தினகரனிடம் கூட்டணி பேச்சு: நிர்வாகிக்கு 'டோஸ்' விட்ட விஜய்
தினகரனிடம் கூட்டணி பேச்சு: நிர்வாகிக்கு 'டோஸ்' விட்ட விஜய்
UPDATED : நவ 01, 2025 06:46 AM
ADDED : நவ 01, 2025 05:05 AM

: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனி டம் கூட்டணி பேச்சு நடத்திய, த.வெ.க., மாநில நிர்வாகி அருண் ராஜை, விஜய் கண்டித்த தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது:
த.வெ.க., துவங்க பக்கபலமாக இருந்த கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலர் அருண் ராஜ், ஐ.ஆர்.எஸ்., ப தவியில் இருந்து விலகியவர்.பொதுச்செயலர் ஆனந்துக்கு இணையாக, அருண் ராஜுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.
சமீபத்தில், விஜய்க்கு தகவல் தெரிவிக்காமல், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரனிடம் கூட்டணி குறித்து பேசியுள்ளார்.
இந்த தகவலை, கட்சியின் வேறு சில மேல்மட்டத் தலைவர்கள் விஜய்க்கு கொண்டு சென்றன ர். உடனே, விஜய் கொந்தளித்துள்ளார். அந்த கோபத்தில், அருண் ராஜை அழைத்து பேசியுள்ளார்.
அப்போது, 'யாருடன் த.வெ.க., கூட்டணி சேர வேண்டும் என்பது, தனிநபர் எடுக்கும் முடிவல்ல. கட்சித் தொண்டர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவு. தொண்டர்கள் உணர்வுகள் அடிப்படையில், இறுதி முடிவை நான் எடுப்பேன்.
'அதுவரை, யாரும் அவசரப்பட்டு, எந்தக் கட்சியோடும் கூட்டணி பேச வேண்டியதில்லை. ஆர்வக்கோளாறில் இனி இது போன்ற காரியங்களை செய்ய வேண்டாம்' என, விஜய் கடுமை காட்டியுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் -.

