நம் நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு அரசியலமைப்பு சட்டமே காரணம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்
நம் நாடு ஒற்றுமையாக இருப்பதற்கு அரசியலமைப்பு சட்டமே காரணம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பெருமிதம்
ADDED : அக் 12, 2025 11:47 PM

ரத்னகிரி: ''இலங்கை, நேபாளம் போன்ற அண்டை நாடுகளில் உள்நாட்டு பிரச்னை, நிலையற்றத்தன்மை நிலவும் நிலையில், நம் நாடு வலுவாகவும், ஒற்றுமையாகவும் இருப்பதை நம் அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ளது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி மஹாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மந்தங்கட் தாலுகாவில், ஒரு புதிய நீதிமன்ற கட்டடத்தை திறந்து வைத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று பேசியதாவது:
இந்த நீதிமன்றம், சட்ட மேதை அம்பேத்கரின் சொந்த கிராமமான அம்பாவ்டே உள்ள பகுதியை ஒட்டி அ மைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. போர் மற்றும் அமைதி காலங்களில் இந்த நாடு ஒற்றுமையாகவும், வளர்ச்சியின் பா தையிலும் உள்ளது.
நா ம் உள்நாட்டு அவசர நிலையையும் எதிர்கொண்டோம். ஆனாலும், வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்கிறோம் . உள்நாட்டு பிரச்னை, நிலையற்றத்தன்மையை எதிர்கொள்ளும் நம் அண்டை நாடுகளான இலங்கை, வங்க தேசம், நேபாளம் ஆகியவற்றில் இருந்து, நம்மை வேறுபடுத்திக் காட்டுவது, அரசியலமைப்பு சட்டமே ஆகும்.
உறுதி கடந்த 22 ஆண்டுகளாக, நீதிபதியாக, நீதி பரவலாக்கத்திற்காக குரல் கொடுத்து வருகிறேன். மேலும் பல நீதித் துறை உட்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவடைவதை உறுதி செய்துள்ளேன். நீதிமன்றங்கள், கடைசி குடிமகனுக்கும் விரைவான நீதி கிடைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.