தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/கொழிக்கும் கொழுக்குமலை: ஏமாறும் தமிழக அரசு

கொழிக்கும் கொழுக்குமலை: ஏமாறும் தமிழக அரசு

கொழிக்கும் கொழுக்குமலை: ஏமாறும் தமிழக அரசு


ADDED : அக் 18, 2026 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 03:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மூணாறு: மூணாறு அருகே தமிழக எல்லைக்குள் உள்ள கொழுக்குமலை சுற்றுலா பிரபலமாகி வரும் நிலையில், கேரள மாநில ஊராட்சிகள் முதல் தனியார் தோட்டங்கள், ஜீப் உரிமையாளர்கள் என, பலரும் வருவாய் ஈட்டினாலும், தமிழக அரசுக்கு ஒரு பைசா கூட வருவாய் கிடைக்காத அவலம் உள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், சூரியநல்லி அருகில் உள்ள கொழுக்குமலை முக்கிய சுற்றுலா பகுதியாகும். அப்பகுதி, தமிழகத்தின், தேனி மாவட்டம், கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்டது.

அப்பகுதிக்கு சூரியநல்லி வழியாக தான் செல்ல முடியும். கொழுக்குமலையில் கடல் அலை போன்று பரந்து கிடக்கும் வெண்ணிற மேகங்களுக்கு இடையே, ரம்மியமாக காணப்படும் சூரிய உதயத்தை காண, தினமும் நுாற்றுக்கணக்கில் சுற்றுலா பயணியர் செல்வதுண்டு. அதற்கு, சூரியநல்லியில் இருந்து ஜீப்களில் பயணியர் அழைத்து செல்லப்படுகின்றனர்.

மாவட்ட சுற்றுலா துறை, சின்னக்கானல் ஊராட்சி ஆகியோரின் கட்டுப்பாட்டில் ஆன்லைன் வாயிலாக ஜீப் சவாரி நடக்கிறது. அதற்கு, 3,195 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். அத்தொகையில் ஆன்லைன் மையத்திற்கு, 95 ரூபாய், சின்னகானல் ஊராட்சிக்கு, 160; மாவட்ட சுற்றுலா துறைக்கு, 40; தனியார் தேயிலை கம்பெனிக்கு, 300; கொழுக்குமலை தேயிலை கம்பெனிக்கு, 200 ரூபாய் என, வசூலிக்கப்பட்டு, எஞ்சிய, 2,400 ரூபாய் ஜீப் கட்டணமாக வழங்கப்படுகிறது.

உலகளவில் பிரசித்தி பெற்ற கொழுக்குமலை தமிழக பகுதியில் அமைந்துள்ள போதும், தமிழக அதிகாரிகள் இப்பகுதியை மேம்படுத்தி, சுற்றுலா வாயிலாக வருவாய் ஈட்ட போதிய கவனம் செலுத்தவில்லை.

கொழுக்குமலை பெயரில் பலரும் வருவாயை பங்கு வைத்து, கோடி கணக்கில் சம்பாதிக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட இடம் அமைந்துள்ள தமிழக அரசுக்கு ஒரு பைசா கூட வருவாய் கிடைப்பதில்லை. கொழுக்குமலை மீது தமிழக அதிகாரிகள் கவனம் செலுத்தி, அங்கு தேவையான வசதிகள் செய்து கொடுத்து வருவாயை ஈட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us