sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

முதலீட்டாளர் திட்டங்களில் எவ்வித தலையீடும் இருக்காது: 'டி.என்., ரைசிங்' மாநாட்டில் முதல்வர் உறுதி

/

முதலீட்டாளர் திட்டங்களில் எவ்வித தலையீடும் இருக்காது: 'டி.என்., ரைசிங்' மாநாட்டில் முதல்வர் உறுதி

முதலீட்டாளர் திட்டங்களில் எவ்வித தலையீடும் இருக்காது: 'டி.என்., ரைசிங்' மாநாட்டில் முதல்வர் உறுதி

முதலீட்டாளர் திட்டங்களில் எவ்வித தலையீடும் இருக்காது: 'டி.என்., ரைசிங்' மாநாட்டில் முதல்வர் உறுதி

13


ADDED : நவ 26, 2025 07:31 AM

Google News

13

ADDED : நவ 26, 2025 07:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ''தமிழகத்தில் முதலீடு செய்யும் தொழில் துறையினரின் திட்டங்களுக்கு எந்தவித தாமதமும் ஏற்படாது; தலையீடுகளும் இருக்காது,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் கோவையில் உள்ள லீ மெரீடியன் ஓட்டலில், 'தமிழகம் வளர்கிறது'(டி.என்., ரைசிங்) என்ற முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில், ரூ.42 ஆயிரத்து, 792 கோடி முதலீட்டில், 96 ஆயிரத்து, 207 பேருக்குவேலை வாய்ப்பு வழங்கும்வகையில், 111 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், ரூ.1,052 கோடி முதலீட்டில், 4,502 பேருக்குவேலை வாய்ப்பு வழங்கும் விதமாக, 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

அதன்படி, மாநாட்டில், ரூ.43 ஆயிரத்து, 844 கோடி முதலீட்டில், ஒரு லட்சத்து, 709 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக, 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. உயர்தர பம்புகள் மற்றும் மோட்டார் உற்பத்தி தொழில் வளர்ச்சிக்காக, ஆவாரம்பாளையத்தில் ரூ.14.43 கோடி மதிப்பீட்டிலும், வார்ப்புகள் மற்றும் உலோக வடிவமைப்பு மேம்பாட்டுக்காக, மூப்பேரிபாளையத்தில் ரூ.26.50 கோடியில் திறன்மிகு மையங்கள் அமைப்பதற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

அதிக 'விசிட்'

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: புதுமையும், புத்தொழிலும் நிறைந்து, வாய்ப்புகளும், வளங்களும் கொண்ட கோவை மண், தென்னிந்தியாவின் மான்செஸ்டராக திகழ்கிறது. நான் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அதிகமாக 'விசிட்' செய்த மாவட்டம் கோவை தான். எங்கள் ஆதரவு தொழில் துறையினருக்கு எப்போதும் இருக்கும். இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு, 'அருட்செல்வர்' பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற ஏராளமான திறமைசாலிகளை இந்த மண் தந்துள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக, 11.19 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடைந்து, தமிழகம் சாதனை படைத்துள்ளது.

'நம்பர் ஒன்'

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 1997ல் 'ஐ.டி., பாலிசி' கொண்டு வந்தோம். டைடல் பார்க் உருவாக்கினோம். இப்படி 'அட்வான்ஸ்' ஆக செயல்பட்ட காரணத்தால்தான் தமிழ்நாடு 'நம்பர் ஒன்' மாநிலமாக தலைநிமிர்ந்து நிற்கிறது. தொழில்துறையை சேர்ந்த யாரை சந்தித்தாலும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வாருங்கள் என்று நான் கோரிக்கை வைத்து வருகிறேன். தமிழகத்தில்இருக்கும்வாய்ப்புகளை எடுத்துச்சொல்லி, முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறோம்.

யு.ஏ.இ., சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் நானே நேரடியாக சென்று பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளேன். இப்படி நடத்தப்பட்ட, 17 முதலீட்டாளர்கள் மாநாட்டின் விளைவாக, இதுவரை, 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதன்வாயிலாக ரூ. 11 லட்சத்து, 40 ஆயிரத்து, 731 கோடிஅளவுக்கு முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நேரடியாகவும், மறைமுகமாகவும், 34 லட்சம் பேருக்கும் மேல், வேலைவாய்ப்புகள் பெறுவதை உறுதி செய்துள்ளோம். மாநிலங்களின் வளர்ச்சிக்காக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துகின்றனர்; புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுகின்றனர். எத்தனை ஒப்பந்தங்கள் தொழிற்சாலைகளாக மாறுகிறது? ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்த 'கன்வெர்ஷன் ரேட்' என்பது, 80 சதவீதம். அதாவது, 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், நிலம் வழங்குவது உட்பட, 809 திட்டங்கள், பல்வேறு செயல்பாட்டு நிலைகளில் இருக்கிறது.

