ADDED : மார் 08, 2024 05:08 AM

சென்னை : தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால் அதிருப்தி அடைந்த, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், நேற்று நடக்கவிருந்த நிர்வாகிகள் கூட்டத்தை ரத்து செய்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி, லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற முடிவு செய்துள்ளது. தி.மு.க.,வுடன் அதிகாரப்பூர்வ பேச்சு நடத்த அக்கட்சியிடம் இருந்து இன்னும் அழைப்பு வரவில்லை. தங்களுக்கான தொகுதி பங்கீடு பேச்சு நேற்று முன்தினம் முடிவுக்கு வரும் என, கமல் எதிர்பார்த்தார். இதனால், கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.
ஆனால், தொகுதி பங்கீடு பேச்சு நடக்கவில்லை; தி.மு.க., தரப்பில் சரியான பதிலும் வராததால், கமல் மற்றும் நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். நேற்று நடக்கவிருந்த நிர்வாகிகள் கூட்டமும் திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இந்த குழப்பத்திற்கு ஓரிரு நாளில் தீர்வு கிடைக்கும் என, தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது.

