sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

ரசிகர்களை நம்பி களம் இறங்கிய விஜய்: முன்னுதாரணங்களை பின்தள்ளுவாரா?

/

ரசிகர்களை நம்பி களம் இறங்கிய விஜய்: முன்னுதாரணங்களை பின்தள்ளுவாரா?

ரசிகர்களை நம்பி களம் இறங்கிய விஜய்: முன்னுதாரணங்களை பின்தள்ளுவாரா?

ரசிகர்களை நம்பி களம் இறங்கிய விஜய்: முன்னுதாரணங்களை பின்தள்ளுவாரா?

36


ADDED : பிப் 04, 2024 03:36 AM

Google News

ADDED : பிப் 04, 2024 03:36 AM

36


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென் மாநிலங்களில் அரசியல் பின்புலம் இன்றி, நடிகர்கள் அரசியலுக்கு வருவதும், களத்தை ஆக்கிரமிப்பதும் அதிகம். அதில் தமிழகத்துக்கு முதலிடம். தமிழகத்தில் கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது.

எம்.ஜி.ஆர்., கட்சி துவங்குவதற்கு முன் நீண்டகாலம் அரசியலில் இருந்தாலும், 'திரையில் செய்ததை மக்களிடம் செயல்படுத்தினால், கட்சி துவங்கி ஆட்சியை பிடிக்கலாம்' என்ற மந்திரத்தை முதலில் உறுதி செய்தவர். அவர் மட்டுமே கட்சி துவங்கி முதல்வராகி, இறுதிவரை பதவியில் தொடர்ந்தார்.

அவருக்கு பின் வந்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின்அ.தி.மு.க.,வை கையில் எடுத்தாலும், ஜானகியுடனும், எதிர்க்கட்சிகளுடனும் முட்டி மோதித்தான் முதல்வரானார். மறையும் வரை ஆட்சி கட்டிலை அலங்கரித்தார்.

இயலவில்லை


ஆனால், அதே கால கட்டங்களில் அரசியலுக்கு வந்து, தமிழக முன்னேற்ற முன்னணி துவங்கியநடிகர் சிவாஜிகணேசன், அனைத்திந்திய இலட்சிய தி.மு.க., துவங்கிய டி.ராஜேந்தர், எம்.ஜி.ஆர்., மக்கள் முன்னேற்ற கழகம் துவங்கிய பாக்யராஜ், பார்வேர்டு பிளாக்கில் வலம் வந்த கார்த்திக், முக்குலத்தோர் புலிப்படை துவங்கிய கருணாஸ் போன்றோர் என்ன முயன்றும் உச்சம் தொட முடியவே இல்லை.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி துவங்கிய சரத்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போன்றோர் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை தாண்டி மேலே ஏற இயலவில்லை.

அரசியல் நீரோட்டம்


இவற்றுக்கு மாற்றாக தே.மு.தி.க.,வை துவங்கிய விஜயகாந்த், 2011 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில், 2வது இடத்தை பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றார். அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுக்கேஆட்டம் காட்டினார்.

ஆனால், அடுத்தடுத்த தேர்தல் முடிவுகளும் விஜயகாந்த் உடல் நலக்குறைவும் அக்கட்சியை அதற்கு மேல் செல்லவிடாமல் தடுத்தன.

மக்கள் நீதி மய்யம் துவங்கிய கமலும், தேர்த லில் கணிசமான ஓட்டுகள் பெற்று மக்களின் பார்வையை தன் பக்கம்திருப்பியதை மறுக்க இயலாது.

இத்தனை பேரில் தே.மு.தி.க., - மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை மட்டுமே அரசியல் நீரோட்டத்தில் ஏதோ ஒரு இடத்தில் தற்போதும்நிற்கின்றன.

இந்த சூழலில் நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற கட்சி பெயரை அறிவித்து களம் இறங்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகரான விஜய், கடந்த 2009 ஜூலையில், தன் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கம் அமைப்பாக மாற்றினார்.

அதற்கு முன்பே ரசிகர் மன்றத்துக்கு தனி கொடி அறிமுகம் செய்தார். 2010ல், காவலன் திரைப்படம் வெளிவர தி.மு.க., தடை செய்வதாக குற்றம்சாட்டி, அ.தி.மு.க.,வுடன் இணைந்து தி.மு.க.,வை விமர்சனம் செய்தது, விஜய் மக்கள் இயக்கம்.

கடந்த 2011ல், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து, நாகப்பட்டினத்தில் மக்கள் இயக்கம் தன் முதல் அரசியல் கூட்டத்தை நடத்தியது. 2011ல் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அடுத்தடுத்து தன் படங்களில் மத்திய, மாநில அரசின் திட்டங்களைவிமர்சித்து பேசினார்.

பிடித்தமான நடிகர்


சர்க்கார் படத்தில், தன் ஓட்டை வேறு ஒருவர் போட்டதாகவும், அதற்கு நியாயம் கேட்டு, தேர்தலில் போட்டியிடும் வரை காட்சிகள் இருக்கும்.

