sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

மதுரையில் நாளை த.வெ.க., பிரமாண்ட மாநாடு; 5 லட்சம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள்

/

மதுரையில் நாளை த.வெ.க., பிரமாண்ட மாநாடு; 5 லட்சம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள்

மதுரையில் நாளை த.வெ.க., பிரமாண்ட மாநாடு; 5 லட்சம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள்

மதுரையில் நாளை த.வெ.க., பிரமாண்ட மாநாடு; 5 லட்சம் பேர் அமரும் வகையில் ஏற்பாடுகள்

6


ADDED : ஆக 20, 2025 03:57 AM

Google News

6

ADDED : ஆக 20, 2025 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பாரபத்தியில் நாளை (ஆக.,21) நடக்க உள்ள த.வெ.க., 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேச உள்ளதை ஒட்டி, மேடை ஏற்பாடுகளை பார்வையிட இன்று (ஆக., 20) வருகிறார்.

மதுரை - துாத்துக்குடி நெடுஞ்சாலையில் பாரபத்தியில் 500 ஏக்கர் பரப்பளவிலான காலியிடத்தில் 5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையின் இருபுறமும் கட்சிக் கொடிகள் நடப்பட்டுள்ளன. மாநாட்டின் நுழைவு வாயிலில் கட்சிக்கொடிகளுடன் பந்தலின் தடுப்புகளும் சிவப்பு, மஞ்சள் துணியில் தைக்கப்பட்டு போர்த்தப்பட்டுள்ளது.

மேடையில் இருந்து அரைகிலோ மீட்டர் துாரம் வரை தொண்டர்கள் அமரும் வகையில் இருபுறமும் தனித்தனி தடுப்புகளுடன் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடுப்பு பகுதியிலும் குறைந்தது 2000 பேர் அமர முடியும். இதற்காக லட்சக்கணக்கான பிளாஸ்டிக் சேர்கள் லாரிகளில் வந்திறங்கியது. மாநாட்டின் முழு நீளத்திற்கும் தனித்தனி தடுப்புகள் அமைத்து ஒவ்வொரு தடுப்பிலும் பிரமாண்டமான 'எல்.இ.டி.,' டிவிக்கள் பொருத்தப்பட்டு விஜய் பேசுவதையும் நடந்து செல்வதையும் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுாற்றுக்கும் மேற்பட்ட மொபைல் கழிப்பறைகள் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு லட்சம் எண்ணிக்கையிலான அரைலிட்டர் மினரல் வாட்டர் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டாலும், தொண்டர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கூடுதலாக ஒவ்வொரு தடுப்பு பகுதியை ஒட்டியும் 1000 லிட்டர் அளவுள்ள குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டு தரைவழியே குழாய் பதிக்கப்பட்டு தொண்டர்கள் உட்காரும் இடத்தருகே தலா நான்கு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.

400 மீட்டர் நீளத்திற்கு இரும்பு மேடை பந்தலின் துவக்கம் முதல் இறுதிவரையான முழு நீளத்திற்கும் செம்மண் தரையில் பச்சைக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேடையில் இருந்து 'ராம்ப் வாக்' மேடை வரை கட்சித்தலைவர் விஜய் நடந்து வந்து தொண்டர்களை பார்த்து கையசைப்பதற்கு வசதியாக 400 மீட்டர் நீளத்திற்கு பிரமாண்ட இரும்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் நடந்து வரும் போது தொண்டர்கள், அருகே செல்ல முடியாத வகையில் 15 அடி அகலத்தில் மூன்றடுக்கில் அடுத்தடுத்து இரும்புக்கம்பி பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும் போது முதல் அடுக்கில் பாதுகாப்பு 'பவுன்சர்கள்', 2வது அடுக்கில் போலீசார் பாதுகாப்பு என உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய் நடந்து செல்வதை அனைவரும் காணும் வகையில் 'ராம்ப் வாக்' மேடையின் இருபுறமும் தலா 32 பல்புகளுடன் கூடிய 40 க்கும் மேற்பட்ட 'போகஸ்' விளக்குகள் தரையில் ஊன்றப்பட்டுள்ளன. மாநாடு முழுவதுக்கும் மின்னொளி வசதி செய்யப்பட்டுள்ளது.

மேடையின் இருபுறமும் தலா 15 முதலுதவி மையங்களுக்காக தற்காலிக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் 20 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு தடையற்ற மின்சாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேடையின் பின்பகுதியில் வி.ஐ.பி.,க்களுக்காக தனித்தனி ஏசி குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. விஜய் மற்றும் நிர்வாகிகள் பயன்படுத்த, 5 'கேரவன்கள்' நாளை (ஆக.,21) கொண்டு வரப்படும். பொதுமக்கள் வாகனங்கள், வி.ஐ.பி.,க்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கு என மூன்று இடங்களில் 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. மேடையின் முகப்பில் இரு யானைகள் தும்பிக்கையை துாக்கியபடி நிற்பது போல கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் உட்காரும் இடத்தில் பச்சைக்கம்பளமும் வி.ஐ.பி.,க்களுக்காக சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டுள்ளது.

பார்வையாளர்களுக்கான வசதிகள் தயாரான நிலையில் மேடை அமைப்புக்கான இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. இன்று (ஆக.,20) மாநாட்டு பந்தலை பார்வையிட விஜய் வருவார் என அக்கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., நடுவில் விஜய்

மதுரை த.வெ.க., மாநாட்டு திடலில் தமிழக வரைபடத்தின் இடது, வலது பக்கத்தில் மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை, எம்.ஜி.ஆருக்கு நடுவில் கட்சித் தலைவர் விஜய் இரு கைகளை நீட்டியது போன்ற கட்அவுட், மேடையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாதுரை (1967), எம்.ஜி.ஆரை (1977) போன்று 2026 ல் விஜய், முதல்வராக ஆட்சியைப் பிடிப்பார் என்பதைக் குறிக்கும் வகையில் 'வரலாறு திரும்புகிறது' என்ற வாசகங்களுடன் கட் அவுட் உள்ளது. அதன் கீழே விஜய் கூறுவது போல 'உங்கள் விஜய் நா வர்றேன்' என குறிப்பிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us