வெளிப்படைத் தன்மை

சிறிய நகரங்களுக்குக் கூட சென்று, 'ஸ்டார்ட் அப்' தமிழ்நாடு வாயிலாக இளைஞர்களை தொழில் தொடங்க ஊக்குவிக்கிறோம். அதனால், தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்து 663 ஆக அதிகரித்துள்ளது. 2021 மே வரை, 2,146 நிறுவனங்கள்தான் இருந்தன.

கடந்த, 4 ஆண்டுகளில், 12 ஆயிரத்து, 663 ஆக அதிகரித்துள்ளது. காரணம் வெளிப்படைத் தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது. 'பிசினஸ் பிரண்ட்லி' சூழல் இங்கு நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு இங்கு சரியாக இருக்கிறது. தமிழக வளர்ச்சியை பிடிக்காதவர்கள், அரசியல் காரணங்களுக்காக தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 62 ஆயிரத்து, 413 நிறுவனங்கள் இருந்த தமிழகத்தில், இப்போது, 79 ஆயிரத்து, 185 நிறுவனங்கள் இருக்கிறது. தமிழகத்துக்கு வரவேண்டிய சில நிறுவனங்கள் வெளி மாநிலத்திற்கு செல்வதாகவும் தொடர்ந்து செய்தியை உருவாக்குகிறார்கள். தொழில் முதலீடுகளை கொண்டு வருவது என்பது சாதாரண விஷயமில்லை. பலத்த போட்டிகளிடையே இந்த முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருகிறோம்.

நம்முடைய நிதி நிலைமைக்கு ஏற்ப முறையான சலுகைகள் கொடுத்துத்தான் இந்த முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுகிறோம். கோவையின் தொழில் சூழலை மேம்படுத்த வாரப்பட்டியில் 'பாதுகாப்புத் துறை உபகரணங்கள் பூங்கா' அமைத்துள்ளோம். ஏற்கனவே, 20 தொழிற்சாலைகள், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ.,க்களுக்கு, 57 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ள இந்தபூங்காவில், உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவடைகின்ற நிலையில்உள்ளது. சூலுாரில், 200 ஏக்கர் பரப்பளவில், வான்வெளி மற்றும் பாதுகாப்புத்தொழில் பூங்கா அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

செமிகண்டக்டர் மிஷன்

சூலுார் வட்டத்தில் கரவல்லி, மாதப்பூர், கணியூர் மற்றும்ராசிப்பாளையத்தில் பன்முகப் போக்குவரத்து பூங்காவை அமைக்க உள்ளோம். 'செமிகண்டக்டர் மிஷன்-2030' என்ற இலக்குப்படி சூலுார் மற்றும் பல்லடத்தில் 'செமிகண்டக்டர் பூங்கா' அமைக்க உள்ளோம். தொழிலும், கல்வித்துறையும் சேர்ந்து அறிவுப் பொருளாதாரம்உருவாக வேண்டும். அதற்காக தமிழ்நாடு பல்கலை ஆராய்ச்சிப் பூங்கா அறக்கட்டளை என்கிற புதிய நிறுவனத்தைஅமைத்துள்ளோம்.

புதுமைக்குப் பெயர்பெற்ற கோவை மண்டலத்தில், இந்த நிறுவனம் ரூ.2.58 கோடி மானியத்துடன் பயன்பாட்டு ஆராய்ச்சிதிட்டங்களுக்கு நிதியளிக்கிறது. இந்தத் திட்டங்களுக்கான முதல்தவணையாக ரூ.78 லட்சம் ரூபாயை ஆராய்ச்சியாளர்களிடம் இந்தநிகழ்ச்சியில் வழங்கி இருக்கிறோம். சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட(ஈஸ் ஆப் டூயிங் பிசினஸ்)தரவரிசையில், நான்கு பிரிவுகளில், தமிழக சாதனையாளர் என்ற அங்கீகாரத்தைக் வழங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் முதலீடு செய்யும் உங்கள் திட்டங்களுக்கு, எந்தவித தாமதமும் ஏற்படாது; எந்தவித தலையீடுகளும் இருக்காது என்று உறுதியாக கூறுகிறேன். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி தி.மு.க., அரசு செயல்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார். அமைச்சர்கள் ராஜா, கயல்விழி, எல்.எம்.டபிள்யூ., நிறுவன செயல் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, சக்தி குழும நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us