தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/ தமிழகத்தை கண்டுகொள்ளாத பா.ஜ., தலைமை?

தமிழகத்தை கண்டுகொள்ளாத பா.ஜ., தலைமை?

தமிழகத்தை கண்டுகொள்ளாத பா.ஜ., தலைமை?

36


ADDED : செப் 27, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 04:32 AM

36


36
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தமிழகத்தில் பா.ஜ., தள்ளாடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும், கட்சி தலைமை தமிழகத்தை பெரிதாக கண்டு கொள்கிற மாதிரி தெரியவில்லை. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சார்ந்த, கேசவ விநாயகம் தமிழக பா.ஜ.,வின் மாநில அமைப்பு பொதுச் செயலராக, 10 ஆண்டுகள் பணியாற்றினார். பிப்ரவரியில் அவர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ்.,சுக்கு அனுப்பப்பட்டார். அதன் பின், இந்த பதவிக்கு யாரையுமே பா.ஜ., தலைமை நியமிக்கவில்லை.

சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்., அமைப் பைச் சேர்ந்த, ராம் மாதவ், தமிழக பா.ஜ.,வின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆனால், கேசவ விநாயகம் பதவிக்கு இதுவரை யாரையும் நியமிக்கவில்லை? காரணம், இப்போதைக்கு இந்த பதவிக்கு யாரையும் நியமிக்கும் எண்ணம், பா.ஜ.,வின் தேசிய தலைவர் நிதின் நபினுக்கு இல்லையாம். 'தமிழகத்தில் இப்போதைக்கு அதிக கவனம் செலுத்த வேண்டாம். அடுத்தாண்டு நடக்கவுள்ள, உ.பி., தேர்தல் தான் முக்கியம்' என்கிறாராம் நபின்.

இதனிடையே, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், தமிழகத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, விரும்புகிறாராம். சமீபத்தில், காஞ்சி சங்கராச்சாரியார்களை சந்தித்த இவர், தமிழகத்தில் மதமாற்றத்தை தடுப்பது குறித்து விவாதித்தாராம்.

'மதமாற்றத்தை தடுக்க வேண்டும்' என, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளாராம் மோகன் பாகவத். 'தமிழகத்தில் உள்ள ஆதீனங்கள், காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் முன்னாள் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் தமிழகத்தில் நடக்கும் மதமாற்றத்தை நிறுத்த வேண்டும் என்று, அமித் ஷாவிற்கு கடிதம் எழுதியும், எந்தவித நடவடிக்கையும் இல்லையே' என வருத்தப்படுகிறாராம் மோகன் பாகவத்.

'இதையெல்லாம் தடுக்க, கேசவ விநாயகம் பதவிக்கு, தகுந்த திறமை வாய்ந்தவரை நியமித்தால் தான், தமிழகத்தில் பா.ஜ., தலை நிமிர முடியும்' என்று கட்சிக்குள் பேசப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us