ADDED : ஜன 17, 2025 05:57 AM

முதன்முறையாக தன் மகன் இன்பநிதியுடன் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் உதயநிதி பங்கேற்றார். இன்பநிதி தன் நண்பர்களையும் அழைத்து வந்திருந்தார். நண்பர்களுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன.
மகன் இன்பநிதியை அருகில் அமரவைத்த உதயநிதி, ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து மகனுக்கு விளக்கம் அளித்தார். தன் நண்பர்களை முன் வரிசைக்கு இன்பநிதி அழைத்ததும், கலெக்டர் தன் இருக்கையை மாற்றிக் கொண்டார். இது சர்ச்சையானது.
இது குறித்து கலெக்டர் சங்கீதா கூறுகையில், ''அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது துணை முதல்வர் உதயநிதி அருகே இருந்த நான் எழுந்து இருக்கை மாறியது குறித்து சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வதந்தி பரப்புகின்றனர். அந்த நிகழ்ச்சியில் 'புரொட்டோகால்' படி தான் நான் எழுந்து நின்றேன்,'' என்றார்.
நிகழ்ச்சியை கவர் செய்த ட்ரோனை உதயநிதியும், அவரது மகனும் சில நிமிடங்கள் இயக்கினர். இன்பநிதி இயக்கிய போது சரியாக இயக்காததால், அது களத்தில் விளையாடிக்கொண்டிருந்த வீரர்கள் மேல் விழுந்தது. வீரர்கள் சற்று அதிர்ச்சியாகினர்.