sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

இந்தியாவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார் டிரம்ப்

/

இந்தியாவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார் டிரம்ப்

இந்தியாவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார் டிரம்ப்

இந்தியாவுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார் டிரம்ப்


ADDED : ஆக 05, 2025 05:25 AM

Google News

ADDED : ஆக 05, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'செயலற்ற பொருளாதாரங்களான இந்தியாவும், ரஷ்யாவும் ஒன்று சேர்ந்து மூழ்கப்போகின்றன' என சமீபத்தில் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.50 சதவீதமாகவும், ரஷ்ய பொருளாதாரம் 1 சதவீதமும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிக்கையோ, உலகப் பொருளாதாரம் குறித்த தவறான புரிதல் கொண்டுள்ளதை காட்டுகிறது.

அதே சமயம் அமெரிக்காவின் வரி விதிப்பு உலகளவில் முழுதுமாக அமலுக்கு வரும்போது, அமெரிக்காவின் பொருளாதாரம் சில ஆண்டுகளில் 0.8 சதவீதம் சுருங்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவின் வளர்ச்சி தற்போது, 1.30 சதவீதமாக குறைந்து உள்ளது.

மேலும், அந்நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது. 'டிரம்பனாமிக்ஸ்' என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் வரி விதிப்பு கொள்கை, அமெரிக்க பொருளாதாரத்திற்கு இன்னமும் நேர்மறையான முடிவுகளை காட்டவில்லை.

ஏற்றுமதி வளர்ச்சி எனவே, எந்த பொருளாதாரம் அழிந்து வருகிறது என்பதை தீர்மானிப்பது உலகம் தானே தவிர, டிரம்ப் கிடையாது.

கடந்த சில ஆண்டு களாக இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் 70 லட்சம் கோடி ரூபாயை எட்டும் வாய்ப்புள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாத காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 21-.50 சதவீதமாகவும், இறக்குமதி 25.80 சதவீதமாகவும் கணிசமாக அதிகரித்துள்ளன.

சந்தேகத்துக்கு இடமின்றி, டிரம்பின் வரிகள் மற்றும் அபராதங்கள் இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட 'பிரிக்ஸ்' நாடுகளின் வளர்ச்சியை பாதிக்கும்.

இதை வேறு வகையில் கூறுவதென்றால், அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு, நம் நாட்டின் முழு பொருளாதாரத்தையும் திறக்க வேண்டும் என, இந்தியாவை அடிப் பணிய வைக்க டிரம்ப் ஒரு பொருளாதார போரை துவக்கியுள்ளார்.

இது அந்நாட்டு ஆயுதங்களை வாங்க வைக்க நம்மை கட்டாயப்படுத்துவதை விட மோசமானது.

இவ்வாறு நாம் ஒப்பந்தங்களை மறுக்கும் போது, டிரம்ப் நமக்கு வர வேண்டிய பல வாய்ப்புகளை அடைக்க, அந்நாட்டு நிறுவனங்களை கட்டாயப்படுத்தலாம்.

இதனால் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவைகள் பாதிக்கப்படாமல் இருக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

நம் தேஜஸ் போர் விமானத்துக்கான என்ஜின் வினியோகத்தை நிறுத்தும்படி ஜி.இ., எலெக்ட்ரிக்கல் நிறுவனத்துக்கு டிரம்ப் அழுத்தம் தந்துள்ளார். எவ்வளவு பணம் செலவழித்தாவது, உரிய தொழில்நுட்ப நிபுணரை பணியமர்த்தி, அத்தகைய போர் விமானத்துக்கான இயந்திரத்தை உருவாக்க வேண்டும்.

இது குறுகிய காலத்திலேயே கி டைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தி ய விமான நிறுவனங்கள், அமெரிக்காவில் இருந்து 600க்கும் மேற்பட்ட போயிங் விமானங்களை வாங்க தயாராகி வருகின்றன.

ஒவ்வொரு விமானமும் அதன் வகையைப் பொறுத்து 830 முதல் 2,700 கோடி ரூபாய் வரை விலை கொண்டவையாக உள்ளன. இவை தவிர, பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பிலும் சில கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக, அமெரிக்காவுடனான நம் வர்த்தகம் சுருங்கவில்லை என்பது தெளிவாகிறது. இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை நம் நாட்டில் அதன் உற்பத்தி தளங்களை அமைக்க வலியுறுத்த வேண்டும்.

போராட வேண்டும் அவ்வாறு உற்பத்தி தளங்களை அமைக்காவிட்டால், இந்திய நிறுவனங்கள் தங்கள் ஆர்டர்களை குறைப்பதாக அவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு மருந்துகள், ரசாயனங்கள், ஆபரணங்கள், மின் மற்றும் மின்னணு பொருட் களின் ஏற்றுமதியை பாதிக்கும். வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு டிரம்ப் மிகக் குறைந்த வரிகளை விதித்துள்ளார்.

இது சர்வதேச சந்தையில் நம் தயாரிப்புகளின் போட்டித் தன்மையை குறைக்கும்.

மேலும், இந்தியாவை அதன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவுகளை விரைவாக மறுசீரமைக்க கட்டாயப்படுத்தும்.

இ தனால், மலிவான மருந்து பொருட்களை அமெரிக்க மக்களுக்கு கிடைப்பதை டிரம்ப் மறுக்கிறார் என்றே கூற வேண்டும். உரங்கள், திரவ உரங்கள், பாதுகாப்பு உற்பத்தி மற்றும் விவசாயப் பொருட்கள் பதப்படுத்துதல் போன்ற எண்ணற்ற புதிய துறைகளுக்கு தொழில்துறையினர் கா லம் தாழ்த்தாமல் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் வரி விதிப்பை எண்ணி புலம்பி அழுவதற்கு பதிலாக, அத்தகைய நடவடிக்கைகளை சவால்களாக ஏற்று எதிர்த்து நின்று போராட வேண்டும்.

உற்பத்தி திறனை அதிகரிக்கவும், தரத்தை மேம்படுத்தவும் இந்தியா மு றைப்படி தானியங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும். 8,500 ஆண்டுகளாக கோதுமை மற்றும் அரிசியை உற்பத்தி செய்து வரும் நம் நாட்டில் உற்பத்தித் திறன் குறையக்கூடாது.

அலெக்சாண்டர் முதல் ஆங்கிலேயர் வரை ஒன்றுபட்ட இந்தியாவை யாராலும் முழுமையாக அடிமைப்படுத்த முடியவில்லை. இந்தியா அவர்களை எதிர்த்து போராடி வெளியேற்றியுள்ளது.

அமெரிக்காவின் எதிர்க்கட்சியின் வீழ்ச்சி காரணமாக அதிபர் பதவியை வென்ற, மதிப்பிழந்த தலைவரான டிரம்பின் பதவிக்காலம், அடுத்த மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்கும். அப்போது இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்திருக்கும்.

-எம்.ஆர்.சிவராமன்

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி மத்திய வருவாய் துறை முன்னாள் செயலர்.






      Dinamalar
      Follow us