தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/வலை வளை: வந்தான்; வலைதளங்களை வென்றான்!

வலை வளை: வந்தான்; வலைதளங்களை வென்றான்!

வலை வளை: வந்தான்; வலைதளங்களை வென்றான்!


UPDATED : அக் 19, 2026 05:36 AM

ADDED : அக் 18, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 05:36 AM ADDED : அக் 18, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வந்தான்; வலைதளங்களை வென்றான்!


எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில் பிறந்த ஆண் குழந்தை, கால் மீது கால் போட்டு படுத்திருக்கும் வீடியோ, வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. டாக்டர் ஒருவர் பகிர்ந்த அந்த வீடியோவில், குழந்தை தன் இரு கைகளையும் தலைக்கு பின் வைத்திருக்கிறான்.

பிறந்தவுடன் குழந்தைகள் அழுவது வழக்கம். இந்த குழந்தை, அமைதியாக இருந்தது என்கிறார், அந்த மருத்துவர். பிறந்த முதல் நாளே, ரிலாக்ஸ் ஆக இருப்பது எப்படி என்ற கலையை கற்றுத்தேர்ந்து விட்டதாக கமென்ட் செய்கின்றனர், வலைதளவாசிகள்.

'டூ நாட் டிஸ்டர்ப்' என்று குழந்தை கூறுவதாக சொல்கிறார் ஒருவர். 'நான் பிறந்து விட்டேன். 'எனக்குத் தேவை ரிலாக்ஸ் என்பதே அவன் கொடுக்கும் போஸ்க்கு அர்த்தம்' என்கிறார், மற்றொருவர்.

'என்னை படம் எடுக்கப் போறாங்க, இருங்க... நான் ஒரு போஸ் கொடுக்கிறேன்' என்று அந்த குழந்தை கூறுவதாக கற்பனையில் டப்பிங் வாய்ஸ் கொடுக்கிறார், வலைதள பிரியர் ஒருவர்.

அழகை இழக்கும் சுற்றுலா தலம்; ஆவேசம் அடையும் வலைதளவாசிகள்



ஹிமாச்சல், தர்மசாலா அருகே மெக்லியோட் கஞ்ச் ஒன்ற சுற்றுலா தலம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணியர், பல விதமான கழிவுகளையும் சாலையில் வீசிச் சென்றிருப்பது பற்றிய படங்கள், வீடியோக்கள், வலைதளங்களில் பரவி கண்டனத்தை பெற்றுள்ளன.

'அருவருப்பாக இருக்கிறது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இமயமலை மாநிலங்களால் ஏன் அதைச் செய்ய முடியாது' என்று கேட்கிறார் வலைதளவாசி ஒருவர்.

'ஹிமாச்சல் அரசு, அனைத்து பிளாஸ்டிக் பைகளையும் தடை செய்ய வேண்டும், சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்' என்கிறார், இன்னொருவர்.

'அழகான நகரத்தை காப்பாற்ற, சுற்றுலா பயணியருக்கு அபராதம் விதிப்பது தான் தீர்வு' என்றும் வலைதளத்தில் கமென்ட்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

பிரான்ஸ் போராட்டத்தில் வன்முறை

கடைகளை சூறையாடும் முகமூடி கும்பல்

பிரான்ஸ் நாட்டில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவினங்களால், ஆத்திரம் அடைந்த அந்நாட்டு மக்கள் நடத்தும் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர்கள், முன்னணி பிராண்ட் ஷோரூம்களில் புகுந்து சூறையாடுவது, பொருட்களை கொள்ளையடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி வலைதளங்களில் பீதியை ஏற்படுத்தியுள்ளன.

பாரீஸ் மட்டுமின்றி, லியோன், மார்செயில், போர்டோக்ஸ், லில்லி நகரங்களிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆப்பிள், லுாயீஸ் வுட்டன், ஹெர்ம்ஸ் பொட்டிக் ஷோரூம்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளன. இவை மட்டுமின்றி, சூப்பர் மார்க்கெட்டுகள், பார்மசி, ஆடம்பர பொருட்களை விற்பனை செய்யும் ஷோரூம்கள், மின்னணு பொருள் விற்பனையகங்கள் எதுவும் தப்பவில்லை. இதுவரை, 272 பேரை கைது செய்துள்ளோம் என்கிறது, பிரான்ஸ் அரசு. ஆனாலும், கலவரம் குறைந்தபாடில்லை என்பது தான் லேட்டஸ்ட் நிலவரம்.

