தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/ப்ரீமியம்/வெற்றி பெற்ற தொகுதிகளில் மூன்றாவது இடமா? அ.தி.மு.க.,வில் அதிர்ச்சி

வெற்றி பெற்ற தொகுதிகளில் மூன்றாவது இடமா? அ.தி.மு.க.,வில் அதிர்ச்சி

வெற்றி பெற்ற தொகுதிகளில் மூன்றாவது இடமா? அ.தி.மு.க.,வில் அதிர்ச்சி

13


ADDED : அக் 10, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

13

ADDED : அக் 10, 2026 05:22 AM


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளையும் இழந்துள்ளதுடன், இடைத்தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதால், அ.தி.மு.க., நிர்வாகிகளும், தொண்டர்களுக்கும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சட்டசபை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க., 47 தொகுதிகளில் வெற்றி பெற்று, மூன்றாவது இடத்திற்கு சென்றது. இதனால், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது. இதுவரை நடந்த தேர்தல்களில் தொடர் தோல்வியை, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., சந்தித்து வருகிறது. இதனால், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் பழனிசாமி மீது பகிரங்கமாக தங்களது அதிருப்தியை காட்டி வருகின்றனர்.

இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் அ.தி.மு.க., கோட்டை. பொதுத் தேர்தலில் மதுராந்தரகம் தொகுதியில் த.வெ.க., இரண்டாம் இடத்தை கைப்பற்றிய நிலையில், இடைத்தேர்தலில் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த தொகுதியில் உள்ள அ.தி.மு.க.,வின் பாராம்பரியமான ஒட்டுக்களை, த.வெ.க., தட்டி பறித்துள்ளது. அ.தி.மு.க., ஓட்டு வங்கி சரிவை சந்தித்துள்ளது.

அதேபோல் தாராபுரத்திலும், அ.தி.மு.க., மூன்றாம் இடத்திற்கு போனது. பொதுத்தேர்தலில் மூன்றாவது இடத்தில் இருந்த த.வெ.க., இடைத்தேர்தலில் முதலிடத்திற்கு முன்னேறி வெற்றி பெற்றது. அதனால், அ.தி.மு.க., மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது, அ.தி.மு.க., ஓட்டுக்களை தான் த.வெ.க., கபளீகரம் செய்துள்ளது. இதனால், கட்சி நிர்வாகிகள், தொணடர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பழனிசாமிக்கு எதிராக, இவர்கள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என தெரிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us