sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

ப்ரீமியம்

/

வீராணம் ஏரி நீரால் நோய்கள் ஏற்படுமா?: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

/

வீராணம் ஏரி நீரால் நோய்கள் ஏற்படுமா?: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

வீராணம் ஏரி நீரால் நோய்கள் ஏற்படுமா?: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

வீராணம் ஏரி நீரால் நோய்கள் ஏற்படுமா?: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்


ADDED : ஜன 11, 2024 01:02 AM

Google News

ADDED : ஜன 11, 2024 01:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'வீராணம் ஏரியில் நச்சுக் கழிவுகள் கலந்திருப்பதால், மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் தீங்கு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்' என, ஒரு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், 'ஏரி நீரை சுத்திகரித்து தருவதால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை' என, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே, வீராணம் ஏரி உள்ளது. இதற்கு காவிரி கொள்ளிடம் கீழணையில் இருந்து, வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது.

ஆய்வு கட்டுரை


சென்னை மாநகரின் குடிநீர் தேவையை தீர்ப்பதில், வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

வீராணம் ஏரி குறித்து, ஜன., 2ல் ஐரோப்பாவில் வெளியாகும், 'ஸ்பிரிங் நேச்சர்' என்ற அறிவியல் இதழில், ஒரு ஆய்வு கட்டுரை வெளியானது.

சென்னை பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் மாநிலக் கல்லுாரி ஆகியவை இணைந்து, 2018 ஆக., முதல் 2019 மார்ச் வரை, வீராணம் ஏரியின் ஆறு வெவ்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டன.

பின்லாந்து


அதில், 10 விதமான நீல பச்சை பாசி எனப்படும், 'சயனோ பாக்டீரியா'க்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து, சென்னை பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ஏழுமலை கூறியதாவது:

நீல பச்சை பாசிகள் குறித்து ஆய்வு செய்கிறோம். பின்லாந்து நாட்டில் பேராசிரியை கரீனா சிவானென் என்பவரும், பாசிகள் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுஉள்ளார்.

அவரை சந்திக்க, பின்லாந்து சென்றோம். அங்கு உள்ள கடலில் ஆய்வுகளை மேற்கொள்ள எங்களை படகில் அழைத்துச் சென்றார். அந்தப் படகை கடலில் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி ஆய்வு செய்யலாம். அதற்கான

சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஏரியின் அருகில் உள்ள வயல்களில் உரங்களை போடுவதால் நச்சு உருவாகிறது.

'மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவதற்கு உலக சுகாதார நிறுவனம் என்னென்ன பரிந்துரைகளை வழங்கியுள்ளதோ, அந்த தரத்தின் அடிப்படையிலே நீரை சுத்திகரித்து கொடுக்கிறோம். ஏரி நீரை அப்படியே கொடுப்பதில்லை. அந்த வகையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பான நீர் வழங்கப்படுகிறது' என்றார்.

'நீரை சுத்திகரித்து தான் கொடுக்கிறோம்!'



- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us