இந்த படத்தில் தனது அரசியல் பயணதுவக்கத்திற்கான காட்சியை இடம் பெற செய்தார்.

திரைக்கு வெளியே நலத்திட்ட உதவி வழங்குதல் போன்ற நடவடிக்கைகளால் செய்தியில் இடம் பிடித்தார். அவரது வருகையால் ஆளும் கட்சி மட்டுமின்றி மற்ற கட்சிகளும் இனி நமக்கு இளைஞர்களின் ஓட்டு குறையும் என்ற கவலையை ஏற்படுத்தி இருப்பது நிஜம்.

எம்.ஜி.ஆர்., விஜயகாந்துக்கு பின் விஜய் தன் ரசிகர்களை ஒருங்கிணைத்து, அவ்வப்போது சந்தித்து வந்தார்.

மக்கள் இயக்கமாக மாற்றி, அரசியல் பணிகளை துவக்கினார். இளைஞர்கள், இளம் பெண்களுக்கு பிடித்தமான நடிகராக இவர் உள்ளார். 18 வயதுக்கு கீழ் உள்ள ரசிகர்கள் அதிகம்.

ரஜினி அரசியலுக்கு வராததால், அந்த ரசிகர்கள் தற்போது விஜய் கட்சிக்கு படையெடுக்க வாய்ப்பு அதிகம். பிற கட்சிகளில் உள்ள விஜய் ரசிகர்களும் முழுமையாக வரலாம்.

அந்த கட்டமைப்பை உருவாக்க தான், 2026 சட்டசபை தேர்தலை குறி வைத்து, கட்சி பணிகளை துவக்கியுள்ளார். ஆனால் ரசிகர்களை தாண்டி பொதுமக்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே ஆட்சி அமைக்கும் கனவைநனவாக்க முடியும்.

ரசிகர்கள் பலருக்கு, தேர்தல் முன் அனுபவம் கிடையாது. லோக்சபா தேர்தலில் களமிறக்கினால், 'பூத்' வேலை செய்யக் கூட முடியாத நிலை ஏற்படும். சில மாவட்டங்களில் மட்டுமே நிர்வாகிகள், ரசிகர்களுடன் கட்டமைப்பு வைத்துள்ளனர்.

கேள்விக்குறி


பல மாவட்டங்களில், அரசியல் கட்சி போன்று 'கோஷ்டி' பிரச்னை உள்ளது. தற்போதுள்ள ரசிகர்கள் பலர், பள்ளி, கல்லுாரி மாணவர்களாகவும், அரசு, தனியார் நிறுவன பணியிலும் உள்ளனர். அவர்கள், அரசியலில் முழுமையாக களமிறங்குவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு, கட்சி பதவி கிடைக்குமா அல்லது புதிதாக வரும் நபர்களுக்கு பதவி கிடைக்குமா என்று அவர்களே கேள்வி எழுப்பியும்உள்ளனர்.

மக்கள் இயக்க நிர்வாகிகளை மட்டும் ஒருங்கிணைத்து, கட்சியை தனி நபராக நடத்தி, அரசியலில் வெற்றி பெற முடியுமா என்பது நிச்சயமாக கேள்விக்குறி. அதற்கு அவரிடம் பதில் இருக்கும். வரும் நாட்களில் அது வெளிச்சத்துக்கு வரும்போதுசாத்தியங்கள் புலப்படும்.

ஜாதகத்தில் சாதகம் உண்டா?


விஜய் ஜாதகத்தை அலசிய பிரபல ஜோதிடர் சொல்கிறார்:


விஜய், கடக ராசி, பூசம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். ராசியில் சந்திரனுடன், செவ்வாய் அமர்ந்திருக்கிறார். செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலும் ஆட்சி பெற்ற சந்திரன் உடன் அமர்ந்திருப்பதால், நீச்ச பங்க ராஜயோக அமைப்பு உள்ளது. எனவே தான் தைப்பூசம் நாளில் கட்சி பெயரை பதிவு செய்ய கொடுத்துள்ளார். நீச்ச பங்க ராஜ யோக அமைப்பை பெற்றவர்களுக்கு திடீர்அரசாளும் யோகம் தேடி வரும்.

ராசி லக்னப்படி கும்ப ராசியில் சனி கோச்சாரத்தில் சஞ்சரிக்கும் நேரத்தில் அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். அஷ்டமத்து சனி காலத்தில் கட்சி பெயரை அறிவித்தாலும், விஜய் முழுமையான அரசியல்வாதியாக மாற இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதை மனதில் வைத்து தான், 2026 சட்டசபைதேர்தலில் போட்டியிடுவதாக கூறியுள்ளார்.

வரும் சட்டசபை தேர்தல் நேரத்தின் போது, கடக ராசியில் ஜென்ம குருவாக பயணம் செய்வார் குரு பகவான். விஜய்க்கு 49 வயதாகிறது. 2026ல், 52வது வயதில் இருந்து முழு அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வார். 2031ல்இவருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us