வேலுசாமிக்கு அ.தி.மு.க.,வில் பதவி: வேலுமணிக்கு 'செக்' வைக்கும் இ.பி.எஸ்.,?
வேலுசாமிக்கு அ.தி.மு.க.,வில் பதவி: வேலுமணிக்கு 'செக்' வைக்கும் இ.பி.எஸ்.,?
UPDATED : ஜன 29, 2025 06:41 AM
ADDED : ஜன 29, 2025 06:23 AM

சென்னை : அ.தி.மு.க., அமைப்பு செயலர்களாக, முன்னாள் அமைச்சர் வேலுசாமி, முன்னாள் எம்.பி., மைத்ரேயன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'முன்னாள் அமைச்சர்கள் கோவை வேலுசாமி, தர்மபுரி முல்லைவேந்தன், முன்னாள் எம்.பி., மைத்ரேயன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னசாமி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்' என தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும் கோவை முன்னாள் மேயருமான வேலுசாமி, ஜெயலலிதா காலத்தில் கோவை அ.தி.மு.க.,வில் செல்வாக்குடன் இருந்தார். 2011 சட்டசபை தேர்தலில் வேலுசாமிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதனால், அத்தேர்தலில் வென்ற வேலுமணிக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதன்பின், அ.தி.மு.க.,வில் கோவை என்றாலே வேலுமணி என்றானது.
![]() |
கோவை அ,தி.மு.க.,வின் அசைக்க முடியாத சக்தியாக வேலுமணி இருக்கிறார். இதனால், அமைச்சர், மேயர் போன்ற முக்கிய பதவிகளில் இருந்தவர் என்றாலும், வேலுசாமிக்கு அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
இந்த சூழலில்தான் வேலுசாமிக்கு அமைப்பு செயலர் பதவியை பழனிசாமி வழங்கியுள்ளார். இதன் வாயிலாக, கோவையில் சகல செல்வாக்கோடு கட்சியில் இயங்கி வரும் வேலுமணிக்கு, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி செக் வைத்துள்ளார் என, அக்கட்சி வட்டாரங்களில் பேசுகின்றனர்.


