி, ட்ரோன்களை இயக்கலாம். இந்த முயற்சி, விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

'சூசைடு ட்ரோன்'

* சென்னை, பல்லாவரம், 'எக்ஸ் அக்ரோடார்டெக்'

ரூத்ரா எக்ஸ், ரூத்ரா எப்.எக்ஸ்., என, சில வகை ட்ரோன்களை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த வகை ட்ரோன்கள் விவசாயம், கண்காணிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தக்கூடியவை. இதில், ' ருத்ராஸ்ட்ரா' ட்ரோன் எடை மிக குறைவு; இதன் திறன் மிக அதிகம். இதில், மொத்தம் 60 கிலோ சரக்குகளுடன் பறக்க முடியும்.

Image 1479666

இதில், 'பாம் டிராபிக் மெக்கானிஸம்' என்ற தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, எதிரிகளின் இருப்பிடத்தை குறிவைத்து ஏவுகணை பொருத்தினால் போதும், துல்லியமாக தாக்கி வெடிக்கும். இதை, 'தற்கொலை ட்ரோன்' என்று சொல்வர். குறிவைத்த இடத்தில் வெடித்து தானாக சிதறும். கீழே இருந்தபடியே இயக்க முடியும்.

இது தவிர, விவசாயத்திற்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்தல், விதை துாவுதல், நிலத்தை அளப்பது போன்ற பல வேலைகளையும் செய்ய முடியும். போரின்போது வீரர்களின் உயிரையும் இது காக்கும்; எதிரிகளின் இருப்பிடத்தையும் கண்டறிந்து தாக்கும்.

Image 1479668

கிடங்குகளில் அகற்றப்படும் குப்பை ட்ரோன் உதவியுடன் கண்கெடுக்குது அரசு சென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கு, 250 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்துார், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சேகரமாகும் குப்பை, பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ளது. இதனால், 66.52 லட்சம் டன் குப்பை கொட்டப்பட்டு இருப்பதால், கொடுங்கையூரை சுற்றிய பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இதை குறைக்கும் நோக்கில், சென்னை மாநகராட்சி முயற்சி எடுக்கிறது. ஒரு மாதத்துக்கு எவ்வளவு குப்பை சேமிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது என்பதை கண்காணிக்க, தமிழக அரசின் ஆளில்லா விமான தொழில்நுட்ப கழகம் முன்வந்துள்ளது. மாதம் ஒருமுறை ட்ரோன் கேமரா உதவியுடன் கண்காணித்து வருகிறது. இதில் எவ்வளவு டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது போன்ற விபரம், குறைந்த நேரத்தில் கணக்கிடப்பட்டு வருகிறது.



'சூசைடு ட்ரோன்' * சென்னை, பல்லாவரம், 'எக்ஸ் அக்ரோடார்டெக்' ரூத்ரா எக்ஸ், ரூத்ரா எப்.எக்ஸ்., என, சில வகை ட்ரோன்களை இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த வகை ட்ரோன்கள் விவசாயம், கண்காணிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தக்கூடியவை. இதில், 'ருத்ராஸ்ட்ரா' ட்ரோன் எடை மிக குறைவு; இதன் திறன் மிக அதிகம். இதில், மொத்தம் 60 கிலோ சரக்குகளுடன் பறக்க முடியும். இதில், 'பாம் டிராபிக் மெக்கானிஸம்' என்ற தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது, எதிரிகளின் இருப்பிடத்தை குறிவைத்து ஏவுகணை பொருத்தினால் போதும், துல்லியமாக தாக்கி வெடிக்கும். இதை, 'தற்கொலை ட்ரோன்' என்று சொல்வர். குறிவைத்த இடத்தில் வெடித்து தானாக சிதறும். கீழே இருந்தபடியே இயக்க முடியும். இது தவிர, விவசாயத்திற்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தெளித்தல், விதை துாவுதல், நிலத்தை அளப்பது போன்ற பல வேலைகளையும் செய்ய முடியும். போரின்போது வீரர்களின் உயிரையும் இது காக்கும்; எதிரிகளின் இருப்பிடத்தையும் கண்டறிந்து தாக்கும்.








      Dinamalar
      Follow us