பனிப்புயலில் சிக்கிய நாய்; 50 மணி நேர தேடுதலில் மீட்பு



அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட பனிப்புயலில், 4 வயதான பூடுல் - ஹஸ்கி கலப்பினத்தை சேர்ந்த 'லுாலுா' நாய் சிக்கியது. அதை அழைத்துச்சென்ற வீரர்கள் இருவரும், பனிப்புயலில் சிக்கி 500 அடி ஆழத்துக்கு துாக்கி வீசப்பட்டனர்.

அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நாயை தேடும் பணி தொடங்கியது. மலையேற்ற வீரர்கள் 20 பேர், ஹெலிகாப்டர், ட்ரோன் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டனர். அந்த நாய், ஆப்பிள் 'ஏர்டேக்' அணிந்திருந்தது. அதில், நாய் இருக்கும் லோகேஷன் விவரம் கிடைத்தது. அதன் உதவியுடன் நடந்த 50 மணி நேர தேடுதல் முடிவில், 'லுாலுா' நாய் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார், உரிமையாளர் லாரென் ஜாய். 'நாய் தானே' என்று கருதாமல், தீவிர முயற்சி எடுத்து நாயை காப்பாற்றியவர்களை பாராட்டுகின்றனர் வலைதளவாசிகள்.

விடிய விடிய வாகன நெரிசல்; பெங்களூரில் சிக்கியோர் குமுறல்



பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசல், வலைதளங்களில் பிரசித்தி பெற்றது. தசரா விடுமுறைக்காக சொந்த ஊர் புறப்பட்ட பலர், 5 மணி நேரம் கடந்தும், பெங்களூரு நகரை கடந்து வெளியேற முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.

இதில், அரசு பஸ், தனியார் பஸ்களில் ஏறிய பயணியர் பாடு பெரும் திண்டாட்டமாகிப் போனது. 'இரவு 7:05 மணிக்கு பஸ்சில் ஏறினேன். இப்போது அதிகாலை 12:14 மணியாகி விட்டது. இன்னும் பெங்களூரை விட்டு வெளியேற முடியவில்லை' என்று வலைதளத்தில் வேதனையை தெரிவித்துள்ளார், ஐடி நிறுவன ஊழியர் அஷாந்த்.

எக்ஸ், இன்ஸ்டா, பேஸ்புக் என சமூக வலைதளங்கள் அனைத்திலும் நேற்று பெங்களூரு போக்குவரத்து நெரிசலே, டிரெண்டிங்கில் இருந்தது. ஒரு சிலர், அதிகாலை 3 மணி, 4 மணி வரை நெரிசலில் சிக்கி சீரழிந்ததாக பதிவிட்டுள்ளனர்.

10 தலையில் இடம் பிடித்த மஸ்க் தலை



வடமாநிலங்களில் தசரா திருவிழாவில், ராவணன் உருவம் தீ வைத்து எரிக்கப்படும் நிகழ்வு கோலாகலமாக நடப்பது வழக்கம். உ.பி., மாநிலம் லக்னோவில் சனாதன பாதுகாப்பு சங்கம் இதற்காக தயார் செய்யப்பட்ட ராவணன் உருவத்தில், 10 தலைகள் இருந்தன.

அவற்றில் ஒன்பது தலைகள், இந்திய அரசியல்வாதிகளின் தலைகள். ஒற்றைத்தலை மட்டும் டெஸ்லா, எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கின் தலை.

சமீபத்தில் அவர், இந்திய அரசை விமர்சனம் செய்யும் வகையில் பதிவு வெளியிட்டதன் எதிரொலியாக, அவரது தலையும், பத்து தலைகளில் ஒன்றாக இடம் பெற்று விட்டது. ராவணன் தலைகளில் ஒன்றாக எலான் மஸ்க் இடம் பெற்ற செய்தி, வலைதளங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us