சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியை ஆட்டிப் படைத்தவர் தமிழ் வீரர் டி.வி.ஆர்.,
சிங்கத்தின் குகைக்குள் புகுந்து அதன் பிடரியை ஆட்டிப் படைத்தவர் தமிழ் வீரர் டி.வி.ஆர்.,
UPDATED : அக் 03, 2025 06:16 AM
ADDED : அக் 03, 2025 12:42 AM

- தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா
தலைவர், தமிழ் முழக்கப் பேரவை, திருநெல்வேலி
டி.வி.ஆருடன் நெருங்கிப் பழகிய நண்பர்
நாடு சுதந்திரம் பெற்றதும், திருவிதாங்கூர் சமஸ்தானமும், கொச்சி சமஸ்தானமும் ஒருங்கிணைந்து கேரளமானது. திருவிதாங்கூரில் வாழ்ந்த தமிழர்கள், குறிப்பாக நாஞ்சில்நாட்டு மக்கள், தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் எனக் கோரினர்.
ஆனால், மலையாளிகள், திருவிதாங்கூர், கொச்சி, மலபார் மாவட்டம் மட்டு மின்றி, திருநெ ல்வேலி, நீலகிரி, கோவை மாவட்டங்களையும் தம்முடன் இணைக்க வே ண்டு ம் என்ற கோரிக்கை யை வலியுறுத்தினர். கேரளப் பிரதேச காங்கிரஸ் மூன்று பிரிவுகளாகச் செயல்பட்டது. மலபார் மாகாண காங்கிரஸ் கமிட்டி, கொச்சி பிரஜா மண்டல், திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் என மூன்று பிரிவுகள்.
இவை ஒன்றுபட்டு, காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை, 'கேரள மாநிலம் அமைக்க வேண்டும்' என்று முடிவு செய்தன. அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், வி.கே.கிருஷ்ணமேனன், கே.பி.எஸ். மேனன், வி.பி.மேனன், லட்சுமி மேனன் ஆகியோர் செல்வாக்கு செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் கேளப்பன், பிர ஜா சோஷலிஸ்ட் தலைவர் பட்டம் தாணுப்பிள்ளை, கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.கே. கோபாலன் ஆகியோரும் ஒன்றுபட்டு கேரளத்தை உருவாக்க முனைந்தனர்.
இந்த நிலையில் மாநில புனரமைப்பு கமிஷன் அமைக்கப்பட்டது. அதில் பசல் அலி தலைவராகவும், கேரளாவைச் சேர்ந்த கே.எம்.பணிக்கர் உறுப் பினராகவும் இருந்தனர். தமிழகம் - கேரளம் பிரச்னைகள் விவாதிக்கப்படும் போதும், பணிக்கர், கேரள பகுதிகளுக்கு ஆதரவாகவே வாதிட்டார்.
டி.வி.ஆர்., எழுச்சி
இந்த நிலையை புரிந்த கொ ண்ட டி.வி.ராமசுப்பையர் , குமரி மாவட்டம் நம்மை விட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தில், தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். திருவிதாங்கூரில் மலையாள பத் திரிகைகள் வலுவாகச் செயல்பட்டதால், தமிழர்களின் நிலையை உலகுக்கு வெளிப்படுத்த, 06.09.1951 அன்று திருவனந்தபுரத்தில், 'தினமலர்' பதிப்பை துவங்கினார்.
இந்த துணிச் சலும், தைரியமும், டி.வி.ஆருக்கே உரியது. கேரள அமைச்சர் பட்டம் தாணுப்பிள்ளை நடத்திய தாக்குதல்கள், வழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு, தமிழர்களுக்குள் விழிப்புணர்ச்சி ஊட்டினார்.
பத்திரிகைகளின் பங்கு
தினமலர் நாளிதழ் மட்டுமே தமிழர்களின் போர்வாளாக இருந்தது. ஆனால், அதுவே போதாது என்று உணர்ந்த டி.வி.ஆர்., திருவிதாங்கூர் தமிழர் தலைவர்களைச் சென்னைக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள பத்திரிகை அதிபர்களிடம் நிலைமையை விளக்கினார்.
பின் சென்னையில் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து வந்து, தமிழர்கள் பகுதிகளை சுற்றுப்பயணம் செய்ய வைத்தார். இதன் பின்பே, அகில இந்திய அளவிலான பத்திரிகைகளில், தமிழர்களுக்கான ஆதரவு செய்திகள் வெளிவர ஆரம்பித்தன.
எல்லை போராட்டம்
மார்ஷல் நேசமணி, தியாகிமணி, குஞ்சன் நாடார், சிதம்பர நாடார், தோழர் ஜீவானந்தம், கவிமணி விநாயகம் பிள்ளை, ம.பொ.சிவஞானம் ஆகியோர் தலைமையில் நடந்த போராட்டங்களை, மக்கள் தினமலர் நாளிதழ் மூலமாகவே அறிந்தனர்.
தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் தமிழ கத்துடன் சேர வேண்டும் என, தினமலர் தொடர்ந்து எழுதியது. 1949 இறுதியில் ம.பொ.சி., நடத்திய தமிழக எல்லை மாநாட்டில் குமாரசாமி ராஜா, டாக்டர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் கலந்து கொண்டனர். 'வட வேங்கடம் முதல் தென்குமரி வரை தமிழகம் ஒன்றிணைய வேண்டும்' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.